வேலன்:-பைல்களை விரைவாக -விரிவாக தேட


நாம் கணிணியில் நான்கு அல்லது ஐநது டிரைவ்கள் வைத்திருப்போம். சிலர் அதற்கு மேலும் டிரைவ்கள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு டிரைவினையும் சலர் விளையாட்டு.பாடல்கள.திரைப்படங்கள்.சாப்ட்வேர்கள்.அப்ளிகேஷன் பைல்கள்.படங்கள் என தனிதனியே பிரித்து வைத்திருப்பார்கள். சிலர் எங்கு இடம் கிடைக்கின்றதோ அந்த இடத்தில் பைல்களை போட்டு வைத்திருப்பார்கள். அவ்வாறு பைல்களை குறிப்பிட்ட இடம் அல்லாது எங்கு வேண்டுமானாலும் போட்டுவைத்திருப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது.இந்த சாப்ட்வேரில் நம்முடைய பைல்கள் அனைத்துவிவரங்களும் தெரியவரும். 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.வரும் விண்டோவில் நமக்கான டிரைவினை தேர்வு செய்யவும்.இதில் உள்ள பைல்கள் நமக்கு விரிவாக  தெரியவரும்.


 இதில் உள்ள வியூபட்டனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் பைலின் எந்த வகை தேர்வு செய்ய விரும்புகின்றமோ அதற்கான உள்ளதை கிளிக் செய்யவும். இதில் Size.Allocated Space.% Percent CD/DVD Size File Count.Compresion Rate Values as KB.Values as MB.Values as GB.Automatic Units Sort.Decimals என கொடுத்துள்ளார்கள்.

குறிப்பிடட பைலின மீது கர்சரை வைக்க நமக்காக இந்த விண்டோ திறக்கும். இதில் அந்த பைலின் முழுவிவரமும் நமக்கு தெரியவரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான பகிர்வு.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

சே. குமார் said...
உபயோகமான பகிர்வு.
வாழ்த்துக்கள்.ஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...