HELLO ENGLISH LESSON-2
நாம் அனைவருக்கும் தோரயமாக 1 முதல் 15 வயது
வரை குழந்தைகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்காக
எளிய முறையில்ஆங்கிலம் கற்க - பேச 30
வகுப்பறை பாடங்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த பாடங்களை நான் வார வாரம் ஞாயிறுக்கிழமை
அன்று நமது பிளாக்கில் பதிவிட்டுவருகின்றேன்.
முதல் பாடத்தை படிக்காதவர்கள் - இங்கு
பாடம்-1 -ஐ படிக்கவும்.
பாடம் 2 -ன் வீடியோ தொகுப்பை
நீங்கள் இங்கு பார்க்கலாம்.
இதை பார்க்க மட்டுமே முடியும். பதிவிறக்க
இணைத்துள்ளேன்.
வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லாத
காலத்தில் நாம் பயின்றோம். நமது குழந்தை
களுக்கு கல்வியை கற்பதற்கு நாம் குறை
ஏதும் வைக்க கூடாது. எனக்கு கிடைத்த
இந்த சி.டி்.யானது அனைவருக்கும் பயன்
படட்டும் என்றே இங்கு பதிவிடுகின்றேன்.
இதன் மூலம் நமது பிளாக்கர்ஸ் குழந்தைகள்
பயனடைந்தால் மகிழ்ச்சியே....
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்கள்
ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்
பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வேர்டில் ஒரு பெரிய டாக்குமென்டில்
இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேற்பட்ட
பகுதிகளை தேர்வு செய்ய மவுஸால்
டிராக் செய்து காப்பி செய்வோம். ஆனால்
அதையே நீங்கள் தேர்வு செய்யும் வார்த்தை
யின் முன் கர்சரால் கிளிக் செய்து பின்
எதுவரை தேவையோ அதுவரையில் உள்ள
பகுதியை மவுஸால் ஸ்கோரல் செய்து
Shift பிடித்து மீண்டும் மவுஸால் கிளிக் செய்தால்
நீங்கள் விரும்பும் பகுதிவரை சுலபமாக கிடைக்கும்.

