வேலன்:-போட்டோஷாப் பாடம்-26



போட்டோஷாப் இன்றைய பதிவில் மூவ் டூலின் மற்றும் ஒரு
உபயோகம் பற்றி பார்க்கலாம்.போட்டோஷாப்பில் மூவ்
டூலானது ஒவ்வொரு இடத்திலும்ஒவ்வொரு விதமாக
உபயோகிக்கலாம்.முந்தைய மூவ்டூலில
படத்தை ஒரு இடத்திலிருந்து மற்றும்ஒரு இடத்திற்கு
நகர்த்துவது பற்றி பார்த்தோம்.முந்தைய பாடம் பார்க்க
விரும்புபவர்கள் இங்குகிளிக் செய்யவும்.அதேபோல் லேயரில்
மூவ் டூல் உபயோகிப்பதை லேயர்பாடம் நடத்தும் சமயம்
விளக்குகின்றேன்.இன்றையபாடத்தில் மூவ் டூல் மூலம்
புகைப்படங்களை அதிகமாக்குவதுபற்றி பார்க்கலாம்.
முதலில் இந்த புகைப்படத்தை தேர்வுசெய்துள்ளேன்.

இதில் உள்ள குழந்தையின் முகம் மட்டும் கிராப்டூல் கொண்டு தேர்வு
செய்துள்ளேன்.

இப்போது குழந்தையின் முகம் மட்டும் தேர்வாகியுள்ளது.


இப்போது புதிய பைல் ஒன்றினை திறந்து கீழ்கண்ட அளவினை
கொடுத்துள்ளேன்.


புதிய விண்டோ ஓப்பன் செய்து மூவ் டூல் மூலம் புகைப்படத்தை
இதில் இடம் பெயர்ச்சி செய்துள்ளேன்.


புகைப்படத்தை நகர்த்திதேவையான இடத்தில் நிலைநிறுத்தியபின்
கீ-போர்ட்டில் உள்ள Alt Key அழுத்திக்கொண்டு கர்சர் மூலம்
புகைப்படத்தை வேண்டிய இடத்தில் நகர்த்திவைத்து கிளிக் செய்யுங்கள்.
பழைய புகைப்படத்தின் அருகிலேயே புதிய புகைப்படம் வருவதை
காணலாம்.இதேப்போல் புகைப்படத்தினை புதிய விண்டோமுழுவதும்
நகர்த்தி புகைப்படத்தை பதியலாம்.

இதே வசதியை முன்பு Pattern மூலம் செய்வதை பார்த்தோம்.
ஒரே செயலை போட்டோஷாப்பின் வெவ்வேறு டூல் மூலமும்
செய்ய முடியும் எனஇதன் மூலம் உணரலாம். பதிவின் நீளம் கருதி
இத்துடன்முடிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இன்றைய PSD பைலுக்கான புகைப்பட டிசைன்:-



டிசைன் செய்தபின் வரும் படம் கீழே:-


பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-

போட்டோஷாப் பாடம் 26 ஐ இதுவரை கற்றவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

Anonymous said...

if you start your series on gimp it will be useful for everybody because gimp is free. photoshop is not free.

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Nice posting. Keep it up.

Best wishes. Very helpful for all.

Warm Regards,
Muthu Kumar.N

Unknown said...

வேலன் சார்... போட்டோஷாப் பற்றி நீங்கள் எழுதி புத்தகம் வந்திருக்கிறதா? ஆம் எனில் தகவல் தாருங்களேன்.

Anonymous said...

Dear Velan Sir,

Thank you for your Photoshop posting.It is Very helpful me

With regards
Prem /Switzerland

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
if you start your series on gimp it will be useful for everybody because gimp is free. photoshop is not free.//
தங்கள் கருத்து உண்மையே...ஆனால் பெரும்பாலனவர்கள் விரும்புவதுபோட்டோஷாப்பே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice posting. Keep it up.

Best wishes. Very helpful for all.

Warm Regards,
Muthu Kumar.N//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

karpaka கூறியது...
வேலன் சார்... போட்டோஷாப் பற்றி நீங்கள் எழுதி புத்தகம் வந்திருக்கிறதா? ஆம் எனில் தகவல் தாருங்களேன்.//
நண்பரே...அவ்வளவுபெரிய ஆள் இல்லை நான்..எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன்நான் அவ்வளவுதான்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

spk கூறியது...
Dear Velan Sir,

Thank you for your Photoshop posting.It is Very helpful me

With regards
Prem /Switzerland//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ப்ரேம் அவர்களே..தங்கள் எழுதிய பதிவில் உள்ள வரிகள் மிக அருமை
"வாழ்வின் மிகப்பெரிய வேதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களால்.
வாழ்வின் மிகப்பெரிய சாதனை பிறர் கண்களில் கண்ணீர், உங்களுக்காக"
வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

எழுத்துகளை விதவிதமாக வடிவமைப்பது பற்றி / போட்டோஷாப்பில் செய்வது பற்றி எழுதுங்களேன்.

Dhavappudhalvan said...

நேரம் கிடைக்கையில் தமிழ் புளோக்குகளை அலாசகையில், கிடைத்தது அருமையாய் கிடைத்தது. வாழ்த்துக்கள்.

எம்மைக் காண:
http://aambalmalar.blogspot.com/

http://aasaidhaan.blogspot.com/

நித்தி said...

வணக்கம் வேலன் சார்...நல்ல படைப்பு...

வேலன். said...

karpaka கூறியது...
எழுத்துகளை விதவிதமாக வடிவமைப்பது பற்றி / போட்டோஷாப்பில் செய்வது பற்றி எழுதுங்களேன்.//

பாடங்களின் வரிசையில் அதுவும் வரும் நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Dhavappudhalvan கூறியது...
நேரம் கிடைக்கையில் தமிழ் புளோக்குகளை அலாசகையில், கிடைத்தது அருமையாய் கிடைத்தது. வாழ்த்துக்கள்.

எம்மைக் காண:
http://aambalmalar.blogspot.com/

http://aasaidhaan.blogspot.com/ஃஃ

தாமதமான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...ஒரு பிளாக்குக்கு பதிவேற்றவும் - கருத்துரையிடவும் நேரமின்மையால் தடுமாறும்போது தாங்கள் 5 பிளாக்குகள் வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
வணக்கம் வேலன் சார்...நல்ல படைப்பு..ஃஃ

எங்கே சார் ஆளையே காணோம்...?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

//.அவ்வளவுபெரிய ஆள் இல்லை நான்..எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன்நான் //

அப்படி சொல்லக்கூடாது. புத்தகம் கேட்பவர்களிடம் எழுதிக் கொடுத்து காசு வாங்கிக்கொள்ளுங்கள்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
//.அவ்வளவுபெரிய ஆள் இல்லை நான்..எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன்நான் //

அப்படி சொல்லக்கூடாது. புத்தகம் கேட்பவர்களிடம் எழுதிக் கொடுத்து காசு வாங்கிக்கொள்ளுங்கள்ஃஃ

சிறந்த ஆலோசனைகள் தருகின்றீர்கள்.
நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...