
திரு வேலன் அவர்களுக்கு
உங்களது அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன்.
உங்களது அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன்.
மிக்க நன்றி.
இலவசமாக அனிமேசன் சாப்வேர் ஏதாவது இருப்பின்
குறிப்பிடுங்கள்.
முக்கியமாக நமக்கு தேவைப்படும் படங்களை
முக்கியமாக நமக்கு தேவைப்படும் படங்களை
அனிமேசன் செய்யவேண்டும்.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்
முஉறம்மது நியாஜ் அவர்கள் கேட்டிருந்தார்.
அவருக்கான பதிவு இது...
சரி அனிமேஷன் என்றால் என்ன?
சாதாரண படம் அசையும் படமாக மாறுவதே
அனிமேஷன் எனப்படும். படம் அல்லது எழுத்தை
அசைய வைப்பதையே அனிமேஷன் என்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட
தளம் ஓப்பன் ஆகும்.

1.1 எம்.பி.தான்.இலவசமென்பொருள் இது.
இந்த சாப்ட்வேரில் பயன்படுத்தப்படும் படங்கள்
எல்லாம் GIF பைல்களாக தான் இருக்கவேண்டும்.
BMP,JPG,PNG,PSD-பைல்களாக இருந்தால் உபயோகிப்பது
சிரமம். எனவே உங்கள் படங்களை GIF பைல்களாக
போட்டோஷாப் அல்லது பெயிண்ட் மூலம் மாற்றிக்
கொள்ளுங்கள்.இனி இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி
அனிமேஷன் படம் தயாரிப்பது என பார்க்கலாம்.
இதை பதிவிறக்கம்செய்து ஓப்பன்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து உங்கள் GIF பைலை
தேர்வு செய்யுங்கள். டூல் பாரில் உள்ள 4 வதாக
இன்சர்ட் டூலை கிளிக் செய்து அடுத்த பைலை தேர்வு
செய்யுங்கள்.

கிளிக் செய்யுங்கள். முதல் படத்திற்கான நேரத்தை அங்கு
செலக்ட் செய்யுங்கள். இதைப்போல் ஒவ்வொறு படத்திற்கான
நேரத்தை செட் செய்யுங்கள். அல்லது மொத்தப்படத்தையும்
தேர்வு செய்ய டூலில் உள்ள பத்தாவது டூலான செலக்ட்ஆல்
தேர்வு செய்து கொள்ளுங்கள்.

எத்தனை தடவை வரவேண்டும் என்பதை முடிவு
செய்ய Looping Setting செய்துகொள்ளுங்கள்.

இப்போது கடைசியாக இதில் உள் ள ப்ரிவியு பாருங்கள்.
படம் நன்றாக வந்தால் விருப்பமான பெயர் கொடுத்து
சேவ் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் பெயிண்ட்டில் நிபுணராக இருந்தால் படங்கள்
அசையுமாறு ஒவ்வொன்றாக வரைந்து அதை GIF
பைலாக சேமித்து இதை உபயோகித்துப்பாருஙகள்.
முதல் முறையாக முயற்சி செய்கையில் ஒரு திரைப்
படத்தின் ஒரு பகுதியை எடுத்து அதில் உள்ள
ஓவ்வொரு ப்ரெமாக GIF பைலாக சேமித்து பின்
இந்த சாப்ட்வேரில் உபயோகிக்கவும். திரைப்படத்திலிருந்து
ப்ரேம் கட் செய்வது பற்றி
அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய PSD பைலுக்கான படம் இது:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.