இந்துக்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்கும் முன் விநாயகரை கும்பிட்டுவிட்டு துவங்குவார்கள்.மஞ்சளை பிடித்துவைத்து அதற்கு குங்கும பொட்டிட்டு அதையே வினாயகராக வணங்குவார்கள்.இந்த பதிவில் டெக்ஸ்டாப்பில் வைத்துகொள்ள சின்ன வினாயகரை பதிவிட்டுள்ளேன். வெறும் 32 கே.பி. அளவுள்ள அவரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். குட்டி பிள்ளையார் உங்கள் டெக்ஸ்டாப்பை அலங்கரிக்கும். அவரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். எவ்வளவு பிள்ளையார் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
நான் உங்கள் பார்வைக்கு இரண்டு பிள்ளையார்களை வைத்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இது சின்ன பதிவாக இருப்பதால் உடன் விதவிதமான வினாயகர் உருவங்களை இதில் இணைத்துள்ளேன் மொத்தம் 450 வினாயகர்கள். கருப்பு-வெள்ளையில் உள்ள இந்த உருவங்க ளில் பிடித்ததை நீங்கள் பதிவிறக்கி வைத்துக்கொள்ளலாம். 48 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.குழந்தைகளிடம் கொடுத்து அழகிய வண்ணம் தீட்ட சொல்லாம்.சாம்பிளுக்கு கீழே 6 வினாயகர் படங்களை கொடுத்துள்ளேன்.
பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- வந்தேமாதரம் நண்பர் சசிகுமார் அவர்கள் எங்களுக்கு ஏதுவும் கிடையாதா - என கருத்துரையில் கேட்டிருந்தார்.அவருக்காக இந்த பதிவு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்