வேலன்:-இ-மெயில்செய்தியை நமது குரலால் அனுப்ப



<span title=


நாம் வழக்கமாக கடிதங்களை இ-மெயிலில

அனுப்புவோம். ஆனால் அதே கடிதத்தை

நமது குரலில் பதிவுசெய்து அனுப்பினால்

பெறுபவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்.

எந்த ஓரு செய்தியையும் படிப்பதை விட

குரலால் கேட்பது கேட்பவர் மனதில் நன்கு

பதியும். (அந்த கால படங்களில் கடிதம்

படிப்பார்கள். கடிதத்தின் நடுவில் கடிதம்

எழுதியவர் தோன்றி கடிதத்தின் வரிகளை

தன்குரலில் சொல்லுவார்)

கீழே படத்தை பாருங்கள்:-



அதேபோல் நாம் நமது இ-மெயிலில்

நமது செய்தியை குரலால் அனுப்பலாம்.

முதலில் நமது குரலை கம்யூட்டரில்

எப்படி பதிவு செய்வது என்பதை

விளக்கமாக காண


இங்கேகிளிக் செய்யவும்.

முதலில் நீங்கள் சொல்லவிரும்பும்

செய்தியை சுருக்கமாக பதிவு செய்யவும்.

அதை டெக்ஸ்டாபிலே சேமித்து வைக்கவும்.

தேட சுலபமாக இருக்கும்.

இனி உங்கள் இ-மெயிலை திறந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அனுப்ப வேண்டிய நபரின்

இ-மெயில் முகவரியையும் பொருளையும்

தட்டச்சு செய்தபின் அதன் கீழ் உள்ள

அட்டாச் பைலில் உங்கள் டெக்ஸ்டாபில்

நீங்கள் சேமித்துவைத்துள்ள

ஆடியோபைலைசேர்க்கவும்.

நீங்கள் பதிவு செய்யும் ஆடியோ

சுருக்கமானதாக இருக்கட்டும். அதே

கருத்தை கடிதத்திலும் தட்டச்சு செய்து

அவர்களுக்கு அனுப்பவும்.இதேபோல்

உங்களுக்கு விருப்பமான பாடல்களையும்

அனுப்பலாம். ஆனால் கொள்ளலவு அதிகம்

ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இனி இ-மெயில் கடிதங்களை ஆடியோ

விலேயே பதிவுசெய்து அனுப்புங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.
இதுவரையில் இ-மெயிலில் குரலை
பதிவுசெய்து அனுப்பியவர்கள்:- web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

யாரையாவது நேரில் திட்ட பயமா இருந்தா இப்படி பதிவு பண்ணி திட்டலாம்.
ரொம்ப நல்ல ஐடியா குடுத்தீங்க சார் ! நன்றி

Thomas Ruban said...

//யாரையாவது நேரில் திட்ட பயமா இருந்தா இப்படி பதிவு பண்ணி திட்டலாம்.
ரொம்ப நல்ல ஐடியா குடுத்தீங்க சார்//

எப்படியலாம் யோசிகிரக!!!ச்சும்மா

நன்றி..நன்றி...

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
யாரையாவது நேரில் திட்ட பயமா இருந்தா இப்படி பதிவு பண்ணி திட்டலாம்.
ரொம்ப நல்ல ஐடியா குடுத்தீங்க சார் ! நன்றி//

திட்டுவதைமட்டுமல்ல,வேண்டுகோல்,உதவி,காதல்,உத்தரவு,கெஞ்சல் என அனைத்தையும் இ-மெயிலில் அனுப்பலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
//யாரையாவது நேரில் திட்ட பயமா இருந்தா இப்படி பதிவு பண்ணி திட்டலாம்.
ரொம்ப நல்ல ஐடியா குடுத்தீங்க சார்//

எப்படியலாம் யோசிகிரக!!!ச்சும்மா

நன்றி..நன்றி..//

யாராவது நீங்கள் திட்டனும் நினைத்துக்கொண்டுஇருக்கின்றீர்களா? உடனே மெயில் அனுப்பிவிடுங்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

Velan Sir,

Nice to know about voice mail for beginners.

Good Job well done.

Keep it up.

Best Wishes
Muthu Kumar.N

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,

Nice to know about voice mail for beginners.

Good Job well done.

Keep it up.

Best Wishes
Muthu Kumar.N//
நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...