வேலன்:-படங்களை அனிமேஷன் செய்ய Animation

mdniyaz கூறியது...


திரு வேலன் அவர்களுக்கு
உங்களது அனைத்து பாடங்களையும் படித்து வருகின்றேன்.
மிக்க நன்றி.
இலவசமாக அனிமேசன் சாப்வேர் ஏதாவது இருப்பின்
குறிப்பிடுங்கள்.
முக்கியமாக நமக்கு தேவைப்படும் படங்களை
அனிமேசன் செய்யவேண்டும்.
மிக்க நன்றி
அன்புடன்
முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்
October 31, 2009 8:53 PM
அனிமேஷன் பற்றி கோலாலம்பூர் நண்பர்
முஉறம்மது நியாஜ் அவர்கள் கேட்டிருந்தார்.
அவருக்கான பதிவு இது...
சரி அனிமேஷன் என்றால் என்ன?
சாதாரண படம் அசையும் படமாக மாறுவதே
அனிமேஷன் எனப்படும். படம் அல்லது எழுத்தை
அசைய வைப்பதையே அனிமேஷன் என்கின்றோம்.


இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட
தளம் ஓப்பன் ஆகும்.


இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது
1.1 எம்.பி.தான்.இலவசமென்பொருள் இது.
இந்த சாப்ட்வேரில் பயன்படுத்தப்படும் படங்கள்
எல்லாம் GIF பைல்களாக தான் இருக்கவேண்டும்.
BMP,JPG,PNG,PSD-பைல்களாக இருந்தால் உபயோகிப்பது
சிரமம். எனவே உங்கள் படங்களை GIF பைல்களாக
போட்டோஷாப் அல்லது பெயிண்ட் மூலம் மாற்றிக்
கொள்ளுங்கள்.இனி இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி
அனிமேஷன் படம் தயாரிப்பது என பார்க்கலாம்.
இதை பதிவிறக்கம்செய்து ஓப்பன்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து உங்கள் GIF பைலை
தேர்வு செய்யுங்கள். டூல் பாரில் உள்ள 4 வதாக
இன்சர்ட் டூலை கிளிக் செய்து அடுத்த பைலை தேர்வு
செய்யுங்கள்.

இப்போது முதல் படத்தை தேர்வு செய்து image டேபை
கிளிக் செய்யுங்கள். முதல் படத்திற்கான நேரத்தை அங்கு
செலக்ட் செய்யுங்கள். இதைப்போல் ஒவ்வொறு படத்திற்கான
நேரத்தை செட் செய்யுங்கள். அல்லது மொத்தப்படத்தையும்
தேர்வு செய்ய டூலில் உள்ள பத்தாவது டூலான செலக்ட்ஆல்
தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Animation டேபை அழுத்துங்கள். அனிமேஷன்
எத்தனை தடவை வரவேண்டும் என்பதை முடிவு
செய்ய Looping Setting செய்துகொள்ளுங்கள்.

இப்போது கடைசியாக இதில் உள் ள ப்ரிவியு பாருங்கள்.
படம் நன்றாக வந்தால் விருப்பமான பெயர் கொடுத்து
சேவ் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் பெயிண்ட்டில் நிபுணராக இருந்தால் படங்கள்
அசையுமாறு ஒவ்வொன்றாக வரைந்து அதை GIF
பைலாக சேமித்து இதை உபயோகித்துப்பாருஙகள்.
முதல் முறையாக முயற்சி செய்கையில் ஒரு திரைப்
படத்தின் ஒரு பகுதியை எடுத்து அதில் உள்ள
ஓவ்வொரு ப்ரெமாக GIF பைலாக சேமித்து பின்
இந்த சாப்ட்வேரில் உபயோகிக்கவும். திரைப்படத்திலிருந்து
ப்ரேம் கட் செய்வது பற்றி
அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.இன்றைய PSD பைலுக்கான படம் இது:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


புகைப்படங்களை இதுவரை அனிமேஷன் செய்தவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போலவே மிக அழகான நல்ல படைப்பு.
வாழ்த்துக்கள் மாப்ஸ்.

Anonymous said...

super

-juergen

Anonymous said...

எண்டா மாப்பு , நோக்கு இன்னமும் தெளியலயோன்னோ ??
என்ன எழுதறே நீ? அஷமந்தம் ! அஷமந்தம்!!

// பெயரிலா கூறியது :

super

-juergen

November 1, 2009 5:57 பம் //

வர வர இந்த திரிதிராஷ் டற்ற கூட்டம் பண்ற அஷிசாடியம் தாங்களே டீ யம்மா !!

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு
மிக்க, மிக்க நன்றி சார்,
தொடருட்டும் உங்களது பணி.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வழக்கம் போலவே மிக அழகான நல்ல படைப்பு.
வாழ்த்துக்கள் மாப்ஸ்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
super

-juergen//

பெயரில்லா Juergen அவர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
எண்டா மாப்பு , நோக்கு இன்னமும் தெளியலயோன்னோ ??
என்ன எழுதறே நீ? அஷமந்தம் ! அஷமந்தம்!!

// பெயரிலா கூறியது :

super

-juergen

November 1, 2009 5:57 பம் //

வர வர இந்த திரிதிராஷ் டற்ற கூட்டம் பண்ற அஷிசாடியம் தாங்களே டீ யம்மா !ஃ


பெயரில்லாமல் இன்னும் எத்தனைபேர் கிளம்பியுள்ளீர்கள்...?
பெயரில்லா மனிதர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
மிக்க, மிக்க நன்றி சார்,
தொடருட்டும் உங்களது பணி.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நியாஜ் அவர்களுக்கு,
இது தங்களுக்கான பதிவு..இதை பயன்படுத்தி நீங்கள் தயாரித்த அனிமேஷனை அனுப்பி வையுங்கள்.பதிவில் வெளியிடுகின்றேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இந்த பதிவிற்கு தொடர்பான சாப்ட்வேர் ஒன்றையும் விரைவில் வெளியிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Nice posting, Keep it up.

Best Wishes
Muthu Kumar.N

mdniyaz said...

திரு வேலன் அவர்களே, தங்களின் வேண்டுகோளுக்கினங்கி, தாங்களின் பாடம் படித்தபடி என்னால் முடிந்தவற்றை அனிமேசன் செய்து அனுப்பி வைக்கின்றேன்.தங்களின் மின்மடல் அனுப்பவும்
நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
பி.கு இத்துடன் பைலை அட்டாச் செய்ய முடியவில்லை.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice posting, Keep it up.

Best Wishes
Muthu Kumar.Nஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களே, தங்களின் வேண்டுகோளுக்கினங்கி, தாங்களின் பாடம் படித்தபடி என்னால் முடிந்தவற்றை அனிமேசன் செய்து அனுப்பி வைக்கின்றேன்.தங்களின் மின்மடல் அனுப்பவும்
நன்றி
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
பி.கு இத்துடன் பைலை அட்டாச் செய்ய முடியவில்லை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...உங்கள் இ-மெயில் முகவரி தரவும். நான் தங்களுக்கு பதில் அனுப்புகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு
வழக்கம்போலவே, புதிய பாடங்களை தொகுத்து அசத்திவிட்டீர்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
எனது மின்மடல் முகவரி
niyazknr@yahoo.com
mdniyaz@hotmail.com

வேலன். said...

mdniyaz கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
வழக்கம்போலவே, புதிய பாடங்களை தொகுத்து அசத்திவிட்டீர்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
எனது மின்மடல் முகவரி
niyazknr@yahoo.com
mdniyaz@hotmail.com//

நன்றி நண்பரே...தங்களுக்கு எனது இ-மெயில் முகவரி அனுப்பிஉள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Malu said...

Expected this one. Nice.

வேலன். said...

Malu கூறியது...
Expected this one. Nice.ஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

simbu said...

Excellen work, keep it up....

வேலன். said...

simbu கூறியது...
Excellen work, keep it up...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

திருவாரூரிலிருந்து சரவணன் said...
This comment has been removed by the author.
P.nandha kumar said...

அனிமேஷன் பாடம் சூப்பர்
www.worldcriclub.com

Related Posts Plugin for WordPress, Blogger...