வேலன்:-வீடியோக்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க

வீடியோக்களை நாம்நேரடியாக படம் பிடித்து கணிணியில் பதிவிறக்கம் செய்யும்சமயம் அதனுடைய கொள்ளளவு அதிகமாக இருக்கும். 1 மணிநேரம் ஓடும் வீடியோவானது 4 ஜி.பி. அளவிற்கு மேல் செல்லும் .நமக்கான வீடியோவினை நண்பர்களுக்கோ -உறவினர்களோக்கோ இணையம் மூலம் பகிரந்துகொள்வதுஅதன்  அளவு அதிகமாக இருப்பதால் சிரமம்.இந்த சிரமத்தினை போக்க நாம்வீடியோக்களை குறைந்த அளவாக மாற்ற அளவில் சிறிய எம்.பி.4 பைல்களை பயன்படுத்துகின்றோம். எம்.பி.4 பார்மெட்டை காட்டிலும் குறைவாக வீடியோவினை மாற்ற - அளவு குறையாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது:. 9 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.இதில் file size.Birate.Video Format.Audio Format video Birtate.Duration.width.Height என இதில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளது.
 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட Desired Video Size கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 10 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நாம் வீடியோவினை தேர்வு செய்யலாம். 
 இதில் நாம் வீடியோவினை கட் செய்யவும் அளவினை குறைக்கவும்.வீடியோவினை Aspect Ratio படி நாம் குறைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
இதில் உள்ள Compress  கிளிக் செய்திட சிலநொடிகளில் நமக்கான வீடியோ அளவில் குறைந்து கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நொடிகளில் நமக்கான வீடி யோ அளவில் :குறைந்து உள்ளதை காணலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயன்தரும், தேவைப்படும் மென்பொருள்... நன்றி...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் பயன்தரும், தேவைப்படும் மென்பொருள்... நன்றி..ஃஃ

நன்றி தனபாலன் சார்...

வாழ்கவளமுடன்
வேலன்.

Srinivasan Jayaraman said...

sir,
where are you get this information sir, really amazing sir,
you are my first tutor sir

thanks
srinivasan

Related Posts Plugin for WordPress, Blogger...