
அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே..
.வரும் ஜீன் மாதம் 23 லிருந்து 27 வரை (23.06.2010 முதல் 27.06.2010 வரை) தமிழ் இணைய மாநாடு கோவையில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்ததே...அந்த மாநாட்டுக்கு நாம் பதிவுலகில் எழுதிவரும் யார்வேண்டுமானாலும் தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் தமிழில் பிளாக்கர்கள் உள்ளனர் என்பதும் அவர்களாளும் அருமையான கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்பதும் அறிய வைக்கலாம்.தமிழில் நாம் விரிவாக எழுதும் தொழில்நுட்ப கட்டுரையாகட்டும் -கணிணிசார்ந்த எந்த கட்டுரையாக இருந்தாலும் அதனை அனுப்பிவைக்க வேண்டுகின்றேன்.தமிழ் பதிவுலகம் என்பது இணைய உலகில் தவிர்க்கமுடியாத ஊடக பெருவெளியாக திகழ்வதை எவராலும் மறுக்க இயலாது. குறிப்பாக தமிழில் தொழில்நுட்பம் குறித்தும் இணையம் மற்றும் கணினி சார்ந்த பல சிறப்பான கட்டுரைகள் நமது சக பதிவர்கள் எழுதி வருவது உலகளவில் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஒரு சில பத்திரிகைகள் கூட இது போன்ற சிறப்பான கட்டுரைகளை தங்களது இதழ்களில் பிரசுரித்து பதிவர்களை கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பதிவுலக வட்டத்தில் நமது சக பதிவர்களில் எவருடைய படைப்பாவது இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் வகையில் நமது இருப்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது பதிவர்கள் அனைவருக்கும் ஓர் சிறந்த அங்கீகாரமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே வலைப்பதிவு அன்பர்கள் நீங்கள் எழுதும் எந்த பதிவாக இருந்தாலும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். நீங்கள் உங்கள் கட்டுரையின் முன்னேட்டம் மட்டும் நாளைக்குள் (25.02.2010)அனுப்பிவைத்தால் போதும். விரிவான கட்டுரையை சமர்பிக்க கால அவகாசம் உள்ளது. முகவரி தளம்:- http://tamilinternetconference.blogspot.com/
உங்கள் கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி:- ti2010-cpc@infitt.org
எனவே பதிவுலக நண்பர்கள் கட்டுரையை இன்றே - இப்போழுதே அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்