வேலன்:-மொத்தமாக ஸ்கேன் செய்த புகைப்படங்களை தனிதனியே சேமிக்க

புகைப்படங்களை மொத்தமாக வைத்து ஸ்கேன் செய்தபின்னர் அதனை தனிதனியே சேமிக்க முடியுமா என நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கேன சாப்ட்வேர்கள் உள்ளதா என தேடிப்பார்க்கையில் அவ்வளவு திருப்தியாக கிடைக்கவில்லை.போட்டோஷாப்பிலே அந்த வசதியிருக்கும்போது தனியாக எதற்கு சாப்ட்வேர் தேடவேண்டும். போட்டோஷாப்பில் அந்த வசதியினை பெற அதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்.முதலில் புகைப்படங்களை ஸ்கேன் செய்து தனியே சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் போட்டோஷாப்பினை திறங்கள்.பைல் என்பதின் கீழ் உள்ள Automate - Crop and Straighten Photos என்பதனை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சில நொடிகள் காத்திருத்தலுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் தேர்வு செய்துள்ள புகைப்படங்கள் தனிதனியே பிரிந்து உள்ளதை காணலாம். அதனை தனிதனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
ஸ்கேன் செய்த புகைப்படங்கள் மட்டுமல்லாது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்கின்ற புகைப்படங்களின் தொகுப்பினையும் நாம் தனிதனியே பிரித்து பயன்படுத்தலாம். கீழே உள்ள பூக்களின்  புகைப்பட தொகுப்பினை பாருங்கள்.

தனியே பிரிந்துள்ள புகைப்படத்தினை பாருங்கள்.. 
இவ்வாறு நீங்கள் தனிதனியே புகைப்படங்களை எளிதில் பிரித்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

'பரிவை' சே.குமார் said...

அவசியம் பயன்படும்...

வேலன். said...

Blogger Valaipakkam said...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Blogger -'பரிவை' சே.குமார் said...
அவசியம் பயன்படும்...

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...