Showing posts with label velan.velang.font.tamil.english.create font in own handwriting. Show all posts
Showing posts with label velan.velang.font.tamil.english.create font in own handwriting. Show all posts

வேலன்:-நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க






நாம் வேர்டில்,எக்ஸெல், போட்டோஷாப் போன்று அனைத்து
இடங்களிலும் பாண்ட் (எழுத்துரு) உபயோகித்து வருகின்றோம்.
ஆனால் அவையெல்லாம் யாரா ஓருவர் உருவாக்கியதை
நாம் உபயோகித்து வருகின்றோம். ஆனால் நமக்கே தேவையான
பாண்டை நாமே நமது கையெழுத்தில் உருவாக்கினால்
எப்படியிருக்கும். அதற்கான பதிவு தான் இது. இனி நமது
கையெழுத்திலேயே பாண்ட் எப்படி உருவாக்குவது என
பார்க்கலாம்.
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.


இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒன்று இருக்கும். அதில் உள்ள Printing out the Font Template
இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Download Font Template என்பதை
கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் கொடுங்கள்.(உங்கள்
கணிணியில் பிடிஎப் ரீடர் இருப்பது மிக அவசியம்)


தேவையான செட்டிங்ஸ் கொடுத்தபின் ஒகே கொடுங்கள்.


உங்களுக்கு மேலே கண்ட அச்சிட்ட காகிதம் வரும்.அதை
தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அந்த காகிதத்தை
உற்றுபார்த்தீர்களேயானால் மூன்று கோடுகள் இருப்பதை
காணலாம். தேவைப்பட்டால் நீங்களும் பென்சிலில்கோடு
போட்டுக்கொள்ளலாம்.
இப்போது கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.
நீங்கள் எழுதும் எழுத்துக்கள் கேப்பிட்டல் எழுத்தாக இருந்தால்
முதல் கோட்டில் ஆரம்பித்து இரண்டாவது கோட்டிலும்
சின்ன எழுத்தாக இருந்தால் இரண்டாவது கோட்டில்
ஆரம்பித்துமூன்றாவது கோட்டிலும் முடிக்கவேண்டும்.
அந்த அந்தஎழுத்துக்களின் மேலேயே நீங்கள்
எழுதவேண்டிய எழுத்துக்கள்அச்சிடப்பட்டிருக்கும்.அதை
பார்த்துக்கொள்ளுங்கள்.அதைப்போல் எழுத்துக்களை
எழுதும் சமயம் கருப்பு ஸ்கெட்ச் பேனாவில் எழுதுவது
நல்லது.எழுத்துக்கள் அழகாக வரும்.தாளின் அனைத்து
கட்டங்களையும் பூர்த்தி செய்யுங்கள்.ரைட்.இப்போது
நீங்கள் பென்சிலில் போட்ட கோட்டினைஅழித்துவிடுங்கள்.

இப்போது ஒருமுறை அனைத்து எழுத்துக்களும் சரியாக
உள்ளதா - நீங்கள் எழுதாமல் எதாவது கட்டங்கள் உள்ளதா
என சரிபாருங்கள்.
இப்போது நீங்கள் எழுதிய தாளை ஸ்கேனரில் விட்டு
ஸ்கேன் செய்து (ஸ்கேன் அளவு 200 டிபிஐ-க்கு மேல்
இருத்தல் வேண்டும்) அதை JPG பார்மட்டாக உங்கள்
கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அந்த தளத்திற்கு வாருங்கள்.


இதில் நீங்கள் உருவாக்கிய பாண்ட்க்கு ஒரு பெயர் கொடுங்கள்.
ரொம்ப நீளமான பெயர்எல்லாம் வேண்டாம். சிம்பிளா
இரண்டு மூன்று எழுத்துக்கள் வருவதுபோல் கொடுங்கள்.
அடுத்து உங்கள் பெயர் கொடுங்கள்.(நீங்கள் தானே உருவாக்கி
னீர்கள் -அதற்கு நீங்கள் தான் உரிமையாளார்)
அடுத்து பைல் என்கின்ற இடத்தில் நீங்கள்
சேமித்துவைத்துள்ள பைலின் இடத்தை தேர்வு
செய்யுங்கள். அவ்வளவுதான் சப்மிட் செய்து
சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் -அதற்குள்
சென்று ஒரு சின்ன கப் காபி சாப்பிட்டுவந்துவிடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில நீங்கள் பாண்ட்க்கு வைத்த பெயர் இருக்கும்.




நீங்கள் அப்பவே ப்ரிவியு பார்க்க உங்கள் வார்த்தை
களை அதில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து
பார்க்கலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இப்போது இதில் உள்ள Download the Font

கிளிக் செய்து உங்கள் பாண்ட்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள்.பாண்ட் இன்ஸ்டால் செய்வது பற்றி'
ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்.
ரைட் அவ்வளவு தாங்க. இப்போது நீங்கள் தயாரித்த
பாண்ட் நீங்கள் உபயோகிக்கலாம். நண்பர்களுக்கு
கொடுக்கலாம். உபயோகித்துப்பாருங்கள்.
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்து தமிழில் பாண்ட் போடுவது பற்றி
பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-

டைல்ஸ் தரையில் ரொம்ப ஆட்டம் போட
வேண்டாம் என்று சொன்னேன். கேட்டானா ..?
இப்போது பார்...

இன்றைய பதிவிற்கான PSD புகைப்படம்:-


டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக்
செய்யவும்.

இதுவரை தமது கையெழுத்தில் பாண்ட் உருவாக்கி
கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...