வேலன்:-பல்வேறு பிடிஎப் பணிகள் ஒரே சாப்ட்வேரில்.

பிடிஎப் பைல்களை நாம் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். எந்த டாக்குமெண்ட் என்றாலும் அது பிடிஎப் வடிவில் இருந்தால் பயன்படுத்துவது எளிதாகும். பிடிஎப் பைல்களை படிக்க நிறைய ரீடர்கள் இருந்தாலும் அதில் படிக்கமட்டுமே முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில நாம் பிடிஎப் பைல்களை எடிட் செய்யலாம். இரண்டு மூன்று பிடிஎப் பைல்களிலிருந்து பக்கங்களை எடுத்து புதிய பிடிஎப் உருவாக்கலாம். பிலிப் வியூவாக பார்வையிடலாம். பிடிஎப் பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய நபர்களுக்கு நேரடியாக மெயில் அனுப்பலாம். இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நம்முடைய பிடிஎப் பைலினை டிராக் அனட் டிராப் முறையில இழுத்துவந்துவிடவும்.
 இதில் Page View.Assemble View.Flick View என மூன்றுவிதமான வியூக்கள்கொடுத்துள்ளார்கள். நீங்கள் எந்த வியூவில பார்வையிட விரும்புகின்றீர்களோ அதனுள் உங்களுடைய பிடிஎப் பைலினை இழுத:துவந்துவிடவும. நான் பிளிக் வியூவினில் பைலினை இழுத்துவந்து விட்டுள்ளேன். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 இதில நம்மிடம் உள்ள பிடிஎப் புத்தகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக நமரும். நாம் தேவையான பக்கத்தில் கிளிக் செய்து அதனை சுலபமாக படிக்கலாம். அடுத்துள்ளது பேஜ்வியூ. இதில நம்மிடம் உள்ள பி0டிஎப் பைலினை இழுத்துவந்துவிடடவுடன் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. 
 இதில் உள்ள பிடிஎப் பக்கத்தினை வேண்டிய அளவிற்கு சூம் செய்து படிக்கலாம்;மேலும் இதிலிருந்து நேரடியாக பிரிண்ட செய்யலாம். இந்த பக்கத்தில் இருந்து நாம் பிளிப் வியூ மற்றும் அசெம்பிள் வியூவிற்கு செல்லாம்.அடுத்துள்ள அசெம்பிள் வியூபற்றி பார்க்கலாம்.. இதில நமக்கு தேவையான பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்துவிடவும். அதுபோல மற்றும் ஒரு பிடிஎப் பைலினை இழுத்துவந்துவிடவும். ஒவ்வொரு பக்கமாக பார்வையிடவும். உங்களுக்கு எந்த பக்கம் தேவையோ அதனை மேலே உள்ள டார்கெட் டாக்குமெண்டில் இழுத்துவந்துவிடவும்..இதுபோல ஒவவொரு தேவைபடும் பக்கத்தினையும் தேர்வு செய்து புதிய பிடிஎப் பைலினை உருவாக்கவும். அதனை சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
அதுபோல உங்களுடைய பிடிஎப் பைலினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.இன்புட்டில் தேவைப்படும் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள கன்வரட் கிளிக் செய்யவும்.

சில வினாடிகளில் உங்களுக்கான பிடிஎப் பைலானது வேண்டிய பார்மெட்டுக்கு மாறிஇருப்பதை காணலாம் வேண்டிய இடத்தில அதனை சேமித்துவைத்து பின்னர் பயன்படுத்துங்கள். எளிமையான இந்த சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி.

நன்றி தனபாலன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...