முந்தைய பதிவுகளில் டிரைன் ஓட்டுவது - பைக் ஓட்டுவது -கார் ஓட்டுவது என பார்த்தோம். இன்றைய பதிவினில் டாக்ஸி டிரைவராக ஆகலாம் வாங்க.65 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஒப்பன ஆகும்.
தேவையான வண்டியை தேர்வு செய்தபின் விளையாட ஆரம்பியுங்கள்.உங்களுக்கு அழைப்பு வரும். வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டும்.உங்களுக்கு ரூட் மேப்பும் கிடைக்கும். அதில் குறிப்பிட்ட இடத்திற்கு நம்ம ஊரில் உள்ள சில டாக்ஸிடிரைவர்கள் போல் ஊர் சுற்றி அழைத்துசெல்லாமல் பயணிகளை அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்க்கவேண்டும்.குழந்தைகள் விரும்பி விளையாடுவார்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
எனது முந்தைய பதிவான வேலன்-500 ஆவது பதிவு க்கு வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.