வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.

தவறுதலாக டெலிட் செய்த பைல்களையும் பழைய பைல்களையும் ஹார்ட்டிஸ்கிலிருந்து மீட்டுஎடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நமக்கு தேவையான புகைப்படங்களையோ.வீடியோக்களையோ.ஜிப் பைல்களையோ.டாக்குமெண்ட்டுகளையோ.ஜிமெயில் பைல்களையோ,ஆடியோ பைல்களையோ என எதுவேண்டுமோ அதனை மீட்டுஎடுக்கலாம். அல்லது குறிப்பிடட பைல்மட்டும் வேண்டுமானாலும் அதனை தேர்வு செய்து  மீட்டுஎடுக்கலாம். தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். நீங்கள்பென்டிரைவிலிருந்து மீட்டுஎடுக்கவேண்டுமானால் பென்டிரைவினை கணினியில் இணைத்து அதன் டிரைவினை தேர்வு செய்திடவும்.

 தேவையானதை தேர்வு செய்தபின்னர் அடுத்துள்ளதை கிளிக் செய்யவும். உங்கள் டிரைவானது ஸ்கேன் செய்யப்பட்டு பைல்கள் டவுண்லோடு ஆகும்.
ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு ஸ்கேன் கம்ளிட்டட் என்கின்ற தகவல் கிடைக்கும்.
 நீங்கள் மீட்டுஎடுக்கப்பட்ட பைல்களின் விவரம் உங்களுக்கு கிடைக்கும். அதன் ப்ரிவியூவினையும் நீங்கள் காணலாம்.
இறுதியாக தேவையானதை தேர்வு; செய்து பின்னர் இதில் உள்ள ரெக்கவர் பட்டனை கிளிக் ;செய்தால் உங்களுக்கான ரெக்கவர்பைல்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...