பதிவேற்றுவது எப்படி?
வழக்கமாக நாம் பிளாக்கில் ஒரு வீடியோவை
பதிவேற்ற வேண்டுமானால் அந்த வீடியோவானது
100 எம்.பிக்குள் தான் இருக்கவேண்டும். ஆனால்
இப்போது நாம் 100 எம்.பிக்கும் அதிகஅளவுள்ள
வீடியோவை எப்படி பிளாக்கில் பதிவேற்றலாம்
என பார்க்கலாம். முதலில் நீங்கள் பதிவேற்ற
வேண்டிய வீடியோவை 3GP கன்வர்டர் மூலம்
மாற்றிக்கொள்ளுங்கள். 3GP மூலம் வீடியோவை
3GP மூலம் வீடியோவை மாற்றுவது மூலம்
உங்கள்வீடியோவானது MB அளவில் மிகவும்
குறைந்துவிடும். ஆனால் வீடியோவின் தரமோ -
ஒலியோ எதுவும் குறையாது. மாற்றப்பட்ட
வீடியோ பதிவை பிளாக்கில் உள்ள வீடியோ ச்
சேர் மூலம் பிளாக்கில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்.
நான் இங்கு வீடியோவில் பதிவேற்றியுள்ள
பாடலை பாருங்கள்.
இதை 3 GP யில் பதிவேற்றியவுடன் இதன்
அளவானது 10 எம்பி அளவில் சுருங்கிவிட்டது.
என்னால் இதை சுலபமாக பதிவேற்ற முடிந்தது.
மசாலா பாடல்கள் நாமும் செய்யலாமே
என்று நான் இந்த பாடலை முயற்சி செய்தேன்.
(நண்பரிடம் இந்த பாடலின் வீடியோவை
காண்பித்தபோது நான் தான் இதை செய்தேன்
என்றால் நம்பவிலலை.அவனுக்காக பாடலின்
இடையே அவனும் நானும் கலந்துகொண்ட
கோயிலின் கும்பாபிஷேகத்தை
இடையில் சேர்த்துள்ளேன். இதன்பிறகே
அவன் நம்பினான்.) மசாலா பாடல்கள் எப்படி
உருவாக்குவது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.
700 எம்பி உள்ள ஒரு வீடியோ படமானது
இதன் மூலம் சுமார் 90 எம்பி அளவுக்கு
குறைந்துவிடுகின்றது. நாம் படத்தை சுலபமாக
பிளாக்கில் பதிவேற்றலாம். முயன்றுதான்
பாருங்களேன்.
பதிவை படித்துப்பாருங்கள் . பிடித்திருந்தால்
ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நீங்கள் பைல்களை கணிணியில் பதிவ
தற்கு முன்னர் அதன் கொள்ளளவை
தெரிந்துகொள்ளுங்கள். அதுபோல்
Drive -ன் கொள்ளளவையும் தெரிந்து
கொண்டு அதிக காலியிடம் உள்ள
Drive -ல் பைல்களை பதிவிடுங்கள்.