டியுப் லைட் VS நாம்

சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள் . அப்படியும்

முடியவில்லையெனில்
கட்டுரையின் இறுதியில் உள்ள வழியை முயற்சிக்கவும்.


1. விளக்கு எரியவில்லை.

சுட்ச் போடவும்.

2.விளக்கு எரியத்துவங்குவதற்கான அறிகுறிகளே இல்லை.

அ. எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா?

ஆ. ஸ்டார்டர் சரியாக பொருந்தியுள்ளதா?

இ. பல்ப் நல்ல நிலையில் உள்ளதா?

ஈ. சோக் நல்ல நிலையில் உள்ளதா?

உ. கெப்பாசிட்டர் நன்றாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

3.விளக்கின் இருபக்கமும் சிவப்பு நிறத்தில் எரிகிறது?

அ.பிரகாசமாக எரிய வாய்ப்பில்லை. ஸ்டார்டரை மாற்றவும்.
4. விளக்கின் ஒரு பக்கம் மட்டும் எரிந்து விளக்கு முழுவதும் எரிய வாய்ப்பில்லை?

அ. கனெக்சனை சரி பார்க்கவும்.

ஆ. ஸ்டார்டரை மாற்றவும்.

5. விளக்கு விட்டு விட்டு எரிகிறது.?

அ. டி யூப் லைட் பரிசோதிக்கவும்.

ஆ. இணைப்புகளை சரிபார்க்கவும்.

இ. ஸ்டாடரை மாற்றவும்.

ஈ. சோக்கை பரிசோதிக்கவும்.

உ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.


6. எரிந்து கொண்டிருந்த விளக்கு விட்டு விட்டு எரிதல்.

அ. டி யூபை பரிசோதிக்கவும்.

ஆ. ஸ்டாடரை மாற்றவும்.

இ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.

7. விளக்கில் வளை வளைவுகளாக ஒளிக்கற்றை நகர்தல்.

அ. புதிய விளக்குகளில் வர வாய்ப்புண்டு. ஆதலால் விளக்கை ஆப்
செய்து விட்டு சிறிது நேரம் கழித்து ஆன் செய்யவும். அப்போதும்
அப்படியே இருந்தால் டியூப் லைட்டை மாற்றவும்.

8. விளக்கு எரிய தாமதமாகுதல்?

அ. சோக்கை சோதிக்கவும்.

ஆ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.

9. சுவிட்ச் ஆன் செய்தவுடன் பியூஸ் ஆகிவிடுதல்?

அ. இணைப்புகளில் எர்த் ஆகியிருக்கலாம். பரிசோதிக்கவும்.

ஆ. சோக் எர்த் ஆகியிருக்கலாம் . பரிசோதிக்கவும்.

10. வெளிச்சம் திடீரென குறைதால்?

அ. டியூபின் ஆயுட்காலம் முடியும் சமையம். இணைப்புகளை
சரிபார்த்து வேறு டியூப் லைட் மாற்றவும்.

11. புதிய விளக்கு சில நாட்களிலேயே எரியவில்லை?

அ. அளவுக்கு அதிகமான திறன் கொண்ட சோக்காக இருக்கலாம்.

சோக்கை மாற்றவும்.

ஆ. வோல்டேஜ் அதிகமாக இருக்கலாம்.


சுய சோதனைகள்.


சோக்குகளை பரிசோதித்தல்.

சோக்குடன் சீரிஸ் முறையில் ஒரு சாதா பல்பை (குண்டு பல்ப்)

இணைத்து ஆன் செய்யும்போது பல்ப் டிம்மாக எரிந்தால் சோக்

நல்ல நிலையில் உள்ளது எனவும்., பிரகாசமாக எரிந்தால்
அல்லது எரியவில்லையென்றால் சோக் பழதாகிவிட்டது என

அறியலாம்.


ஸ்டார்டர்களை பரி சோதித்தல்.

ஸ்டாடருடன் சீரிஸ் முறையில் ஓரு சாதா பல்பை இணைத்து

ஆன் செய்யும் போது பல்ப் விட்டு விட்டு எரிந்தால் ஸ்டாடர்

நல்ல நிலையில் உள்ளது எனவும், தொடர்ந்து சீராக எரிந்தால்

ஸ்டாடர் பழுது அடைந்துள்ளது என்றும் அறியலாம்.


மேற்கண்ட முயற்சியில் டியூப்லைட் எரியவில்லை யெனில் வேறு ஓரு

புதிய டியூப் லைட் செட் வாங்கி மாற்றிவிடவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

Sharepoint the Great said...

hi. please remove word verification here [ சொல் சரிபார்ப்பு ] ஆங்கிலத்தில் captca.

டியூப் லைட் பற்றி இவ்வளவு விரிவான அலசலை நான் வேறெங்கும் கண்டதில்லை.

அடிக்கடி ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டே இருங்கள்.

Raj said...

உங்களுக்கு பொழுது போகலன்னா...இப்படியா எங்கள சோதிக்கறது

வேலன். said...

நண்பர் தமிழ்நெஞ்சம் மற்றும் ராஜ் ஆகியவர்களுக்கு நன்றி.

வாழ்க வளமுடன்,
வேலன்.

biravan said...

SITHAPU

WELL DONE! BUT U ALSO WANT TO RESEARCH ABOUT MANY THINGS AROUND YOUR STORE! IT WILL CREATE A NEW WEB SITE! OK THANKS TO RAJ FOR GOOD COMMENT!

வேலன். said...

WELL DONE! BUT U ALSO WANT TO RESEARCH ABOUT MANY THINGS AROUND YOUR STORE! IT WILL CREATE A NEW WEB SITE! OK THANKS TO RAJ FOR GOOD COMMENT!//

தங்கள் பதிலுக்கு நன்றி .

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...