Showing posts with label velan. Brush Tool.Rain Brush. Show all posts
Showing posts with label velan. Brush Tool.Rain Brush. Show all posts

வேலன்-புகைப்படத்தில் மழையை வரவழைக்க



எனது சென்ற பதிவான போட்டோக்களில் விதவிதமான டிசைன்கள் செய்ய என்கின்ற பதிவை குட்பிளாக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட யுத் புல்விகடனுக்கு நன்றி...
நண்பர் புதுவை.காம் மோகனகிருஷ்ணன் சென்ற போட்டோஷாப் பதிவில் இடி -மின்னல் வந்துவிட்டது மழை வருவது எப்போ-என கேட்டிருந்தார்.அதை இந்த பதிவில் பார்க்கலாம்.போட்டோஷாப்பில் உள்ளே செட்டிங்ஸ் சென்று மழை எபெக்ட் வரவழைக்கலாம். ஆனால் அதைவிட சுலபமாக இந்த பிரஷ் டூல்கொண்டு புகைப்படத்தில் மழைபெய்ய வைக்கலாம்.இந்த மழை பிரஷ் டூலை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.294 கே.பி. அளவுதான் இது.இப்போது உங்கள் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். பின்னர் பிரஷ் தேர்வு செய்யவும்.அதில் Master Diameter அருகில் உள்ள சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ வரும். .
 அதில் Load Brush கிளிக் செய்யவும் நீங்க்ள சேமித்துவைத்துள்ள பிரஷ் டூலை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள Load என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்கள் பிரஷ் டூலில் மழை பிரஷ் வந்திருக்கும். இப்போது தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
சாதாரண சமயத்தில் எடுத்தது.
அதே இடத்தில் மழை பெய்து விட்டவுடன் எடுத்த புகைப்படம் கீழே-
பிரஷ் டூலால் மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே- 
மற்றும் சாதாரணமாக ஒரு படம் கீழே
மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே-
திரு.கக்குமாணிக்கம் அவரின் புகைப்படங்கள் போடவில்லை என்று வருத்தப்பட்டார். அவரின் புகைப்படம் கீழே-
மழை எபெக்ட் கொடுத்து வந்த படம் கீழே-
உண்மையில் மழையில் எடுக்கப்பட்ட படம் கீழே-
இந்த பிரஷ்டூலில் நான்குவித மான பிரஷ் கள் உள்ளது. நமது விருப்திற்கேற்ப மழைதுளியை தேர்வு செய்யலாம். அதுபோல பிரஷ் அளவினையும் நமது விருப்பத்திற்கேற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ஹாய் ஜாலி....ஜெய்லானி எனக்கு விருது கொடுத்திருக்கார்.வாங்கறத்துக்கு நான் போகின்றேன்...நீங்களும் வரீங்களா...!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...