போட்டோஷாப்பில் நாம் செய்யக்கூடிய அனைத்துப்பணிகளையும் இந்த சாப்ட்வேர் மூலம் நாம் சுலபமாக முடிக்கலாம்.இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கலர் பிக்கர்.டூப்ளிகேட் புகைப்படம் கண்டுபிடித்தல்.இமேஜ் கன்வர்டர்.இமேஜ் கிராப்பர்.ஸ்கரின் கேப்ஷர் என 14 வகையான ஆப்ஷன்கள் பயன்படுத்தலாம்..மேலும் இமேஜின் டேடா யூஆர்எல் முகவரியையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் Gif.Jpg.png.ico.dcx.tiff.tga.psd.bmp.ps.pdf. போன்ற இமேஜ் பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது;. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்களை அதனுடைய ரெசுலேஷன் படியும்.அளவினை பயன்படுத்தியும்.எடுக்கப்பட்ட தேதியை கொண்டும் பிரிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்கள் நாம் எடுக்கும் சமயம் தலைகீழாகவும்.வலதுபுறம் இடதுபுறம்சா ய்ந்தும் இருக்கும் .அவ்வாறான புகைப்படங்களை அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சின்ன சாபட்வேரில் நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
mohamed althaf said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment