ஆள்பாதி - ஆடை பாதி என்பார்கள். உடையை பார்த்தே மனிதனை எடைபோடும் காலம் இது.கோட்டு -சூட் -டை என்று பந்தாவாக வந்தாலே மரியாதை தானே கிடைக்கும். ரூபாய் 5,000முதல் 50,000 வரை கோட்டு-சூட்டுக்கள் கிடைக்கின்றது.மேல் வர்க்கம் சரி..சராசரியான நடுத்தரவர்க்கம் அவ்வளவு விலைகொடுத்து வாங்க ரூபாய்க்கு எங்கே செல்வது?நமது புகைப்படத்தையும் கோட்டு -சூட் போட்டு அழகு பார்க்க போட்டோஷாப் வகை செய்கின்றது. இங்கு விதவிதமான கோட்டு மாடல்கள் 12 இணைத்துள்ளேன். 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.கோட்டு போட்ட எனது படம் கீழே-
இதில் இணைத்துள்ள கோட்டுமாடல் பிஎஸ்டி பைலை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள. இமெஜ் ஓப்பன் செய்து அதன் ரெசுலேஷனை 100 லிருந்து 300 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.(நான் பதிவேற்றுவதிலும் நீங்கள் பதிவிறக்குவதிலும் சிரமம் இருக்க கூடாது என்பதாலேயே ரெசுலேஷனை குறைத்து பதிவேற்றினேன்)இப்போது புகைப்படத்தை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது போட்டோஷாப்பில் கோட் மாடல் PSDபிஎஸ்டி பைலை திறந்துகொண்டு எப்7 -F7அழுததுங்கள். இதில் உள்ள கோட்டு மாடல்கள் தனிதனி லேயர்களாக உங்களுக்கு காட்சி அளிக்கும். எந்த மாடல் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த லேயரை தேர்வு செய்து மூவ் டூல் மூலம் படத்திற்கு கொண்டுவாருங்கள். பின்னர் (Ctrl+T )டிரான்ஸபரன்ட் டூல் மூலம் தேவையானபடி படத்தில் பொருத்துங்கள் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.சாதாரண புகைப்படம் கீழே-
போலீஸ் டிரஸ் மாட்டியதும் வந்துள்ள படம் கீழே-
நீங்களும் உங்களுடைய படங்களை இதைப்போல் மாற்றிப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



