பிளாக்கில் நாம் படங்கள் வெளியிடுவோம்.
ஆனால் சமயத்தில் அதை பிறர் தவறாக
பயன்படுத்தலாம். அவ்வாறு அவர்கள்
தவறாக பயன்படுத்தாத வகையில் நாம்
நமது படத்தை கர்சர் மூவ் மூலம் சுலபமாக
மாற்றிவிடலாம்.இந்த பதிவில் நாம்
நமது படத்தையே வேறு ஓருவர்படமாக
மாற்றிவிடுவதை காணலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள். இந்த படத்தின் அருகே
உங்கள் கர்சர் கொண்டு செல்லுங்கள்.
இப்போது எனது படம் நண்பரின்
படமாக மாறுவதை காணலாம்.

இனி இதை எப்படி கொண்டுவருவது என
பார்க்கலாம். ஒரே மாதிரியான வெவவேறு
படங்கள் இரண்டை தேர்ந்தேடுங்கள்.
அதை ஏதாவது ஒரு சாப்ட்வேரில்
போட்டு அதனை http:// முகவரியுடன்
மாற்றிக்கொள்ளுங்கள். நான்
Photobucket.com மூலம் மாற்றிக்கொண்டேன்.
பின் நீங்கள் உங்கள் பிளாக்கில்
HTML ஐத் திருத்து கிளிக் செய்து
விண்டோவினை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து கொள்ளுங்கள்.
அதில் உள்ள நீலக்கலர் வரியை எடுத்துவிட்டு
உங்கள் போட்டோவின் முகவரியை காப்பி செய்யுங்கள்.
அடுத்து உள்ள சிவப்பு கலரில் வேறு ஓரு போட்டாவின்
முகவரிளை காப்பி செய்யுங்கள். மூன்றாவதாக உள்ள
சிகப்பு வரியை எடுத்துவிட்டு நீங்கள் நீலக்கலரில்
காப்பி செய்த கோடிங்கை மீண்டும் காப்பி செய்யுங்கள்.
இப்போது சேமித்துவிட்டு எழுது சென்று பாருங்கள்.
உங்கள் படம் வந்திருப்பதையும் நீங்கள் கர்சர்
கொண்டு செல்லும் சமயம் படம் மாறுவதையும்
காணலாம்.

படத்தையே காப்பி செய்ய முடியாத கோடிங்கை
பின்னர் வெளியிடுகின்றேன்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பின்குறிப்பு:- நண்பர் ஒருவர் தனது படத்தை
பதிவில் போட்டு அதில் கர்சர் கொண்டு
செல்லும் சமயம் ஸ்ரேயா படம் வருமா
என கேட்டார். ஸ்ரேயா படம் மட்டும் அல்ல -
அவர்விரும்பும் யார்படம் வேண்டுமானாலும்
கொண்டுவரலாம். நீங்களும் நீங்கள் விரும்பும்
படத்தை கொண்டுவரலாம். ஆனால் படங்கள்
இரண்டும் ஒரே அளவாக இருக்கவேண்டும்
என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
இதுவரை படத்தை மாற்றிப்பார்த்துக்
கொண்டவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்