Showing posts with label velan.kids maths.windows maths.free software. Show all posts
Showing posts with label velan.kids maths.windows maths.free software. Show all posts

வேலன்-கணக்கை கணக்கு பண்ண.

கணக்கு என்றாலே பலருக்கு அலர்ஜி.ஆனால் கணக்கில் புலியாக இருப்பவர்களை கேளுங்கள் ...சுலபம் என்றே சொல்லுவார்கள். எதையும் வெளியில் இருந்து பார்த்தால் மிரட்டலவாகவே இருக்கும் .கணிதத்தில் மீது உள்ள பயத்தை போக்க. வாங்க... இந்த கணக்கு சாப்ட்வேரில் கொஞ்சம் கணக்கை கணக்கு பண்ணி பார்க்கலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக்  செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 3 நிலைகள் உள்ளது. ஆரம்ப நிலை - பரீட்சை நிலை - கடினமான நிலை...இதில எதுவேண்டுமோ அதை கிளிக் செய்யவும். முதலில நான் ஆரம்பநிலையை கிளிக செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் உங்கள் கேள்விக்கான மாடலை(சுமார் 21 மாடல்கள் உள்ளது) - வினாக்கள் எண்ணிக்கையை தேர்வு செயயுங்கள். 
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். விடையை தட்டச்சு செய்து ஓ.கே. தாருங்கள். அடுத்த கேள்வி வரும்.
உங்களுக்கான நேரமும் கீழே ஒடிக்கொண்டிருக்கும்.புதிய கேள்விக்கான விண்டோவினையும் தேர்வு செய்யலாம்.
இதில் உங்கள் நேரம் மற்றும் சரியான விடைதான் முக்கியம். முயற்சிசெய்து பாருங்கள்.
கடைசியாக உங்கள் மதிப்பெண் வரும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
படிக்கும் குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் பயனுள்ள சாப்ட்வேர் இது.4 எம்.பி.தான் இதன் கொள்ளளவும. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...