வேலன்-கேள்வி-பதில் தயாரிக்கலாம் வாங்க



கல்வி சம்பந்தமான இந்த சாப்ட்வேர் மிக அருமையாக உள்ளது.ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுத்து அதில் சரியான விடையை தேர்வு செய்ய சொல்வார்கள். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரில் ஒரு கேள்விக்கு நான்குவிதமான பதில்களை கொடுத்து சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.இதில் சிறப்பு என்ன வென்றால் நாமே கேள்வியை தயாரிக்கலாம்.முதலில் 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் வரும் விண்டோவில் மொழியை தேர்வு செய்யவும். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள பிளேயர் தேர்வு செய்யவும்.விளையாடுபவர்கள் பெயரை தட்டச்சு செய்யவும்.
வரும் கட்டத்தில் கிளிக் செய்யவும.உங்களுக்கு கீழ்கண்ட கேள்விகள் வரு ம்.அதில சரியான விடை எதுவோ அதை கிளிக்செய்யவும்.
உங்களது விடை சரியாக இருந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
விடை தவறாக இருந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பொதுவான கேள்விகளாக மொத்தம் 156 கேள்விகள் தொகுத்து வைத்துள்ளார்கள். சரி..இப்போது நாம் நமது சொந்த கேள்விகளை எப்படி இணைப்பது?பொது அறிவுக்கு சரி..படிக்கும் குழந்தைகளுக்கு பாட சம்பந்தமான கேள்வி பதில்களை எப்படி இதில் இணைப்பது.  என யோசித்து இந்த சாப்ட்வேரை நோண்டும் சமயம் அதற்கான விடை கிடைத்தது. மனம் மகிழ்ந்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என அதற்கான தொழில்நுட்ப ரகசியத்தை இங்கு சொல்கின்றேன். நீங்கள் சி-டிரைவ் செல்லுங்கள். Games என்பதனை கிளிக் செய்யுங்கள்.அதில Quiz-tac-toe எங்கே இருக்கின்றது என்று பாருங்கள்.அதையும் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ள Question English என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில முதலில கேள்வியும் பிறகு வரிசையாக விடைகளும இருக்கும். இதில உங்கள் சொந்த கேள்வியையும் அதற்கான விடையையும் நாமே தட்டச்சு செய்து சேர்க்கலாம்..இதில சரியான விடையாக x= என்பதின் எதிரில விடைக்கான எண் எதுவோ அதை குறிப்பிடுங்கள்.(புரிவதற்கு சற்று சிரமாக இருப்பவர்கள் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்) கீழே உள்ள விண்டோ உங்களுக்கு எளிதில் புரியும்.
இதில் லைன் 2 வில் சமீபத்திய ரஜினி படம் எது என கேட்டுள்ளேன். அதற்கான விடைகளாக எந்திரன்.சந்திரமுகி.சிவாஜி.குசேலன் என நான்கு விடைகளை கொடுத்துள்ளேன் சரியான விடை எந்திரன் என்று உங்களுக்கு தெரியும். எனவே x=1 என்று கீழே கொடுத்துள்ளேன். இதனை தட்டச்சு செய்து முடித்ததும் நோட்பேடை முடிவிடவும். மாற்றங்கள் சேமிக்கவா என கேட்கும். யெஸ் என்று சொல்லிவிடுங்கள். இப்போது மீண்டும் இந்த Quiz புரோகிராமை இயக்கவும்.நாம் மாற்றம் செய்த கேள்வி - பதில் படி கேட்ட கேள்வி கீழ்கண்டவாறு விண்டோவில் வரும்.
சரியாக விடைக்கான கட்டத்தில் கிளிக் செய்ய உங்களுக்கு விடை வரும்.எளிய புரிதலுக்காக ரஜினி சார் படம் பெயரை குறிப்பிட்டுள்ளேன்.எனது பதிவின் வாசகர்களாக பல ஆசிரியர்களும்.தலைமை ஆசிரியர்களும்.முதல்வர்களும் உள்ளனர்.ஆசிரியர்கள் அவர்கள் பாடத்தில் வரும் ஓரே கேள்விக்கு நான்கு பதில்கள் வரும் வினாக்களை தேர்வு செய்து இந்த ப்ரோகிராமில் பதிவு செய்துவிட்டால் மாணவர்கள் படிக்கும் சமயம் அவர்கள் மனதில் எளிதில பதியும். ஒரு முறை நாம் பதிவு செய்தால் போதுமானது. அந்த வகுப்பு புத்தகங்கள் மாறும் வரை இதனை பயன்படுத்தலாம்.நேர்முக தேர்வு மற்றும் அரசு தேர்வு எழுதுபவர்களும் இதனை பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

35 comments:

erodethangadurai said...

மிக நல்ல software. கம்ப்யூட்டர் விளையாட கேட்கும் குழந்தைகளுக்கு நல்ல பயனுள்ள விளையாட்டை தந்துள்ளிர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

மிகவும் நல்ல அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்

Athiban said...

அருமை.

Chitra said...

So, which one is the latest Rajini film? ha,ha,ha,ha,ha....

Download Gprs said...

கலக்கிடீங்க..வேலன் சார்....வாழ்த்துக்கள்

Suni said...

Vow very nice

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

மாணவன் said...

சூப்பர் வேலன் சார்,
மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்த்துகொள்ள நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி...

dharumaidasan said...

MIGA NALA PAYUNULLA SOFTWARE . IT IS VERY USEFUL TO TEACHERS AND STUDENTS FOR THIER EDUCATION IMPROVEMENT STUDIES SIR.
THANK U ONCE AGAIN.LET ME KNOW HOW I FORWARD THIS MESSAGE PAGE OR UR THIS WEB SITE TO MY FRINEDS AND RELATIVES SIR. LET ME KNOW
WITH REGARDS
DHARUMAIDASAN
HYDERBAD

Free computer tips said...

Most useful post

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! நன்றி!

STORE SRINIVASAN said...

sir., super softwear thank you

முத்து said...

பாஸ் இந்த சாப்ட்வேர் கொண்டு ப்ளோகில் கேள்வி பதில் கேட்க முடியுமா?முடியும் என்றால் எப்படி ப்ளீஸ்.

ss said...

ஆசிரியர் பயன்படுதிய கம்ப்யூட்டரிலிருந்து மாணவன் பயன்படுதிய கம்ப்யூட்டருக்கு ஆசிரியர் சேவ் செய்த டேட்டாவுடன் இதனை எப்படி transfer செய்வது.

கோகுலன் said...

மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய மிகவும் பயனுள்ள software.வாழ்த்துக்கள்.
கோகுலன்,
தலைமை ஆசிரியர்.

Unknown said...

பயனுள்ள பகிர்வு

வேலன். said...

ஈரோடு தங்கதுரை கூறியது...
மிக நல்ல software. கம்ப்யூட்டர் விளையாட கேட்கும் குழந்தைகளுக்கு நல்ல பயனுள்ள விளையாட்டை தந்துள்ளிர்கள். வாழ்த்துக்கள்.
ஃஃ

நன்றி தங்கதுரை சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

JOE2005 கூறியது...
மிகவும் நல்ல அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
அருமைஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
So, which one is the latest Rajini film? ha,ha,ha,ha,ha.ஃஃ

சகோதரி அது எவ்வளவு கஷ்டமான கேள்வி தெரியுமா?
தங்கள் வருகைக்கும ்கருத்து்க்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

Praveen-Mani கூறியது...
கலக்கிடீங்க..வேலன் சார்....வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி மணி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sunitha கூறியது...
Vow very nice

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/


நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
சூப்பர் வேலன் சார்,
மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்த்துகொள்ள நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்
பகிர்ந்தமைக்கு நன்றி...
ஃஃ

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan கூறியது...
MIGA NALA PAYUNULLA SOFTWARE . IT IS VERY USEFUL TO TEACHERS AND STUDENTS FOR THIER EDUCATION IMPROVEMENT STUDIES SIR.
THANK U ONCE AGAIN.LET ME KNOW HOW I FORWARD THIS MESSAGE PAGE OR UR THIS WEB SITE TO MY FRINEDS AND RELATIVES SIR. LET ME KNOW
WITH REGARDS
DHARUMAIDASAN
HYDERBADஃ

நன்றி சார்..தங்கள் வருகைக்கும வாழ்ததுக்கும் கருத்துக்கும் உதவிக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

computer கூறியது...
Most useful postஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மிக நன்றாக உள்ளது! நன்றி!

நன்றி எஸ்.கே.சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

STORE SRINIVASAN கூறியது...
sir., super softwear thank you


நன்றி ஸ்ரீநிவாசன் சார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் ந்னறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முத்து கூறியது...
பாஸ் இந்த சாப்ட்வேர் கொண்டு ப்ளோகில் கேள்வி பதில் கேட்க முடியுமா?முடியும் என்றால் எப்படி ப்ளீஸ்ஃ

முடியும் அதற்கு வேறு புரோகிராம்...தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன.

வேலன். said...

ss கூறியது...
ஆசிரியர் பயன்படுதிய கம்ப்யூட்டரிலிருந்து மாணவன் பயன்படுதிய கம்ப்யூட்டருக்கு ஆசிரியர் சேவ் செய்த டேட்டாவுடன் இதனை எப்படி transfer செய்வது.

மாணவர் கம்யுட்டரில் முதலில் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிடவும். பின்னர் ஆசிரியர் தயாரித்த கேள்வி நோட்பேடை காப்பி செய்து மாணவர் நோட்பேடில் அவருடையதை எடுத்துவிட்டு உங்களது நோட்பேடை பேஸ்ட் செய்யவேண்டும்.அவ்வளவு தான் உங்கள் கேள்விபதில்கள் அவருடைய கணிணியில் சரியாக வந்துவிடும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன.

வேலன். said...

கோகுலன் கூறியது...
மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய மிகவும் பயனுள்ள software.வாழ்த்துக்கள்.
கோகுலன்,
தலைமை ஆசிரியர்.

நன்றி ஆசிரியரே..இதுபோல் மாணவர்களுக்கு பயன்படும் இன்னும் நிறைய சாப்ட்வேர்கள் பதிவிட என்னிடம் உள்ளது. அடிக்கடி வாருங்கள். மாணவர்களுக்கு டவுண்லோடு செய்து தாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிநேகிதி கூறியது...
பயனுள்ள பகிர்வுஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

முத்து said...

முத்து கூறியது...
பாஸ் இந்த சாப்ட்வேர் கொண்டு ப்ளோகில் கேள்வி பதில் கேட்க முடியுமா?முடியும் என்றால் எப்படி ப்ளீஸ்ஃ

முடியும் அதற்கு வேறு புரோகிராம்...தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன.////////////////


அதை பற்றி அடுத்து பதிவில் தெளிவாக போடவும் நன்றி

வேலன். said...

முத்து கூறியது...
முத்து கூறியது...
பாஸ் இந்த சாப்ட்வேர் கொண்டு ப்ளோகில் கேள்வி பதில் கேட்க முடியுமா?முடியும் என்றால் எப்படி ப்ளீஸ்ஃ

முடியும் அதற்கு வேறு புரோகிராம்...தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன.////////////////


அதை பற்றி அடுத்து பதிவில் தெளிவாக போடவும் நன்றி
ஃஃ

நன்றி முத்து சார்..
வாழ்க வளமுடன்.
வேலன.

கலீலுர் ரஹ்மான் said...

இதில் நீங்கள் சொன்ன ஃபோல்டரில் Question Creator.exe என்று இருக்கிறது. அதனை கிளிக் செய்து சுலபமாக புதிய கேள்விகளை அமைக்கலாம்.

வேலன். said...

கலீலுர் ரஹ்மான் கூறியது...
இதில் நீங்கள் சொன்ன ஃபோல்டரில் Question Creator.exe என்று இருக்கிறது. அதனை கிளிக் செய்து சுலபமாக புதிய கேள்விகளை அமைக்கலாம்.
//

தங்கள் தகவலுக்கு நன்றி பாரக்கின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

நான் நலம். நீங்கள் நலமா? வாழ்க வளமுடன்.

Related Posts Plugin for WordPress, Blogger...