வேலன்:-வீடியோ ஸ்மார்ட் ஷோ

நமது கணிணியில் புகைப்படங்களை வீடியொ படங்களாக மாற்ற விண்டோஸ் மூவி மேக்கர் பயன்படுத்துவோம்.அதுபோல நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முழுநீள வீடியோ படங்களாக மாற்ற இந்த சின்ன் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிற்க்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள இம்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான டிரைவ் தேர்வு செய்து உங்கடைய புகைப்படம் மற்றும் வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் மேற்புறம் உங்களுக்கு All.Image.Audio.Video என டேப்புகள் கிடைக்கும் தேவைபடுவதை கிளிக் செய்து பின்னர் இம்போர்ட் கிளிக் செய்யவும். தேவையான புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்துவிடவும். பின்னர் இதில் இரண்டாவதாக உள்ள னஆடியோ போல்டரில் உங்களுக்கான ஆடியோ போல்டரை தேர்வு செய்து அதனையும் இழுத்துவந்துவிடவும்.இப்போது உங்களுக்கு Title.Media.Transtion.More Templetes.Create Import ஆகிய டேப்புகள் கிடைக்கும்.டேடிலை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

 இதில் Holiday.Birthday.Wedding.Baby & Family என ஐந்துவிதமான டைடில் கொடுததுள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்துபின்னர் விதவிதமான டெப்ளேட்படங்கள் நமக்கு கிடைக்கும். ,இதில் புகைப்படங்களை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள எடிட் டெக்ஸ்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இடதுபுறம் நமக்கு கீழ்கண்ட விண்டோ தெரியவரும் இதில் நமக்கான டெக்ஸ்ட்டின் வார்த்தையைவேண்டிய வாறு மாற்றிக்கொள்வதுடன் எழுத்துரு அளவினை மாற்றிக்கொள்வது.நிறக்கள்மாற்றுவது என அனைத்துப்பணிகளையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையான மாற்றங்கள்செய்தபின்னர் இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்து புகைப்படங்களை இழுத்துவந்துவிடவும். இதில் நமக்கான புகைப்படம் தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓபப்ன ஆகும். இதில் புகைபடங்களில் நிறம் கூட்டுதல்.பிரைட்னஸ் கொண்டுவருதல்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருதல் போன்ற பணிகளை செய்யலாம். புகைப்படங்களை திருப்புதல் தலைகீழாக மாற்றுதால் இரண்டு புகைப்படங்களை ஹாரிசாண்டலாக பிலிப் செய்தல் போன்ற பணிகளை செய்யலாம். ஒவ் வாரு ஆப்ஷனுக்கும் நமக்கு ரேடியோ பட்டனை கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்தபின்னர் இதில் வரும் பிரிவியூவில் காணலாம். பிடித்திருந்தால் தேர்வு செய்துபின்னர் இறுதியாக ஓ.கே.தரலாம்.

அடுத்து மூன்றாவதாக உள்ள டிரான்ஸ்சிடியன் கிளிக் செய்து வரும் விண்டோவில் நமக்கான எபெக்ட் களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொன்றாக ஒவ்வொரு படத்திற்கும் இடையில் இழுத்துவந்துவிடவும். 

 இறுதியாக இதில் உள்ள கிரியேட் கிளிக் செய்திட நமக்கான புகைப்படங்கள் ஆனது வீடியொவாக மாற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

 இறுதியாக இதில் உள்ள ஆவுட் புட செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு Device.Format.FaceBook என மூன்று டேப்புகள் கிடைக்கும். அதில் டிவைஸ் என்பதில் விதவிதமான செல்போன் மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதுபோல் பார்மெட் என்பதில் எந்த பார்மேட்டுக்கு நமக்கு வீடியோ வேண்டுமோ அதனை தேர்வு செய்யவேண்டும். இறுதியாக பேஸ் புக் கொடுத்துள்ளார்கள் பேஸ்புக் கணக்கு ஓப்பன் செய்து அதில நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பயன்படுததிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
 வாழ்க வளமுடன்
வேலன்.பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

சே. குமார் said...

தகவலுக்கு நன்றி.

வேலன். said...

சே. குமார் said...
தகவலுக்கு நன்றி.//

Thanks kumar sir...
valgavalamudan.
velan

Related Posts Plugin for WordPress, Blogger...