வேலன்- போட்டோஷாப் - கோட் மாடல்கள்.

ஆள்பாதி - ஆடை பாதி என்பார்கள். உடையை பார்த்தே மனிதனை எடைபோடும் காலம் இது.கோட்டு -சூட் -டை என்று பந்தாவாக வந்தாலே மரியாதை தானே கிடைக்கும். ரூபாய் 5,000முதல் 50,000 வரை கோட்டு-சூட்டுக்கள் கிடைக்கின்றது.மேல் வர்க்கம் சரி..சராசரியான நடுத்தரவர்க்கம் அவ்வளவு விலைகொடுத்து வாங்க ரூபாய்க்கு எங்கே செல்வது?நமது புகைப்படத்தையும் கோட்டு -சூட் போட்டு அழகு பார்க்க போட்டோஷாப் வகை செய்கின்றது. இங்கு விதவிதமான கோட்டு மாடல்கள் 12 இணைத்துள்ளேன். 7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.கோட்டு போட்ட எனது படம் கீழே-  
இதில் இணைத்துள்ள கோட்டுமாடல் பிஎஸ்டி பைலை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள. இமெஜ் ஓப்பன் செய்து அதன் ரெசுலேஷனை 100 லிருந்து 300 ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.(நான் பதிவேற்றுவதிலும் நீங்கள் பதிவிறக்குவதிலும் சிரமம் இருக்க கூடாது என்பதாலேயே ரெசுலேஷனை குறைத்து பதிவேற்றினேன்)இப்போது புகைப்படத்தை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது போட்டோஷாப்பில் கோட் மாடல் PSDபிஎஸ்டி பைலை திறந்துகொண்டு எப்7 -F7அழுததுங்கள். இதில் உள்ள கோட்டு மாடல்கள் தனிதனி லேயர்களாக உங்களுக்கு காட்சி அளிக்கும். எந்த மாடல் உங்களுக்கு பிடித்துள்ளதோ அந்த லேயரை தேர்வு செய்து மூவ் டூல் மூலம் படத்திற்கு கொண்டுவாருங்கள். பின்னர் (Ctrl+T )டிரான்ஸபரன்ட் டூல் மூலம் தேவையானபடி படத்தில் பொருத்துங்கள் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
சாதாரண புகைப்படம் கீழே-
போலீஸ் டிரஸ் மாட்டியதும் வந்துள்ள படம் கீழே-
நீங்களும் உங்களுடைய படங்களை இதைப்போல் மாற்றிப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள். 


வாழ்க வளமுடன்.
வேலன்.


அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

26 comments:

மாணவன் said...

அருமை வேலன் சார்,

தொடர் போட்டாஷாப் பாடங்கள் அசத்தல்....

“நமது புகைப்படத்தையும் கோட்டு -சூட் போட்டு அழகு பார்க்க போட்டோஷாப் வகை செய்கின்றது. இங்கு விதவிதமான கோட்டு மாடல்கள் 12 இணைத்துள்ளேன்”

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று

சிறப்பாகவும் தெளிவாகவும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

மாணவன் said...

அனைத்து நண்பர்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

(நான் பதிவேற்றுவதிலும் நீங்கள் பதிவிறக்குவதிலும் சிரமம் இருக்க கூடாது என்பதாலேயே ரெசுலேஷனை குறைத்து பதிவேற்றினேன்)

இதுபோன்ற உங்களின் பதிவுகள் அனைவருக்கும் பயன்படும்படியும் சுலமாக பதிவிடுவதால்தான் அனைவரையும் கவர்ந்து விடுகிறீர்கள்
அருமை சார்...

உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன்

வாழ்க வளமுடன்

வெறும்பய said...

இத தான் தேடிகிட்டிருக்கேன்... பகிர்வுக்கு நன்றி அண்ணா...

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு சார்!

சே.குமார் said...

அருமை வேலன் சார்...

Supera iruukku.

தங்கம்பழனி said...

தங்களின் போட்டோஷாப் பாடங்களைப்படித்தே நான் ஒரு போட்டோஷாப் டிசைனர் ஆகுமளவுக்கு தேறிவிட்டேன்..!நன்றி! வாழ்த்துக்கள்!

கக்கு - மாணிக்கம் said...

அட , நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்

ஆ.ஞானசேகரன் said...

அருமை.... வாழ்த்துகள் சார்

பி.நந்தகுமார் said...

போட்டோஷாப் பயனுள்ள தகவல் தான். பாரட்டுக்கள். வேலன் அண்ணா உங்கள் இணையத்தில் பக்ரீத் வாழ்த்துக்கள் என்ற வரி ரன்னிங்கில் ஓடுவது போல் காட்டியுள்ளீர்கள் அது நன்றாக இருந்தது. பாரட்டுக்கள்.அதை எப்படி வடிவமைத்தீர்கள் என்று எனக்கு தெரிவிக்கவும். பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com crinandhakumar@gmail.com

Sumathi. said...

ஹாய் நண்பா,

அட நல்லாயிருக்கே...
சரி ஆனா நான் முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு வரவேயில்லையே...?? கோட் மாடல்கள் திறக்கவே மாட்டேங்கிறதே என்ன பன்றது?

முஹம்மது நியாஜ் said...

போட்டோ ஷாப் புதிய பாடம் மிக அருமை.உங்களின் பக்ரீத் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வேலன். said...

மாணவன் கூறியது...
அருமை வேலன் சார்,

தொடர் போட்டாஷாப் பாடங்கள் அசத்தல்....

“நமது புகைப்படத்தையும் கோட்டு -சூட் போட்டு அழகு பார்க்க போட்டோஷாப் வகை செய்கின்றது. இங்கு விதவிதமான கோட்டு மாடல்கள் 12 இணைத்துள்ளேன்”

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று

சிறப்பாகவும் தெளிவாகவும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
//

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அனைத்து நண்பர்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

(நான் பதிவேற்றுவதிலும் நீங்கள் பதிவிறக்குவதிலும் சிரமம் இருக்க கூடாது என்பதாலேயே ரெசுலேஷனை குறைத்து பதிவேற்றினேன்)

இதுபோன்ற உங்களின் பதிவுகள் அனைவருக்கும் பயன்படும்படியும் சுலமாக பதிவிடுவதால்தான் அனைவரையும் கவர்ந்து விடுகிறீர்கள்
அருமை சார்...

உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள் மாணவன்

வாழ்க வளமுடன்ஃ

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
இத தான் தேடிகிட்டிருக்கேன்... பகிர்வுக்கு நன்றி அண்ணா..ஃஃ

உங்கள்தேடலை நீஙகள் மனதிலேயே வைத்திருந்தால் எனக்கு எப்படி தெரியும். உங்கள் தேவைகளை சொல்லுங்கள்.முடிந்ததை நிறைவேற்றுகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
ரொம்ப நல்லாயிருக்கு சார்!

நன்றி எஸ்.கே. சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
அருமை வேலன் சார்...

Supera iruukku.ஃ

நன்றி குமார் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
தங்களின் போட்டோஷாப் பாடங்களைப்படித்தே நான் ஒரு போட்டோஷாப் டிசைனர் ஆகுமளவுக்கு தேறிவிட்டேன்..!நன்றி! வாழ்த்துக்கள்!


மிக்க மகிழ்ச்சி தங்கம்பழனிசார்...
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அட , நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்


உங்கள் படம்தான்போடலாம் என்றிருந்தேன்.உங்கள் படம் போட்டிருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்குமோ..???
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
அருமை.... வாழ்த்துகள் சார்
//

நன்றி ஞர்னசேகரன் சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
போட்டோஷாப் பயனுள்ள தகவல் தான். பாரட்டுக்கள். வேலன் அண்ணா உங்கள் இணையத்தில் பக்ரீத் வாழ்த்துக்கள் என்ற வரி ரன்னிங்கில் ஓடுவது போல் காட்டியுள்ளீர்கள் அது நன்றாக இருந்தது. பாரட்டுக்கள்.அதை எப்படி வடிவமைத்தீர்கள் என்று எனக்கு தெரிவிக்கவும். பி.நந்தகுமார், காங்கேயம் மின்னஞ்சல் vinothmaligai@gmail.com crinandhakumar@gmail.comஃ

தங்களுக்காக பதிவே பதிவிட்டுள்ளுன் நண்பரே..பார்த்துக்கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sumathi. கூறியது...
ஹாய் நண்பா,

அட நல்லாயிருக்கே...
சரி ஆனா நான் முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு வரவேயில்லையே...?? கோட் மாடல்கள் திறக்கவே மாட்டேங்கிறதே என்ன பன்றது?
நீங்கள் போட்டோஷாப்பில் கோட்மாடலை திறந்து பின்னர் எப்7 கீயை அழுத்தவும். இப்போது உங்களுக்கு தனிதனிலேயராக கோடடுகள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
வருகைககும் கருத்துககும் நன்றி சகோதரி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
போட்டோ ஷாப் புதிய பாடம் மிக அருமை.உங்களின் பக்ரீத் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்


நன்றி முஹம்மது நியாஜ் சார்...இனிய பக்ரீத் வாழ்ததுக்கள்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

மச்சவல்லவன் said...

நன்றி சார்.நான் நீன்டநாள் எதிர்பார்த்து இதுபோன்ற பதிவை.
வாழ்த்துக்கள்...

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
நன்றி சார்.நான் நீன்டநாள் எதிர்பார்த்து இதுபோன்ற பதிவை.
வாழ்த்துக்கள்...


நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

malik said...

ungal sevai manappanmai sirrakka en idaya poorva valtthukkal.

தமிழ்விடுதி சத்யபிரபு said...

சார் மிக அருமையான வலைப்பூ பனம் கட்டி படிக்க வேன்டிய பாடங்களை இலவசமாக அதிலும் யாருக்கும் குழப்பம் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நேங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் ரொம்ப அருமை சார். ஆனால் சிறு அல்ல பெறும் வருத்தம் கோட்டுக்காக மிக ஆர்வமாக சென்ற எனக்கு கோட் மாடல்களுக்காக file share-ல் download செய்ய முயற்சித்தபோது
"No file(s) found for ' கோட் மாடல்கள்" என்று வந்துவிட்டது சார் மீன்டும் ஒரு முறை கோட் மாடலை அப்லோடு செய்யுங்கள் சார். Thank you

Related Posts Plugin for WordPress, Blogger...