கீ போர்ட் மற்றும் மவுஸ் இல்லாமல் கம்யூட்டர் இல்லை எனலாம். நாம் உபயோகிக்கும் கீபோர்ட் மற்றும் மவுஸினை எவ்வளவு முறை பயன்படுத்துகின்றாம் என இந்த சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம். 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்ட்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய டாஸ்பாரில் பார்த்தீர்களேயானால் இதற்கான சின்ன ஐகான் அமர்ந்திருக்கும்.அதனை கிளிக செய்த அதில் உள்ள ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் ஜெனரல் என்பதில் நமக்கான விவரங்களை இதில் உள்ள ஸ்கோரல் பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்து கொள்ளலாம். இதில் அடுத்த்தாக உள்ள
Displayed Items கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஒடும் நேரம்,கர்சர் மானிட்டரில் பயணிக்கும் தூரம்,மவுஸில் நாம் ரைட் கிளிக் எவ்வளவு செய்தோம்,லெப்ட் கிளிக் எந்தனை முறை செய்தோம். டபுள் கிளிக் எவ்வளவு முறை கிளிக் செய்தோம் என எளிதில அறிந்துகாள்ளலாம். மேலும் கீபோர்டில் கீகளை எவ்வளவு முறை அழுத்தினோம் என்கின்ற விவரமும் அறிந்துகொள்ளலாம்.முக்கியமாக நீங்கள் மவுஸ் மற்றும் கீபோர்ட் உபயேகிக்காமல் எவ்வளவு நேரம் சும்மா இருந்தீர்கள் என்பதனையும் எளிதில் அறிநதுகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
3 comments:
வணக்கம்
தகவலுக்கு மிக்க நன்றி.. தொடருகிறேன் பதிவை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வுக்கு நன்றி.
Post a Comment