Showing posts with label quiz.desktop.velan.free software.game.education.endhiran.rajinikanth.sivaji.film.windows xp.. Show all posts
Showing posts with label quiz.desktop.velan.free software.game.education.endhiran.rajinikanth.sivaji.film.windows xp.. Show all posts

வேலன்-கேள்வி-பதில் தயாரிக்கலாம் வாங்க



கல்வி சம்பந்தமான இந்த சாப்ட்வேர் மிக அருமையாக உள்ளது.ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுத்து அதில் சரியான விடையை தேர்வு செய்ய சொல்வார்கள். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரில் ஒரு கேள்விக்கு நான்குவிதமான பதில்களை கொடுத்து சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.இதில் சிறப்பு என்ன வென்றால் நாமே கேள்வியை தயாரிக்கலாம்.முதலில் 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் வரும் விண்டோவில் மொழியை தேர்வு செய்யவும். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள பிளேயர் தேர்வு செய்யவும்.விளையாடுபவர்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
வரும் கட்டத்தில் கிளிக் செய்யவும.உங்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் வரு ம்.அதில சரியான விடை எதுவோ அதை கிளிக்செய்யவும்.
உங்களது விடை சரியாக இருந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விடை தவறாக இருந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பொதுவான கேள்விகளாக மொத்தம் 156 கேள்விகள் தொகுத்து வைத்துள்ளார்கள். சரி..இப்போது நாம் நமது சொந்த கேள்விகளை எப்படி இணைப்பது?பொது அறிவுக்கு சரி..படிக்கும் குழந்தைகளுக்கு பாட சம்பந்தமான கேள்வி பதில்களை எப்படி இதில் இணைப்பது.  என யோசித்து இந்த சாப்ட்வேரை நோண்டும் சமயம் அதற்கான விடை கிடைத்தது. மனம் மகிழ்ந்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என அதற்கான தொழில்நுட்ப ரகசியத்தை இங்கு சொல்கின்றேன். நீங்கள் சி-டிரைவ் செல்லுங்கள். Games என்பதனை கிளிக் செய்யுங்கள்.அதில Quiz-tac-toe எங்கே இருக்கின்றது என்று பாருங்கள்.அதையும் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ள Question English என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில முதலில கேள்வியும் பிறகு வரிசையாக விடைகளும இருக்கும். இதில உங்கள் சொந்த கேள்வியையும் அதற்கான விடையையும் நாமே தட்டச்சு செய்து சேர்க்கலாம்..இதில சரியான விடையாக x= என்பதின் எதிரில விடைக்கான எண் எதுவோ அதை குறிப்பிடுங்கள்.(புரிவதற்கு சற்று சிரமாக இருப்பவர்கள் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்) கீழே உள்ள விண்டோ உங்களுக்கு எளிதில் புரியும்.
இதில் லைன் 2 வில் சமீபத்திய ரஜினி படம் எது என கேட்டுள்ளேன். அதற்கான விடைகளாக எந்திரன்.சந்திரமுகி.சிவாஜி.குசேலன் என நான்கு விடைகளை கொடுத்துள்ளேன் சரியான விடை எந்திரன் என்று உங்களுக்கு தெரியும். எனவே x=1 என்று கீழே கொடுத்துள்ளேன். இதனை தட்டச்சு செய்து முடித்ததும் நோட்பேடை முடிவிடவும். மாற்றங்கள் சேமிக்கவா என கேட்கும். யெஸ் என்று சொல்லிவிடுங்கள். இப்போது மீண்டும் இந்த Quiz புரோகிராமை இயக்கவும்.நாம் மாற்றம் செய்த கேள்வி - பதில் படி கேட்ட கேள்வி கீழ்கண்டவாறு விண்டோவில் வரும்.
சரியாக விடைக்கான கட்டத்தில் கிளிக் செய்ய உங்களுக்கு விடை வரும்.எளிய புரிதலுக்காக ரஜினி சார் படம் பெயரை குறிப்பிட்டுள்ளேன்.எனது பதிவின் வாசகர்களாக பல ஆசிரியர்களும்.தலைமை ஆசிரியர்களும்.முதல்வர்களும் உள்ளனர்.ஆசிரியர்கள் அவர்கள் பாடத்தில் வரும் ஓரே கேள்விக்கு நான்கு பதில்கள் வரும் வினாக்களை தேர்வு செய்து இந்த ப்ரோகிராமில் பதிவு செய்துவிட்டால் மாணவர்கள் படிக்கும் சமயம் அவர்கள் மனதில் எளிதில பதியும். ஒரு முறை நாம் பதிவு செய்தால் போதுமானது. அந்த வகுப்பு புத்தகங்கள் மாறும் வரை இதனை பயன்படுத்தலாம்.நேர்முக தேர்வு மற்றும் அரசு தேர்வு எழுதுபவர்களும் இதனை பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...