தூங்காத கண் என்று ஒன்று ...துடிக்கின்ற மனம் என்று ஒன்று...என பிரபலமான பாடல் உண்டு. உண்ணாமல் இருந்துவிடலாம். ஆனால் உறங்காமல் இருப்பது கடினம். பஞ்சு மெத்தை.பட்டாடை.பணம் இருந்தும் நிம்மதியான உறக்கம் இல்லையென்றால் வாழ்கையே வீண்தான். நிம்மதியான உறக்கத்திற்கான கேள்வி பதில்கள் இந்த புத்தகத்தில் விரிவாக கொடுத்துள்ளார்கள். 18 எம்.பி.கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.,இந்த பிடிஎப் புத்தகத்தினை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன் ஆகும்.
சிலர் பெட் ரூமில் டிவி வைத்துகொண்டு சீரியல் பாரத்துகொண்டே தூங்கிவிடுவார்கள்.அது மிகவும் கெட்ட பழக்கம் ஆகும். நமது படுக்கை அறை எந்த ஒலி ஓளி சாதனங்கள் இல்லாததாக இருந்திட வேண்டும். கீழே உள்ள கேள்வி பதிலை பாருங்கள்.நமது படுக்கைஅறையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என விரிவாக விளக்கியுள்ளார்கள்.
இதில் நாம் ஒரு வாரத்திற்கு உறங்கும் நேரத்தினை சார்ட் வடிவில வடிவமைத்துள்ளார்கள். எந்த எந்த நேரம் நாம் உறங்குகின்றோம். எவ்வளவு நேரம் உறங்குகின்றோம் என இதில் நாம் குறித்துவைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு உவ்வளவு நுரம் நாம் உறங்குகின்றோம் என எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள சார்ட்டினை பாருங்கள்.
எவையெல்லாம் நமது தூக்கத்தினை கெடுக்கும் என விளாவரியாக பட்டியலிட்டுள்ளார்கள்.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். முதியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என கேள்வி பதிலாக கொடுத்துள்ளார்கள்.நல்ல உறக்கம். கோழி்த்தூக்கம்.ஆழந்த உறக்கம் என தூக்கத்தில் உளள வகைகளை வகைப்படுததி உள்ளார்கள். படித்துப்பாருங்கள்.நன்கு தூங்குங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
வேலன்ஜி, இதைத் தமிழில் மற்றி வெளியிட்டால் மிகவும் நன்றி வயப்பட்டவனாவேன்!
வேலன்ஜி, இதைத் தமிழில் மாற்றி வெளியிட்டால் மிகவும் நன்றி வயப்பட்டவனாவேன்!
Post a Comment