வேலன்:-பதிவர்களும் தமிழ்இணைய மாநாடும்.

http://www.infitt.org/ti2010/ti2010_hdtamil.jpg


அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே..
.வரும் ஜீன் மாதம் 23 லிருந்து 27 வரை (23.06.2010 முதல் 27.06.2010 வரை) தமிழ் இணைய மாநாடு கோவையில் நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்ததே...அந்த மாநாட்டுக்கு நாம் பதிவுலகில் எழுதிவரும் யார்வேண்டுமானாலும் தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் தமிழில் பிளாக்கர்கள் உள்ளனர் என்பதும் அவர்களாளும் அருமையான கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும் என்பதும் அறிய வைக்கலாம்.தமிழில் நாம் விரிவாக எழுதும் தொழில்நுட்ப கட்டுரையாகட்டும் -கணிணிசார்ந்த எந்த கட்டுரையாக இருந்தாலும் அதனை அனுப்பிவைக்க வேண்டுகின்றேன்.தமிழ் பதிவுலகம் என்பது இணைய உலகில் தவிர்க்கமுடியாத ஊடக பெருவெளியாக திகழ்வதை எவராலும் மறுக்க இயலாது. குறிப்பாக தமிழில் தொழில்நுட்பம் குறித்தும் இணையம் மற்றும் கணினி சார்ந்த பல சிறப்பான கட்டுரைகள் நமது சக பதிவர்கள் எழுதி வருவது உலகளவில் பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஒரு சில பத்திரிகைகள் கூட இது போன்ற சிறப்பான கட்டுரைகளை தங்களது இதழ்களில் பிரசுரித்து பதிவர்களை கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பதிவுலக வட்டத்தில் நமது சக பதிவர்களில் எவருடைய படைப்பாவது இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் வகையில் நமது இருப்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது பதிவர்கள் அனைவருக்கும் ஓர் சிறந்த அங்கீகாரமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லைஎனவே வலைப்பதிவு அன்பர்கள் நீங்கள் எழுதும் எந்த பதிவாக இருந்தாலும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். நீங்கள் உங்கள் கட்டுரையின் முன்னேட்டம் மட்டும் நாளைக்குள் (25.02.2010)அனுப்பிவைத்தால் போதும். விரிவான கட்டுரையை சமர்பிக்க கால அவகாசம் உள்ளது. முகவரி தளம்:- http://tamilinternetconference.blogspot.com/


உங்கள் கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி:- ti2010-cpc@infitt.org
எனவே பதிவுலக நண்பர்கள் கட்டுரையை இன்றே - இப்போழுதே அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். 
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.


வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

34 comments:

சூர்யா ௧ண்ணன் said...

பங்குபெறும் பதிவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இந்த பதிவிற்கு நண்பர்கள் அனைவரும் வாக்களித்து, பலருக்கு சென்றடைய உதவுமாறு வேண்டுகிறேன்..

அன்புடன்
சூர்யா கண்ணன்

யூர்கன் க்ருகியர் said...

வெற்றி பெற/ தேர்வு பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!

சசிகுமார் said...

கலந்து கொள்ளும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வேலன் சார் உங்களுக்கும் சேர்த்துதான். நல்ல பயனுள்ள பதிவு சார்.

அண்ணாமலையான் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி

நினைவுகளுடன் -நிகே- said...

பகிர்வுக்கு நன்றி
பங்குபெறும் பதிவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

கவிதை காதலன் said...

அனைவருக்கும் உபயோகப்படும்படியான பதிவு.
நன்றி வேலன் சார்.

Varma said...

வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Chitra said...

வேலன் அண்ணாச்சி, மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா, என் பேர் போட்டு அனுப்பிடுங்க.

பங்கு பெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.

Thomas Ruban said...

கலந்து கொண்டு வெற்றிபெற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பகிர்வுக்கு நன்றி சார்.

Anonymous said...

very good article

வேலன். said...

சூர்யா ௧ண்ணன் கூறியது...
பங்குபெறும் பதிவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இந்த பதிவிற்கு நண்பர்கள் அனைவரும் வாக்களித்து, பலருக்கு சென்றடைய உதவுமாறு வேண்டுகிறேன்..

அன்புடன்
சூர்யா கண்ணன்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சூர்யா கண்ணன் சார்...
வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
வெற்றி பெற/ தேர்வு பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!ஃஃ


தங்கள் ஆசிர்வாதம் இருந்தால் அனைவரும்வெற்றி பெறுவோம். வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
கலந்து கொள்ளும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வேலன் சார் உங்களுக்கும் சேர்த்துதான். நல்ல பயனுள்ள பதிவு சார் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி குமார் சார். வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நல்ல பகிர்வுக்கு நன்றி
நன்றி அண்ணாமலைசார்...மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் கட்டுரைகளையும் அனுப்பிவையுங்கள் சார்.. வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
பகிர்வுக்கு நன்றி
பங்குபெறும் பதிவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி... வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

கவிதை காதலன் கூறியது...
அனைவருக்கும் உபயோகப்படும்படியான பதிவு.
நன்றி வேலன் சார்ஃஃ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் ் வேலன்.

வேலன். said...

Varma கூறியது...
வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்ஃ நன்றி வர்மா சார் வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
வேலன் அண்ணாச்சி, மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா, என் பேர் போட்டு அனுப்பிடுங்க.

பங்கு பெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.ஃஃ //சித்ரா தங்கச்சி... நீங்க சொல்லிதான் நான்செய்யனுமா...நான் எப்போவோ மண்டப்த்துல இருந்து எழுதிவாங்கி உங்க பேர்போட்டு அனு்ப்பிவி்ட்டேன்..அழைப்பு வரும் தவறாமல்கலந்துகொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
கலந்து கொண்டு வெற்றிபெற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

பகிர்வுக்கு நன்றி சார்//

நன்றி தாமஸ்ருபன்சார்... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
very good articleஃ

நன்றி சிரடி சார்... வாழ்க வளமுடன் வேலன்.

Thiruvattar Sindhukumar said...

இணைய மாநாட்டில் பதிவர்களின் பங்களைப்பை சிறப்பாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தாங்கள் கூறிய கருத்துக்களுக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் இம்மாநாட்டில்பதிவாகும் என நம்பலாம்.
அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்

வேலன். said...

Thiruvattar Sindhukumar கூறியது...
இணைய மாநாட்டில் பதிவர்களின் பங்களைப்பை சிறப்பாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தாங்கள் கூறிய கருத்துக்களுக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் இம்மாநாட்டில்பதிவாகும் என நம்பலாம்.
அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்//
தங்கள் பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி வாழக் வளமுடன் வேலன்.

PRAKASH said...

வணக்கம் வேலன் அண்ணா!
சமீப நாட்களாக தான் தங்களது பதிவுகளை வாசித்து வருகின்றேன். அவசியமான பயனுள்ள பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஒரு சின்ன வேண்டுகோள் என்னவெனில் தாங்கள் தங்களின் தளத்தில் இடுகையிட்ட கணணி, போடோசொப் இன்னும் பலவிதமான பதிவுகளில் வாசகர்கள் தங்களுக்கு தேவையான பதிவுகளை தேடி பெறுவதற்கு வசதியாக கூகிள் தேடுதல் பட்டையை தங்கள் தளத்தில் பொருத்தி விடுங்களேன்.

அ.பிரகாஷ்
இலங்கை,
யாழ்ப்பாணம்

Anonymous said...

I have sent an article today.

Anonymous said...

Good news. but as per http://www.infitt.org/ti2010/?page=tamil/paper&lang=tamil
article last date is mentioned as march 15 2010 to submit the summary of the contesting article.

இனியன் பாலாஜி said...

இதில் பங்கு பெறுகிற நல் உள்ளங்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள்

இனியன் பாலாஜி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Jaleela said...

ந‌ல்ல‌ முய‌ற்சி வாழ்த்துக்க‌ள்.

வேலன். said...

PRAKASH கூறியது...
வணக்கம் வேலன் அண்ணா!
சமீப நாட்களாக தான் தங்களது பதிவுகளை வாசித்து வருகின்றேன். அவசியமான பயனுள்ள பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஒரு சின்ன வேண்டுகோள் என்னவெனில் தாங்கள் தங்களின் தளத்தில் இடுகையிட்ட கணணி, போடோசொப் இன்னும் பலவிதமான பதிவுகளில் வாசகர்கள் தங்களுக்கு தேவையான பதிவுகளை தேடி பெறுவதற்கு வசதியாக கூகிள் தேடுதல் பட்டையை தங்கள் தளத்தில் பொருத்தி விடுங்களேன்.

அ.பிரகாஷ்
இலங்கை,
யாழ்ப்பாணம்ஃஃ//

விரைவில் செய்கின்றேன் பிரகாஷ் அவர்களே...தங்கள்வருகைக்கும் ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன,வேலன்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
I have sent an article today.ஃ//


நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
Good news. but as per http://www.infitt.org/ti2010/?page=tamil/paper&lang=tamil
article last date is mentioned as march 15 2010 to submit the summary of the contesting article.//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

இனியன் பாலாஜி கூறியது...
இதில் பங்கு பெறுகிற நல் உள்ளங்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள்

இனியன் பாலாஜிஃ//

நன்றி இனியன் பாலாஜி அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Bogy.in கூறியது...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in//

சேர்ந்துவிட்டேன் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

Last Date Extended
//கட்டுரைச் சுருக்கத்தினை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள்: மார்ச்சு மாதம் பதினைந்தாம் நாள்.
எங்களுடைய முடிவு உங்களுக்கு வரும் நாள்: மார்ச்சு மாதம் முப்பதாம் நாள்.
உங்களுடைய முழுக்கட்டுரை எங்களுக்கு வர வேண்டிய கடைசி நாள்: ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாள்.//

Related Posts Plugin for WordPress, Blogger...