வேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker

நம்மிடம் உள்ள புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்றவும்.ஸ்லைட் ஷோவாக கண்டுகளிக்கவும். இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை ஒப்பன் செய்து நம்மிடம் உள்ள புகைப்படங்களையோ புகைப்டங்கள் உள்ள போல்டரையோ தேர்வு செய்யவும்.
ஒவ்வொரு புகைப்படங்கள் மாறும் சமயம் நமக்கு தேவையான எபக்டினை கீழெ உள்ள விண்டோமூலம் தேர்வு செய்யலாம் இதன் மூலம் புகைப்படங்கள் மாறும் சமயம் அந்த எப்பட்கள் பயனளிப்பதை காணலாம்.
அதுபோல பாடலையும் நாம் இதில் சேர்க்கலாம் இதில் உள்ள Add Audio கிளிக் செய்வதன் மூலம் தேவையான பாடலை தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு புகைப்படங்களும் எவ்வளவு நேரம் நமக்கு ப்ரிவியு காட்டவேண்டுமோ அந்த நேரத்தினையும் சேட் செய்யலாம். 
நமக்குகான புகைப்படங்கள் ஆடியோ எபெக்ட்டுக்ள் சேரத்த பின்னர் இதில் உள்ள ப்ரிவியு பாரத்தக்கொள்ளலாம். சரியான இருப்பின் பின்னர் இதில் உள்ள கிரியேட் கிளிக் செய்யவும். உங்களுடைய பைலினை நீங்கள் யூடியூப் வீடியோவாக மாற்ற விரும்பினால் உங்கள் கூகுள் அக்கவுண்ட ஓப்பன் செய்து லாகின் ஆகியபின்னர் யூடியூபில் பதிவேற்றம் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
யூடியூப் மூலம் பதிவேற்றப்பட்டதால் உங்களுடைய வீடியோவினை இணையத்தில் உள்ள அனைவரும் காணும் படி செய்யலாம். மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்பிவைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...