Showing posts with label slide share.velan.velang.free software.power point.windows xp.power point tips.help.blogger. Show all posts
Showing posts with label slide share.velan.velang.free software.power point.windows xp.power point tips.help.blogger. Show all posts

வேலன்:-பிளாக்கில் பவர்பாயிண்ட்-ஐ பதிவேற்றம் செய்ய



நம்மிடம் உள்ள புகைப்படங்களை நாம் பவர்பாயிண்ட்டில்
பதிவுசெய்து அதை பிளாக்கில் எப்படி பதிவேற்றுவது என
இன்று பார்க்கலாம். உங்களுக்கான பவர்பாயிண்ட்
பிரசன்டேஷனை தயார்செய்து கொள்ளுங்கள். அடுத்து
அதை பதிவேற்ற இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.

நீங்கள் அடிக்கடி பதிவேற்றுபவர்களாக இருந்தால்
இதில் உறுப்பினராகுங்கள். அல்லது எப்போதாவது
பதிவேற்றுபவராக இருந்தால் விருந்தினர் கணக்கை
துவங்குங்கள்.இதில் உள்ள UPLOAD கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
அதில் உள்ள Single Upload என்பதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் Presentation File என்பதில் உங்கள் கணிணியில் உள்ள
பைலை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள Titleஎன்பதில்
உங்கள் படைப்பின் பெயரையும் Description-ல் விவரங்களையும்
தட்டச்சு செய்யுங்கள்.  Tags-தேவையானதை தட்டச்சு
செய்யுங்கள்.கீழே உள்ள அனைத்து விவரங்களையும்
பூர்த்தி செய்து இறுதியில் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.
சிறிது நேரம் காத்திருங்கள். உங்களுக்கு கீழ் கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
சிறிதுநேர காத்திருத்தலுக்கு பின் நீங்கள் லேட்டஸ்ட் கிளிக்
செய்தால் உங்களுக்கு மற்றும் ஓரு விண்டோ ஓப்பன்
ஆகும். அதில் உங்கள் பதிவை தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலப்புறம்
உள்ள Embed தேர்வு செய்யுங்கள்.



அதை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கை திறந்து
அதில் உள்ள HTML ஐ திருத்து கிளிக் செய்து அதில்
அந்த கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

இறுதியாக சேமித்து இடுகையை வெளியிடுங்கள். அவ்வளவு
தான் உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் உங்கள்
பிளாக்கில் வரும்.
நான் பவர்பாயிண்ட்டில் செய்த பிரசன்டேஷனை அடுத்து
வெளியிடுகின்றேன்.


வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
அட கஷ்ட காலமே...இன்னாது இது...?


இன்றைய PSD டிசைன்-42 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யுங்கள்.


பிளாக்கில் பவர்பாயின்ட் பிரசன்டேஷன்செய்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...