மொத்தப்பாடல்களை படித்துப்பாருங்கள். இதில் எனக்கு
ஏழாவது பாடல் மிகவும் பிடிக்கும்.
pm0083
தனியே படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த திருமண நாள் போன்று நான் எந்த திருமணநாளையும்
மகிழ்ச்சியுடன் கொண்டாடியதில்லை..காரணம் கண்ணுக்கு
தெரியாத நல்ல உள்ளங்கள் என்னை மனதார வாழ்த்தியது.
மனிதனாக பிறந்துவிட்டோம். வாழும் வரை மற்றவர்க்கு
நல்லது செய்துவிட்டு வாழ்வோம். போகும்போது என்ன
கொண்டு செல்லப்போகின்றோம்.(பட்டினத்தார் பாடலின்
ஏழாவது பாடலை படித்துப்பாருங்கள்) இந்த
திருமண நாளுக்கு 100 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்துக்கள்
சொன்னார்கள்.முத்தமிழ் மன்றம் சார்ந்த நண்பர்
திரு.வேணுகோபால் தனியே வாழ்த்துக்கு பதிவிட்டு
உள்ளார். அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
அதைப்போல் திரு.SPK அவர்கள் தனியே பதிவிட்டு
உள்ளார்.. அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
சகோதரி ஜலிலா அவர்கள் திருமண நாள் அன்று
பதிவில் விருந்துஅளித்து விருதும் அளித்துள்ளார்.
அதை காண இங்கு கிளிக் செய்யவும்.
சமீபத்தில் மும்பையிலிருந்து ரயிலில் நண்பர்
திரு.ஜெயகாந்த் வந்துள்ளார். அப்போது
உடன் 3 பயணிகள்(தமிழர்கள்)வந்துள்ளனர்.
பேசிக்கொண்டு வரும்சமயம் நமது
பதிவுலகம் பற்றி விவாதித்திருக்கின்
றார்கள். அதில் ஒருவர் வேலன் பிளாக்
தெரியுமாஎன கேட்டுள்ளார். அதற்கு அவர்
நான் விரும்பிபடிக்கும் பிளாக் என்றும்
எனது போட்டோஷாப்பதிவுகள் விரும்பி
படிப்பதாகவும் சொல்லியுள்ளார்.
திரு.ஜெயகாந்த் அவர்கள் வேலன் நண்பர்
என சொன்னதும் அவர்கள்
மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
டிரைனை விட்டு இறங்கியதும் நண்பர்
இந்த தகவலை எனக்கு தெரிவித்தார்.
முகம்தெரியாத மனிதர்கள் நம்மைபற்றி
பேசும் போதும் வாழ்த்தும்போதும்
நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
(நண்பராக இருந்தும் இதுவரை திரு.ஜெய
காந்த் அவர்களையும் நான் நேரில் பார்த்த
தில்லை)இணைய பதிவின் மூலம்
இதுவரை நேரில்வந்து சந்தித்தபதிவர்கள்:-
கரூர் திரு.தியாகராஜன் அவர்களுடன்,
பிரான்ஸ் நாட்டை சார்ந்த புதுவை.காம் நண்பர்கள்:-
சிங்கப்பூர் திரு.முத்துக்குமார் அவர்களுடன்.
துபாய் நண்பர் மாணிக்கம் மற்றும் நண்பர் சேகருடன்.
சந்திப்புக்கள் தொடரும்.....
எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
எனக்கு தெரிந்த தகவல்கள் - சாப்ட்வேர்கள்-
விவரங்கள் உள்ளவரை அல்லது மரணம்
என்னை தழுவும் வரை தொடர்ந்து பதிவிடுகின்றேன்
என கூறி விடை பெறுகின்றேன்.
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
எனது நன்றி.!.நன்றி.!!..நன்றி..!.!.!
வாழ்க வளமுடன்,
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்





