வேலன்:-வியாபாரிகளுக்கான கால்குலேட்டர்

விதவிதமான கால்குலேட்டர்கள் இருப்பினும் புதியதாக இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் வலதுபுறம் கீபோரட் இருக்கும் அதில் கணக்கினை நீங்கள் போட பக்கத்தில் உள்ள நோட்பேடில் விவரம் உங்களுக்கு கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் டெஸிமல் 0 விலிருந்து 9வரை கொண்டுவரலாம்.
மேலும வணிக நிறுவணங்கள் வரிபோடும் வசதிஉள்ளதால் இதில் உள்ள + டேக்ஸ் மற்றும் வரியை குறைக்க -டேக்ஸ் வசதியும் உள்ளது. எந்த அளவு டேக்ஸ் வேண்டுமோ அதனை நாம்நிர்ணயித்துக்கொள்ளலாம்.
இதில் நேரடியாக பிரிண்ட்எடுக்கும் வசதிஉள்ளதால் நாம் தேவையான விவரம் தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.வியாபாரிகளுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...