வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.

பணிநேரத்தில் சிலர் பழைய பாடல்கள் கேட்பார்கள். சிலர் பக்தி பாடல்கள் கேட்பார்கள்.சிலருக்கு இயற்கையான ஒலிகேட்டால் மனது ரிலாக்ஸ் ஆகும். அவர்களுக்காக இந்த மென்பொருள் இருக்கின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். இதில் உள்ள டேபினை கிளிக்செய்திட Forest.Countryside.Creek.Fireplace.Greenwood.Night Forest.Rainy Day.Sweet Summer Rain.Tropical Reach போன்ற டேப்புகள் கிடைக்கும்.
நமக்கு விருப்பமான டேபினை கிளிக் செய்திட அதற்குண்டான இசை ஒலிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக Forest கிளிக் செய்தால் நீங்கள் காட்டில் இருக்கும் சமயம் எந்த எந்த ஒலிகள் உங்களுக்கு கேட்குமோ அந்த ஒலிகள் உங்கள் கணினியில் பின்னணியில் ஒலிக்க ஆரம்பிக்கும். நீங்கள் அடரந்த காட்டில் அமர்ந்து பணிசெய்வதான உணர்வு உங்களுக்கு தோன்றும்.இதுபோல ஒவ்வொரு இடத்தினையும் தேர்வு செய்து ஒலிகளை கேட்டு மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...