Showing posts with label photoshop.photoshop tricks.photoshop tutorial.velan.design.வேலன். Show all posts
Showing posts with label photoshop.photoshop tricks.photoshop tutorial.velan.design.வேலன். Show all posts

வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர

இன்றைய பதிவில் புகைப்படங்களில் விதவிதமான வித்தியாசமான டிசைன்கள் சேர்ப்பது பற்றி பார்க்கலாம்.அதற்கு முன்னர் போட்டோ சம்பந்தமான தொடர்ந்த பதிவுகளுக்கு நீங்கள் வழங்கிவரும் மகத்தான ஆதரவுக்கு நன்றி...இந்தவாரமும் போட்டோக்களை பற்றிய பதிவுகளை பார்த்துவிட்டு வேறு சாப்ட்வேர்களை பற்றி பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.போர் அடித்தால் சொல்லுங்கள் ...வேறு பதிவுகளை பதிவிடுகின்றேன்.சரி ...இன்றைய சாப்ட்வேர் பற்றி பார்ககலாம். இது புகைப்படத்தில் விதவிதமான லைட்களின் டிசைன்களை கொண்டுவரலாம்.6 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.                                                                      
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
இதில் 15 டூல்கள் இருக்கும். ஒவ்வொரு டூல்களுக்கும் 10 எபெக்ட் இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எபெக்ட் கிளிக் செய்து ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Open என்பதை கிளிக் செய்து கணிணியில்இருந்துஉங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நடிகை புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இவரை தேர்வு செய்ததும் வலதுபுறம் உள்ள டூல்களில் முதலில் உள்ளதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதில் உள்ள 10 டிசைன்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ - அட டிசைனை சொன்னேன்னுங்க - அதை கிளிக் செய்யுங்கள்.நான் கீழே உள்ள டிசைனை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது இதில் Change  Color என்பதில் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வேண்டிய கலரினை தேர்ந்தெடுத்து ஒ.கே. கொடுத்து பின்னர் அப்ளை கிளிக்செய்யவும். நீங்கள் தேர்வு செய்த கலருக்கு படத்தின் டிசைன் மாறிவிடும்.
இதிலேயே Dream A என்கின்ற டூலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் புகைப்பட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதைப்போலவே இதிலேயே Weather என்கின்ற டூல் உள்ளது. மேகத்தின நடுவில் புகைப்படம் வருவது போல் .மிக அருமையாக உள்ளது.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
சிலர வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மேலும் சில டிசைன்கள் கீழே:-
மேலே உள்ள புகைப்படத்தில 10 ஆவதாக உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து அதை கலர் மாற்றியபின்வந்த புகைப்படம் கீழே:-
மற்றோரு டிசைன் கீழே:-

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நைட் மேட்ச் பார்த்துட்டு தூக்கம் ஜம்முனு வருது...டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...