வேலன்:-நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க


நாம் வேர்டில்,எக்ஸெல், போட்டோஷாப் போன்று அனைத்து
இடங்களிலும் பாண்ட் (எழுத்துரு) உபயோகித்து வருகின்றோம்.
ஆனால் அவையெல்லாம் யாரா ஓருவர் உருவாக்கியதை
நாம் உபயோகித்து வருகின்றோம். ஆனால் நமக்கே தேவையான
பாண்டை நாமே நமது கையெழுத்தில் உருவாக்கினால்
எப்படியிருக்கும். அதற்கான பதிவு தான் இது. இனி நமது
கையெழுத்திலேயே பாண்ட் எப்படி உருவாக்குவது என
பார்க்கலாம்.
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.


இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒன்று இருக்கும். அதில் உள்ள Printing out the Font Template
இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Download Font Template என்பதை
கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் கொடுங்கள்.(உங்கள்
கணிணியில் பிடிஎப் ரீடர் இருப்பது மிக அவசியம்)


தேவையான செட்டிங்ஸ் கொடுத்தபின் ஒகே கொடுங்கள்.


உங்களுக்கு மேலே கண்ட அச்சிட்ட காகிதம் வரும்.அதை
தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அந்த காகிதத்தை
உற்றுபார்த்தீர்களேயானால் மூன்று கோடுகள் இருப்பதை
காணலாம். தேவைப்பட்டால் நீங்களும் பென்சிலில்கோடு
போட்டுக்கொள்ளலாம்.
இப்போது கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.
நீங்கள் எழுதும் எழுத்துக்கள் கேப்பிட்டல் எழுத்தாக இருந்தால்
முதல் கோட்டில் ஆரம்பித்து இரண்டாவது கோட்டிலும்
சின்ன எழுத்தாக இருந்தால் இரண்டாவது கோட்டில்
ஆரம்பித்துமூன்றாவது கோட்டிலும் முடிக்கவேண்டும்.
அந்த அந்தஎழுத்துக்களின் மேலேயே நீங்கள்
எழுதவேண்டிய எழுத்துக்கள்அச்சிடப்பட்டிருக்கும்.அதை
பார்த்துக்கொள்ளுங்கள்.அதைப்போல் எழுத்துக்களை
எழுதும் சமயம் கருப்பு ஸ்கெட்ச் பேனாவில் எழுதுவது
நல்லது.எழுத்துக்கள் அழகாக வரும்.தாளின் அனைத்து
கட்டங்களையும் பூர்த்தி செய்யுங்கள்.ரைட்.இப்போது
நீங்கள் பென்சிலில் போட்ட கோட்டினைஅழித்துவிடுங்கள்.

இப்போது ஒருமுறை அனைத்து எழுத்துக்களும் சரியாக
உள்ளதா - நீங்கள் எழுதாமல் எதாவது கட்டங்கள் உள்ளதா
என சரிபாருங்கள்.
இப்போது நீங்கள் எழுதிய தாளை ஸ்கேனரில் விட்டு
ஸ்கேன் செய்து (ஸ்கேன் அளவு 200 டிபிஐ-க்கு மேல்
இருத்தல் வேண்டும்) அதை JPG பார்மட்டாக உங்கள்
கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அந்த தளத்திற்கு வாருங்கள்.


இதில் நீங்கள் உருவாக்கிய பாண்ட்க்கு ஒரு பெயர் கொடுங்கள்.
ரொம்ப நீளமான பெயர்எல்லாம் வேண்டாம். சிம்பிளா
இரண்டு மூன்று எழுத்துக்கள் வருவதுபோல் கொடுங்கள்.
அடுத்து உங்கள் பெயர் கொடுங்கள்.(நீங்கள் தானே உருவாக்கி
னீர்கள் -அதற்கு நீங்கள் தான் உரிமையாளார்)
அடுத்து பைல் என்கின்ற இடத்தில் நீங்கள்
சேமித்துவைத்துள்ள பைலின் இடத்தை தேர்வு
செய்யுங்கள். அவ்வளவுதான் சப்மிட் செய்து
சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் -அதற்குள்
சென்று ஒரு சின்ன கப் காபி சாப்பிட்டுவந்துவிடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில நீங்கள் பாண்ட்க்கு வைத்த பெயர் இருக்கும்.
நீங்கள் அப்பவே ப்ரிவியு பார்க்க உங்கள் வார்த்தை
களை அதில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து
பார்க்கலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இப்போது இதில் உள்ள Download the Font

கிளிக் செய்து உங்கள் பாண்ட்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள்.பாண்ட் இன்ஸ்டால் செய்வது பற்றி'
ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்.
ரைட் அவ்வளவு தாங்க. இப்போது நீங்கள் தயாரித்த
பாண்ட் நீங்கள் உபயோகிக்கலாம். நண்பர்களுக்கு
கொடுக்கலாம். உபயோகித்துப்பாருங்கள்.
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்து தமிழில் பாண்ட் போடுவது பற்றி
பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.JUST FOR JOLLY PHOTOS:-

டைல்ஸ் தரையில் ரொம்ப ஆட்டம் போட
வேண்டாம் என்று சொன்னேன். கேட்டானா ..?
இப்போது பார்...

இன்றைய பதிவிற்கான PSD புகைப்படம்:-


டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக்
செய்யவும்.

இதுவரை தமது கையெழுத்தில் பாண்ட் உருவாக்கி
கொண்டவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

சென்ஷி said...

பயனுள்ள தகவல்.. முயன்று பார்க்கின்றேன்! பகிர்விற்கு நன்றி.

mdniyaz said...

வாத்தியாரே...அசத்துரீங்க...
அசத்துங்க...படிப்போம்..முயற்சிபோம்
வெற்றி நம்க்கே.
வாழ்க உங்களது பணி.

ரோஸ்விக் said...

பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

நம்மை போலவே நம் கை எழுத்தும் தனித்தன்மை உடையது எல்லோருக்குமே ! அதே வகையில் Fonts உருவாக்கி பயன் படுத்துவது நல்ல முயற்சியே. பிளாக் எழுதுபவர்கள் இதனை பயன்படுத்துவது சிறந்த ஒன்று.

வேலன். said...

சென்ஷி கூறியது...
பயனுள்ள தகவல்.. முயன்று பார்க்கின்றேன்! பகிர்விற்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சென்ஷி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
வாத்தியாரே...அசத்துரீங்க...
அசத்துங்க...படிப்போம்..முயற்சிபோம்
வெற்றி நம்க்கே.
வாழ்க உங்களது பணி.ஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நியாஸ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரோஸ்விக் கூறியது...
பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஸ்விக் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நம்மை போலவே நம் கை எழுத்தும் தனித்தன்மை உடையது எல்லோருக்குமே ! அதே வகையில் Fonts உருவாக்கி பயன் படுத்துவது நல்ல முயற்சியே. பிளாக் எழுதுபவர்கள் இதனை பயன்படுத்துவது சிறந்த ஒன்றுஃ//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...நமது கையெழுத்தில் பாண்ட் வருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.உண்மைதான்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

நமது கையெழுத்திலேயே ஃபான்ட் என்பது மிக நல்ல விஷயம் கையெழுத்து நன்றாய் இருப்பவர்களுக்கு.

மிக விரைவில் தமிழில் எதிர்பார்க்கிறோம்.

வளர்க உங்கள் சீரிய பணி, அது எந்நாளும் சிறக்க எங்கள் உளம் கனிந்த வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ரவிசங்கர் said...

வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.

simbu said...

Dear velan sir,

Very nice...

Thank you so much sir...

Dj.R.R.simbu

யூர்கன் க்ருகியர் said...

நன்றி நண்பரே

டவுசர் பாண்டி said...

மேட்டர் ரொம்ப ஷோக்கா கீதுபா !! ஆனா ஒன்னு நம்ப கையேத்து, ரொம்ப கோரமா இருக்குமே !!

செரி, யாராது எழதிக் குடுப்பாங்கோ !! நம்பளுக்கு இன்னா ஆளா இல்ல !! முன்சாமி கிட்ட எழ்தி வாங்கிறேன் ! அக்காங் !!

shirdi.saidasan@gmail.com said...

ad for your website is coming.
Please contact me in my email id shirdi.saidasan@gmail.com

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நமது கையெழுத்திலேயே ஃபான்ட் என்பது மிக நல்ல விஷயம் கையெழுத்து நன்றாய் இருப்பவர்களுக்கு.

மிக விரைவில் தமிழில் எதிர்பார்க்கிறோம்.

வளர்க உங்கள் சீரிய பணி, அது எந்நாளும் சிறக்க எங்கள் உளம் கனிந்த வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்ஃ//

நன்றி நண்பரே...தமிழ் பாண்ட் வேலைகள் முடிந்துவிட்டது். அடுத்த வாரத்தில் பதிவிடுகின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

velan said...

ரவிசங்கர் கூறியது...
வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றிஃஃ

அவசியம் கலந்துகொள்கின்றேன் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

simbu கூறியது...
Dear velan sir,

Very nice...

Thank you so much sir...

Dj.R.R.simbu//

நன்றி சிம்புசார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
நன்றி நண்பரே


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
மேட்டர் ரொம்ப ஷோக்கா கீதுபா !! ஆனா ஒன்னு நம்ப கையேத்து, ரொம்ப கோரமா இருக்குமே !!

செரி, யாராது எழதிக் குடுப்பாங்கோ !! நம்பளுக்கு இன்னா ஆளா இல்ல !! முன்சாமி கிட்ட எழ்தி வாங்கிறேன் ! அக்காங் !ஃஃ

வந்ததுக்கும் ஒட்டுகுத்தனுத்துக்கும் ரொம்ப டாங்ஸ்ப்பா...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
ad for your website is coming.
Please contact me in my email id shirdi.saidasan@gmail.comஃஃ

தங்கள் உதவிக்கு நன்றி நண்பரே...தங்களுக்கு இ-மெயில் செய்துள்ளேன்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

வேலன். said...

TamilNenjam கூறியது...
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//

நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள் சர்ர்..தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வெளியூர் சென்றதால் உடன் பதில்அளிக்க இயலவில்லை...
வாழ்க வளமுடன்,
வேலன்.

MEGHA said...

Very useful info. Thanks Mr. Velan.

வேலன். said...

MEGHA கூறியது...
Very useful info. Thanks Mr. Velan.ஃஃ

பதிவிற்கு முதன்முதலில் வந்துள்ளீர்கள் சகோதரியே...உங்கள் பதிவில் சமையல்குறிப்புகள் நன்றாக இருந்தது...சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

vsrivan said...

anna ippothu than ungal pathivai kanden megavum makichiga ullathu...

nanum yenakku therintha thozhilnutpangali matravarkludan pakirnthu kolla avalaga ullathu...anna...thanks..

www.thesouthchennai.com

Related Posts Plugin for WordPress, Blogger...