
ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
என்டா இது சஷ்டி கவசத்தில் வரும் பாடல் வரிகள் போல் இருக்கின்றதே என எண்ண வேண்டாம்.தமிழ்மொழியில் தட்டச்சு செய்யும் சமயம் மட்டும்அல்ல ...ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் சமயம் நமக்கு
v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v v
e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e e
l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l ll l l l l l l l l l l l l l
a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a
n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n
போல் சமயத்தில் விண்டோதிரையில் வரஆரம்பிக்கும். அதற்கு காரணம் நாம் செய்யும் தவறுதான். கம்யூட்டர் முன் அமர்ந்து சிறுதிணிகளை சாப்பிடும்போது சிதறும் உணவுத்துண்டுகள் கீ போர்டில் வந்து அமர்ந்துவிடும். அதனால் குறிப்பிட்ட கீ கள் நாம் தட்டச்சு செய்தவுடன் மீண்டும் பழைய நிலைக்கு வராமல் மேலே சொன்னவாறு வரும். அதை தவிர்க்க முடியாதா, ? சுலபமாக தவிர்த்துவிடலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என காணலாம்.வழக்கப்படி Start- Control Panel செல்லுங்கள் .கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Accessibility Optionsதேர்வு செய்யுங்கள்
Keyboard டேபை கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள Filter Keys டிக்செய்து எதிரில் உள்ள செட்டிங்ஸ்ஸை கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இதில்"Ignore repeated keystrokes அல்லது. Ignore quick keystrokes and slowdown the repeat rate என்பதில் விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
இனி தட்டச்சு செய்யும் சமயம் இதுபோல் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வராது.கீ போர்ட் சரியாகும் வரை தற்காலிகமாக இதை பயன்படுத்திப்பார்க்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.