வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக

சிடி டிரைவில் சிடி எழுதி முடித்தவுடன் சிடி வெளியே வந்துவிடும். பின்னர் அதில் எழுதியதை சோதித்து பார்க்க மீண்டும் சிடியை டிரேயின் உள்ளே தள்ளி பார்க்கவேண்டும். ஆனால் சிடியை வெளியில் வராமல் சிடி எழுதி முடித்ததும் எழுதியதை சோதித்து பார்க்கலாம். அதற்கு சின்ன மாற்றம் கணினியில் செய்தால் போதுமானது. நீங்கள் உங்கள் மை கம்யூட்டரினை கிளிக் செய்து நீங்கள்எந்த சிடி டிரைவினை பயன்படுத்துகின்றீர்களோ அந்த டிரைவினை தேர்வு செய்யவும். 


பின்னர் அதில் ப்ராபர்டீஸ் தேர்வு செய்திடவும். வரும் விண்டோவில் ரேகார்டீங் டேபினை தேர்வு செய்யவும் அதில் Automatically ejact the disc after a Mastered burn என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு ஒ.கே. செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் சிடியை எழுதுகையில் சிடி எழுதி முடித்ததும் வெளிவராது. நீங்கள் எழுதியதை சோதனை செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...