வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்

எம்.பி.3 பைல்கள் போலவே அளவில் குறைந்து தரத்தில் குறையாமல் எம்கேவி பைல் கிடைக்கின்றன. இணையத்தில் பெரும் பாலும் கிடைக்கின்ற பைல்கள் எம்கேவி வகைபைல்களாக இருக்கும்.அதனை நாம் பதிவிறக்கி வேண்டிய மாற்றாங்கள் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட விருப்பமான பார்மெட்டினை தேர்வு செய்து அதனை மாற்றிட பயன்படுத்திப்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். குறிப்பிட்ட பகுதியை நாம் கட் செய்து கொள்ளலாம்.
 வீடியோ பைல்களை வேண்டிய கோணத்தில் திருப்பிட இந்த சாப்ட்வேர் பயன்தருகின்றது.வீடியோவினை தலைகீழாகவும்.இடம்வலமாகவோ மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 வீடியோவின் ஒளிநிறத்தினை கூட்டவோ குறைத்தோ கொள்ளலாம். 

வீடியோ பைல்களில் ஆடியோ பைல்களை சேர்க்கவும்.சப்டைட்டில் சேர்க்கவும். முடியும். 
வீடியொவினை நாம் யூடியூபிலும் நாம் பதிவேற்றம் செய்யலாம்.சிறிய சிறிய வீடியொ பைல்க்ளை ஒன்றாக இணைத்து ஒரே வீடியோ பைலாக மாற்றலாம். வீடியோக்களிலிருந்து தேவையான காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்த எளிதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...