புகைப்படங்களில் எடிட் செய்ய,வேண்டிய பார்ட்ர்.ஆரட் படங்கள் சேர்க்க.விதவிதமான ப்ரேம்கள் இணைக்க.தேவையான வார்த்தைகள் சேர்க்கபயன்படுகின்றது.மேலும் புகைப்படங்களை .சிடியாக மாற்ற.போட்டோக்களை பிரிண்ட்எடுக்க.,எச்டிஎம்எல் பைல்வகைகளாக மாற்ற.பயன்படுகின்றது. 33 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://blaze-photo.en.softonic.com/ செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Get Photo.Preview.Edit.Create என நான்கு டேப்புகள் கிடைக்கும்ட இதில் உள்ள Get Photo என்கின்ற டேபினை கிளிக் செய்து நம்மிடம் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும். உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் தேர்வுஆகும். புகைப்படங்களை தம்ப்நெயில் போட்டோக்களாகவோ.பெரிய தம்ப்நெயில் போட்டோக்களாகவோ கொண்டுவரலாம். மேலும் தனிதனி புகைப்டமாகவோ தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவையான புகைப்படம் தேர்வு செய்ததும் நீங்கள் அடுத்துள்ள எடிட் கிளிக் செய்யவும். உங்களுக்கு வலதுபுறம் மூன்று ஆப்ஷன்கள் உள்ள விண்டோ கிடைக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இதில் முதலில் உள்ள டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு Rotate.Flip,Resize.Crop கஎன நான்கு வித ஆப்ஷன்கள் கிடைக்கும் தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்திட அதில் Red Eye Color.Blur/Sharp.Enhance என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் உள்ள டேபினை கிளிக் செய்திட அதில் Add Text.Add Clips.Add Frame.Filter என நான்குவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். Add Text கிளிக் செய்திட வரும் விண்டொவில ்நாம் விரும்பும் வார்த்தைகளை தட்டச்சு செய்து இதில் உள்ள ஆப்ளை கிளிக் செய்திட உங்களுக்கு உங்களுக்கான டேக்ஸ்ட் ஆனது புகைப்படத்தில் வந்து அமர்ந்துகொள்ளும் வேண்டிய இடத்திற்கு அதனை நாம் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.
அதனை போலவே புகைப்படத்திற்கு வேண்டிய விதவிதமான ப்ரெம் களை நாம் கொண்டுவரலாம். இதில் உள்ள ப்ரேம் கிளிக் செய்திட வரும் விண்டோவில் விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். நமக்கு தேவையான ப்ரேமினை கிளிக் செய்ததும் உங்களுக்கான ப்ரேம் உடன் கூடிய புகைப்படம் ப்ரிவியூவாக தெரியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக நீங்கள் மாற்றம் செய்த புகைப்படத்தினை நேரடியாக பிரிண்ட் செய்துகொள்ளலாம்.சிடியாக காப்பி செய்து கொள்ளலாம்.டிவிடியாக காப்பி செய்துகொள்ளலாம். மேலும் இதனை எச்டிஎம்எல் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.இமெயில் அனுப்பலாம். கீழே உள்ள விண்டோவில்பாருங்கள்.
புகைப்படங்களை நாம் விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம். அதனுடைய பெயரைவைத்தோ,அளவினை வைத்தோ.புகைப்படம் எடுத்த நேரத்தினை வைத்தோ.அதனை வகையைவைத்தோ மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பிரிண்ட ஆப்ஷனை கிளிக் செய்திட கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான அளவினை நாம் தேர்வு செய்து புகைப்படத்தினை நாம் பிரிண்ட் செய்துகொள்ளலாம். பயன்படுத்தி கொள்ள எளிதான உள்ளதால் பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
4 comments:
velan sir, use full information
தேவையான பகிர்வு....
நன்றி வேலன் சார்.
Anonymous srinivasan said...
velan sir, use full information//
நன்றி சீனிவாசன் சார்..தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.
சே. குமார் said...
தேவையான பகிர்வு....
நன்றி வேலன் சார்.ஃஃ
நன்றி குமார் சார்..கருத்துக்கு நன்றி வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment