நம்மிடம் உள்ள புகைப்படங்களை நாம் பவர்பாயிண்ட்டில்
இன்று பார்க்கலாம். உங்களுக்கான பவர்பாயிண்ட்
பிரசன்டேஷனை தயார்செய்து கொள்ளுங்கள். அடுத்து
அதை பதிவேற்ற இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் உறுப்பினராகுங்கள். அல்லது எப்போதாவது
பதிவேற்றுபவராக இருந்தால் விருந்தினர் கணக்கை
துவங்குங்கள்.இதில் உள்ள UPLOAD கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Presentation File என்பதில் உங்கள் கணிணியில் உள்ள
பைலை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள Titleஎன்பதில்
உங்கள் படைப்பின் பெயரையும் Description-ல் விவரங்களையும்
தட்டச்சு செய்யுங்கள். Tags-தேவையானதை தட்டச்சு
செய்யுங்கள்.கீழே உள்ள அனைத்து விவரங்களையும்
பூர்த்தி செய்து இறுதியில் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.
சிறிது நேரம் காத்திருங்கள். உங்களுக்கு கீழ் கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
சிறிதுநேர காத்திருத்தலுக்கு பின் நீங்கள் லேட்டஸ்ட் கிளிக்
செய்தால் உங்களுக்கு மற்றும் ஓரு விண்டோ ஓப்பன்
ஆகும். அதில் உங்கள் பதிவை தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலப்புறம்
உள்ள Embed தேர்வு செய்யுங்கள்.
அதை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கை திறந்து
அதில் உள்ள HTML ஐ திருத்து கிளிக் செய்து அதில்
அந்த கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
தான் உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் உங்கள்
பிளாக்கில் வரும்.
நான் பவர்பாயிண்ட்டில் செய்த பிரசன்டேஷனை அடுத்து
வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
அட கஷ்ட காலமே...இன்னாது இது...?
இன்றைய PSD டிசைன்-42 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யுங்கள்.
பிளாக்கில் பவர்பாயின்ட் பிரசன்டேஷன்செய்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
16 comments:
அன்பின் வேலன் - பல தடவை முயன்று சீச்சீ இப்பழம் புளிக்கும் என கைவிட்ட முயற்சி - நன்றி பகிர்வினிற்கு
நல்வாழ்த்துகள் வேலன்
cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன் - பல தடவை முயன்று சீச்சீ இப்பழம் புளிக்கும் என கைவிட்ட முயற்சி - நன்றி பகிர்வினிற்கு
நல்வாழ்த்துகள் வேலன்//
நான் முயற்சிசெய்தேன் நன்றாக வந்தது.அடுத்து இதில் தயார்செய்த பிரசன்டேஷனை பதிவிடுகின்றேன் பாருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார் அவர்களே்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நீண்ட நாட்களாக இணையத்தில் தேடிய தகவல் நண்பரே...
பவர்பாய்ண்டை வேறு சேமிப்புத் தளங்களில் சேமித்து
அதன் யுஆர்எல் கொடுப்பதா?
பவர்பாய்ண்டை வீடியோவாக்கி யுடியுப்பில் பதிந்து ஸ்கிரிப்டை வலைப்பதிவில் இடுவதா ?
எனப் பலவாறு சிந்தித்துக்கொண்டிருந்த வேலையில் மிகவும் விளக்கமாகவும் பயன்தரும் வகையிலும் தங்கள் பதிவு அமைந்தது
மகிழ்ச்சி!!!!!!!!
மிகவும் அருமை நண்பரே!
thank you again
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
நீண்ட நாட்களாக இணையத்தில் தேடிய தகவல் நண்பரே...
பவர்பாய்ண்டை வேறு சேமிப்புத் தளங்களில் சேமித்து
அதன் யுஆர்எல் கொடுப்பதா?
பவர்பாய்ண்டை வீடியோவாக்கி யுடியுப்பில் பதிந்து ஸ்கிரிப்டை வலைப்பதிவில் இடுவதா ?
எனப் பலவாறு சிந்தித்துக்கொண்டிருந்த வேலையில் மிகவும் விளக்கமாகவும் பயன்தரும் வகையிலும் தங்கள் பதிவு அமைந்தது
மகிழ்ச்சி!!!!!!!ஃஃ
நன்றி குணசீலன் அவர்களே...உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை நண்பரே..
நன்றி ரமேஷ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Dr.Rudhran கூறியது...
thank you againஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பயன் தரும் பதிவு,பகிர்வுக்கு நன்றிங்க.
அன்புடன் மஜீத்.
fantastic
good work
யூர்கன் க்ருகியர் கூறியது...
good!//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பெயரில்லா கூறியது...
fantastic
good work//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி வேலன். எனது இப்பதிவைப் பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2010/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பகிர்வு. என்னைப் போன்ற வலைப்பூவிற்கு புதியவர்களுக்கு இது போன்ற பதிவுகள் ஒரு வரப் பிரசாதம்.
dondu(#11168674346665545885) கூறியது...
நன்றி வேலன். எனது இப்பதிவைப் பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2010/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்ஃஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..தங்கள் பதிவினை நான் பார்த்திருக்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ரிஷபன் கூறியது...
நல்ல பகிர்வு. என்னைப் போன்ற வலைப்பூவிற்கு புதியவர்களுக்கு இது போன்ற பதிவுகள் ஒரு வரப் பிரசாதம்.ஃ
நன்றி நண்பர் ரிஷபன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment