வேலன்:-பட்டாம்பூச்சி விருது பெறுபவர்கள்
சில விருதுகள் சென்று சேர்பவர்களைவிட

அவர்களிடம் சென்று சேர்வதால் அந்த

விருதுக்கு தான் பெருமை. அந்த வகையில்

எனக்கு நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள்

அளித்த விருதினை நான் கீழ்கண்ட

நண்பர்களுக்கு அளிப்பதில் பெருமை

கொள்கின்றேன்.


1. .முத்துக்குமார்:-

சிங்கார சென்னையில் இருந்து பறந்து
சென்று தற்போது சிங்கப்பூரில் வசிக்கும்
இனிய நண்பர் இவர். நான் பதிவு
எழுத ஆரம்பித்ததற்கு நான்கு
மாதங்களுக்கு முன்பே எனது கணிணி
சந்தேகங்களை தீர்த்தவர். அனைத்து
துறைகளிலும் சகலகலாவல்லவர்.
நிறைகுடம்தளும்பாது என்பார்கள்.
அதற்கு உதாரணமாக அவரது
பதிவை பார்த்தாலே தெரியும்.
அவரது பதிவுக்கான சுட்டியை காண
.இங்கே கிளிக் செய்யவும்
2. டவுசர் பாண்டிசென்னை பாஷைக்காகவே இவர்
பதிவிடுகின்றார். இந்த பதிவின் மூலம்
சிரீயஸ் கருத்துக்களையும் நகைச்சுவை
ஆக மாற்றிவிடுவார். (அயன் படம்
பதிவை பார்த்தாலே தெரியும்)
இவர் பதிவின் சுட்டியை காண:-
இங்கே கிளிக் செய்யவும்3. வடிவேலன்:-

எனது புகைப்படம்
கணிணி தொழில்நுட்பம் பற்றி

எழுதிவருகின்றார். அறிமுகம்

இல்லாமலேயே தனது பிளாக்கில்

எனது போட்டோஷாப் பாடத்திற்காக லிங்க்

கொடுத்தவர். இவரது முகவரி தளம் காண:-4.பொன்மலர்இவரும் சிறந்த தொழில்நுட்ப
பதிவுகளை எழுதிவருகின்றார்.
ஒரு பதிவர் இன்னோரு பதிவரின்
பதிவுகளை சேகரிப்பது மிகவும் அரிது.
இவர் எனது பதிவுகள் அனைத்தையும்
சேர்த்து பி.டி.எப். பைலாக மாற்றி அதை
எனக்கு அளித்தார். நமது பதிவு நண்பர்களுக்கு
பின்னர் நான் அளிக்கின்றேன்.
இவரது முகவரி தளம் காண:-


இங்கே கிளிக் செய்யவும்
5.யூர்கன் க்ருகியர்
முகம் காட்டவிரும்பாத மனிதர்
அரசியல் மீதும் அரசியல்வாதிகள்
மீதும் கோபம் கொண்டவர். இவர்
பதிவுகளில் படங்களும் -கருத்துக்களும்
அருமையாக இருக்கும். அனைவரது
பதிவுகளிலும் கருத்துக்களை போடுபவர்.
இவரது முகவரி தளம் காண:-

இங்கே கிளிக் செய்யவும்6.தமிழ் மணம்

பதிவர்களுக்கே இதுவரையில்
நாம் விருதை வழங்கிவந்துள்ளோம்.
ஆனால் நமது பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு
நாம் விருதுகளை வழங்கியதில்லை.
அந்த வகையில் நான் இன்று தமிழ் மணத்திற்கு
இந்த விருதை வழங்குகின்றேன். பிற
பதிவர்கள் பதிவிட நாம் நிறைய நேரம்
செலவிட வேண்டும் . ஆனால் இந்த தளத்தில்
நாம் பதிவிட ஒரே ஓரு கிளிக் போதும்.
இந்த தளத்தின் முகவரி காண:-


இங்கே கிளிக் செய்யவும்

7.தமிழ் திரட்டி:-நாம் பதிவர்கள் எவ்வளவு பேர் இருப்போம்.
சுமார் 500 அல்லது 1000 . அதுதான் இல்லை.
மொத்தம் 2200 பதிவர்கள் உள்ளனர்.
இதில் இரண்டுபதிவுகளை எழுதுபவர்கள்
100 பேர் கழித்தாலும் சுமார் 2100 பேர்
வருகின்றனர். இவ்வளவு பேர்களின்
பெயர்களையும் அவர்களின் பதிவுகளின்
பெயர்களையும் மொத்தமாக திரட்டி
வைத்துள்ளனர். இதில் நமது பதிவுகளை
பதிவிடுவதும் மிக சுலபம்.
இந்த தளம் சென்று பார்க்க :-

இங்கே கிளிக் செய்யவும்பதிவுகளை பாருங்கள்.
கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


விருதுவழங்கும் விழாவிற்கு வந்தவர்கள்
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

வடிவேலன் ஆர். said...

உங்கள் பட்டாம்பூச்சி விருதுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

ஜீவா said...

Congrats Velan. have a nice day :)

ஜீவா said...

Congrats Velan. have a nice day :)

திரட்டி.காம் said...

வேலன்! பதிவர்கள் மட்டும் அல்ல திரட்டிகளுக்கும் இது ஒரு உற்சாக டானிக் தான். மிக மகிழ்வாக உள்ளது.

விருதுக்கு நன்றி!!
வெங்கடேஷ்

யூர்கன் க்ருகியர்..... said...

நண்பரே .... விருதினை கண்டு மனம் கொள்ளா மகிழ்ச்சி.
இதுக்கெலாம் நீ தகுதியானவன்தானா என்ற "உள்ளக்குத்தல்" (உள்குத்து இல்லீங்க!) இருப்பினும் தரமான பதிவுகளை பதிய வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது.
ரொம்ப நன்றி வேலன் சார்.

குறிப்பு : என் அலுவலக நண்பர்களுக்கு இன்றைக்கு பார்ட்டி அறிவித்திருக்கிறேன். யா ...ஹூ ...வ்வ்வ்..


:-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

விருதுக்கு மிக்க நன்றி ஆனால் நீங்கள் என்னை மிக அதிகமாக புகழ்ந்து தள்ளி என்னை கூச்சப்பட
வைத்துவிட்டீர்கள்.....

\\நிறைகுடம்தளும்பாது என்பார்கள்\\

உள்ளே மிச்சேமேதுல்லா குடமும் கவிழ்த்து வைத்தாலும் தளும்ப வாய்பேயில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனாலும் அனைத்துதுறைகளிலும் சகலகலாவல்லவர் என்று கூறி என்னை வாய் திறக்காது செய்து விட்டீர்கள்.

வளர்க உங்கள் சீரிய தொண்டு இந்த சிறியவனுக்கெல்லாம் விருதளித்து வியப்பிலாழ்த்தியதிற்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டவுசர் பாண்டி. said...

வாஜாரே-இன்னாமா!!இது மேரி கூடவா நடக்கும் ??

சொம்மா சுனாமி வந்த கணக்கா,கீதே? தலீவா !! நம்பளுக்கு போய், இது மேரி ஒரு விருது, கிருது குட்து நம்பல , அல்லேக்
பண்ணிட்டியே ? நாயமா இது ?

இது குட்ததுக்கு ஒரு டாங்க்சுபா !!

நம்ப கூட விருது வாங்கிக்கீற
அல்லாறோம் சொம்மா !! ரீஜண்டான பார்டிங்களா, கீறாங்கோ,

இதுல நம்பளையும் மச்சி, விருது, குட்த நம்ப வேலன் அண்ணாத்தைக்கு
ஒரு பெரி சல்யூட்டுபா !!!

நம்ப குப்பமே, கொஞ்ச நாளைக்கி நம்ப தஸ்து ஆவப்போது, பாரேன் !!

( ^ _ ^ ) ( ^ _ ^ ) ( ^ _ ^ )

ஹி, ஹி, ஹி, ஹி,
சந்தோசம்பா பேப்படாதே !!

வேலன். said...

வடிவேலன் ஆர். கூறியது...
உங்கள் பட்டாம்பூச்சி விருதுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

ஜீவா கூறியது...
Congrats Velan. have a nice day :)//

திருமணம் முடிந்து இப்போதுதான் பதிவிற்கு வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜீவா கூறியது...
Congrats Velan. have a nice day :)


திருமணம் முடிந்து இப்போதுதான் பதிவிற்கு வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

திரட்டி.காம் கூறியது...
வேலன்! பதிவர்கள் மட்டும் அல்ல திரட்டிகளுக்கும் இது ஒரு உற்சாக டானிக் தான். மிக மகிழ்வாக உள்ளது.

விருதுக்கு நன்றி!!
வெங்கடேஷ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கடேஷ் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர்..... கூறியது...
நண்பரே .... விருதினை கண்டு மனம் கொள்ளா மகிழ்ச்சி.
இதுக்கெலாம் நீ தகுதியானவன்தானா என்ற "உள்ளக்குத்தல்" (உள்குத்து இல்லீங்க!) இருப்பினும் தரமான பதிவுகளை பதிய வேண்டுமென்ற ஆவல் மேலோங்குகிறது.
ரொம்ப நன்றி வேலன் சார்.

குறிப்பு : என் அலுவலக நண்பர்களுக்கு இன்றைக்கு பார்ட்டி அறிவித்திருக்கிறேன். யா ...ஹூ ...வ்வ்வ்..


:-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வீக் எண்ட் பார்ட்டி இன்றே ஆரம்பித்துவிட்டீர்களா?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

விருதுக்கு மிக்க நன்றி ஆனால் நீங்கள் என்னை மிக அதிகமாக புகழ்ந்து தள்ளி என்னை கூச்சப்பட
வைத்துவிட்டீர்கள்.....

\\நிறைகுடம்தளும்பாது என்பார்கள்\\

உள்ளே மிச்சேமேதுல்லா குடமும் கவிழ்த்து வைத்தாலும் தளும்ப வாய்பேயில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனாலும் அனைத்துதுறைகளிலும் சகலகலாவல்லவர் என்று கூறி என்னை வாய் திறக்காது செய்து விட்டீர்கள்.

வளர்க உங்கள் சீரிய தொண்டு இந்த சிறியவனுக்கெல்லாம் விருதளித்து வியப்பிலாழ்த்தியதிற்கு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி. கூறியது...
வாஜாரே-இன்னாமா!!இது மேரி கூடவா நடக்கும் ??

சொம்மா சுனாமி வந்த கணக்கா,கீதே? தலீவா !! நம்பளுக்கு போய், இது மேரி ஒரு விருது, கிருது குட்து நம்பல , அல்லேக்
பண்ணிட்டியே ? நாயமா இது ?

இது குட்ததுக்கு ஒரு டாங்க்சுபா !!

நம்ப கூட விருது வாங்கிக்கீற
அல்லாறோம் சொம்மா !! ரீஜண்டான பார்டிங்களா, கீறாங்கோ,

இதுல நம்பளையும் மச்சி, விருது, குட்த நம்ப வேலன் அண்ணாத்தைக்கு
ஒரு பெரி சல்யூட்டுபா !!!

நம்ப குப்பமே, கொஞ்ச நாளைக்கி நம்ப தஸ்து ஆவப்போது, பாரேன் !!

( ^ _ ^ ) ( ^ _ ^ ) ( ^ _ ^ )

ஹி, ஹி, ஹி, ஹி,
சந்தோசம்பா பேப்படாதே !!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...ஆனால் தங்கள் கருத்துரை எனக்கு பாதி புரிந்தது மீதி புரியவில்லை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

தமிழ்நெஞ்சம் said...

super selection

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
super selection//

நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிற்கு வந்துள்ளீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி. said...

இன்னாபா பிரியல,
ஒரு வேல பிரியாத எழ்தர்தால தான் நம்பளுக்கு இந்த மேரி விருது குட்தியா நைனா ? செரி,

உனுக்கோசரம் உன்னொரு அகராதி குடுக்குறேன்,

வாஜாரே - மரியாதைக்
குரியவரே,

இன்னாமா - என்ன,

இது மேரி - இது போல்,

சுனாமி வந்த கணக்கா - திடீர் என்று,

அல்லேக் பண்ணிட்டே-சந்தோசப்
பட வைத்துவிட்டாய்,

ரீஜன்ட்டான பார்டிங்கோ - மிக
நாசுக்கானமனிதர்கள்,

சல்யுட்டுப்பா - வணக்கம் நண்பரே,

தஸ்து ஆவப்போது - மிக குஷியாக
இருக்கப் போகின்றது,


இன்னா இப்ப காண்டியும் பிரிஞ்சுதா, நீ நம்ப தோஸ்து ஆச்சே !!

எனுக்கு விருது குட்த மவராசன் நீ , உனுக்கு போய் இது பிரியலைன்னா ?
எனுக்கு தூக்கமே வராது நைனா, அதா ரவ எட்து உட்டேன் ,

உன்னோர் மேட்டர் கீது , நா எதோ நாலு பெரி மன்சாளோட பயகர்தால ரவ ரிஜென்ட்டா பேசறேன் ,

உன்னோ மெய்யாலுமே ,
நம்ப பாஷ பேச நேன்னு வெச்சிக்கோ, அவ்ளோ தான் பொட்டி, பொக
வந்துடும் வானா, உட்டுடு அல்லாறோம் ஓயிஞ்சி போட்டும்.

பொன்மலர் said...

நீண்ட நாட்களாக வரவில்லை. மன்னிக்கவும். என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

ராஜன் said...

வாழ்த்துக்கள்... அனைவருக்கும்...

வேலன். said...

பொன்மலர் கூறியது...
நீண்ட நாட்களாக வரவில்லை. மன்னிக்கவும். என்னையும் உங்கள் பட்டியலில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!ஃஃ

நன்றி சகோதரி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராஜன் கூறியது...
வாழ்த்துக்கள்... அனைவருக்கும்...


நன்றி ராஜன் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...