வேலன்:-கம் யூட்டர் இல்லாமல் காலண்டர் பார்க்க

நமக்கு கடந்து சென்ற காலத்தின்

ஒரு குறிப்பிட்ட மாதத்தின் காலண்டர்

தேவையெனில் கிடைப்பது அரிது.

இந்த காலண்டரில் நமக்கு

கி.பி.1753 முதல் கி.பி.2030 வரை

எந்த மாதம் எந்த கிழமையில்

துவங்கும் என்பதை சில நொடிகளில்

கணக்கிடலாம். கடந்த காலத்தின்

பிறந்த நாள் எந்த கிழமையில் வந்தது

-அடுத்த ஆண்டில் ஒரு நாளை

கணக்கிட இது நமக்கு உதவும்.

இதற்கு கணிணியோ - இணைய இணைப்போ

தேவையில்லை. இந்த பதிவில்

இணைத்துள்ள அட்டவணை -1,2,3

ஆகியவற்றை தனியே பிரிண்ட்

செய்து வைத்துக்கொண்டு

கிழமைகளை சுலபமாக பார்த்து

கொள்ளலாம். இனி இதை எப்படி

பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் உங்களுக்கு எந்த வருடம்

வேண்டுமோ அந்த வருடம் இந்த

அட்டவணையில் எங்கே இருக்கின்றது

என பாருங்கள்.அந்த வருடத்தின்

உடன் இணைத்துள்ள ஆங்கில எழுத்தையும்

குறித்துக்கொள்ளுங்கள். நான் உதாரணத்திற்கு

நமது நாடு சுதந்திரம் அடைந்த து

என்ன கிழமை என பார்க்கலாம்.

நமது நாடு 1947 -ல் சுதந்திரம் அடைந்தது.

1947-வருடத்தின் அருகே உள்ள

ஆங்கில எழுத்து என்ன வருகின்றது

என பாருங்கள்.C-1947 என இருக்கின்றதா.

அடுத்துள்ள மாதங்கள் உள்ள அட்டவணையில்

C - என்கிற எழுத்துக்கு எதிராக உள்ள

எண்களை பாருங்கள். இதில் நமக்கு

ஆகஸ்ட் மாதத்திற்கு நேர் கீழே

C-காலத்திற்கு நேர் என்ன எண்

வருகின்றது என பாருங்கள்.

5 வருகின்றதா..அதை குறித்துக்

கொள்ளுங்கள்.





இனி கடைசியாக உள்ள அட்டவணையில்

5 என்கின்ற எழுத்தின் கீழ் உள்ள

அட்டவணையில் 15 என்கின்ற

தேதியின் நேர் என்ன கிழமை

வருகின்றது என பாருங்கள்.




வெள்ளிக் கிழமை வருகின்றதா...

நமது சுதந்தந்திரம் வாங்கிய

தேதி:-15-08-1947,

கிழமை:- வெள்ளிக் கிழமை.

இரண்டு மூன்று முறை முயற்சி

செய்து பாருங்கள். உங்கள்

பிறந்த நாள்-குழந்தைகளின்

பிறந்த நாள் இவற்றை முயற்சி

செய்து பார்க்கலாம்.

பதிவை பாருங்கள்.

பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,


வேலன்.




காலண்டரில் இதுவரை கணக்கிட்டவர்கள்:-

web counter

ஆன்மீக குறிப்பு:-

ஆத்தல்,காத்தல், அழித்தல் என

மும்மூர்த்திகளான பிரம்மா -

விஷ்ணு - சிவன் ஆகிய

கடவுள்களை குறிப்பிடுவார்கள்.

இதில்

G என்பது GENERATOR(படைக்கும்)

பிரம்மாவையும்,

O என்பது OPERATOR(காக்கும்)

விஷ்ணுவையும்,

Dஎன்பது DESTROYER(அழிக்கும்)

சிவனையும் குறிக்கும்.

இவர்கள் மூவரும் சேர்ந்ததே

GOD கடவுள் ஆகும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

யூர்கன் க்ருகியர் said...

சுவராஸ்யமான விஷயம்.
பகிர்வுக்கு நன்றி

Muthu Kumar N said...

Dear Velan,

Your calenders looks good.
and the information and GOD is very nice.

Keep it up. Good info.

Best wishes.
Muthu Kumar.N

தியாகராஜன் said...

///G என்பது GENERATOR(படைக்கும்)
பிரம்மாவையும்,
O என்பது OPERATOR(காக்கும்)
விஷ்ணுவையும்,
Dஎன்பது DESTROYER(அழிக்கும்)
சிவனையும் குறிக்கும்.
இவர்கள் மூவரும் சேர்ந்ததே
GOD கடவுள் ஆகும்.///

நிறைய யோசிக்கிறீர்கள்.
சூப்பர்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan,

Your calenders looks good.
and the information and GOD is very nice.

Keep it up. Good info.

Best wishes.
Muthu Kumar.N//

நன்றி நண்பரே...படம் மாற்றிவிட்டீர்கள்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
சுவராஸ்யமான விஷயம்.
பகிர்வுக்கு நன்றி//

நன்றி நண்பரே...

பெயர் மாற்றிவிட்டீர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
///G என்பது GENERATOR(படைக்கும்)
பிரம்மாவையும்,
O என்பது OPERATOR(காக்கும்)
விஷ்ணுவையும்,
Dஎன்பது DESTROYER(அழிக்கும்)
சிவனையும் குறிக்கும்.
இவர்கள் மூவரும் சேர்ந்ததே
GOD கடவுள் ஆகும்.///

நிறைய யோசிக்கிறீர்கள்.
சூப்பர்//

நன்றி நண்பரே...நிறைய யோசிக்கவில்லை. சும்மா கொஞ்சம்தான்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

swartham sathsangam said...

அய்யா அடியேனுக்கு ஒரு சிறிய உதவி. எங்களது யோகா கேந்த்ரம் தொடர்பான பதிவு தளம் சில நாட்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும். அதை எப்படி செயல்பட செய்வது. இதில் தங்களது உதவி தேவை. எனது பதிவின் முகவரி www.pathanjaliyogakendhram.blogspot.com

swartham sathsangam said...

அய்யா அடியேனுக்கு ஒரு சிறிய உதவி. எங்களது யோகா கேந்த்ரம் தொடர்பான பதிவு தளம் சில நாட்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும். அதை எப்படி செயல்பட செய்வது. இதில் தங்களது உதவி தேவை. எனது பதிவின் முகவரி pathanjaliyogakendhram.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...