போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1




போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை

பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால்

அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில

அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட

விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ

வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக

கற்க வேண்டியதில்லை.

இப்போது கற்க போகும்

பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது

மூலம் நாம் நமது சின்ன சின்ன
தேவைகளையே பூர்த்தி செய்து

கொள்ளலாம். போட்டோஷாப்பில்

எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து

கொள்ள விரும்புகின்றேன். அதுபோல்

போட்டோஷாப் அடிப்படை பாடங்களில்

வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில்

போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை

குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு

போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத

புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

சரி பாடத்திற்கு போவோம்.

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்

முதலில் போட்டோஷாப் -6, அடுத்து

போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8

(cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2),

போட் டோஷாப் -10 (cs-3) ,

இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4)

வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும்

நம்மிடம் போட் டோஷாப் பதிவு

7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம்.

பதிவு அதிகமாக செல்ல செல்ல

வசதிகள் கூடிக்கொண்டு செல்லும்.

நமது தேவைக்கு போட் டோஷாப்

7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால்

போதுமானது.

முதலில் உங்களது போட்டோஷாப்

திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள

File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள்

மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள

Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.



நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு

புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு

தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து

தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு

கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு

புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான

தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான

புகைப்படம் தேர்வு செய்யவும்.



இப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால்

உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ்

கிடைக்கும். இதில் பல டூல்கள் பல

உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில்

முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட்

செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை

இந்த டூலின் அருகே கொண்டு சென்றால்

உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.


இதில் முதலில் உள்ள Rectangular Marquee Tool

செலக்ட் செயயவும். அதை நீங்கள தேர்வு

செய்த படத்தின் தேவையான இடத்தில்

மவுஸால் தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த

மாதிரி கிடைக்கும்.


இப்போது நீங்கள் Edit சென்று Copy யை தேர்வு செய்யவும்.

மறந்தும் Cut தேர்வு செய்ய வேண்டாம். அடுத்து

நீங்கள் மீண்டும் File சென்று அதில் New தேர்வு

செய்யவும். உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.


இதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அதை

அப்படியே ஓகே கொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி

பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லி

தருகின்றேன் . அப்போழுது நாம் மாற்றங்கள்

செய்யலாம்).உங்களுக்கு ஒரு வெள்ளை

நிற காலம் ஓப்பன் ஆகும்.

மீண்டும் நீங்கள் Edit சென்று அதில் உள்ள Paste

கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு

செய்த படம் மட்டும் காபி ஆகும்.



இதை தனியே Save கொடுத்து சேமித்து வைக்கவும்.

இது போல் Eliplitical Marque Tool செலக்ட் செய்யவும்.



நான் இந்த படத்தில் (இது கங்கை கொண்ட சோழபுரம்

கோயிலின் கோபுரம் ) கோபுரம் மட்டும் தேர்வு

செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee

Tool -ல் செய்தவாறு காபி - பேஸ்ட் செய்யவும்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.


இதில் உள்ள மற்ற இரண்டு டூல்கள் நமக்கு தேவை

படாது. எனவே அதை விட்டு விடுவோம்.

போட்டோஷாப் பற்றிய அடுத்த பாடம்

அடுத்த சனிக்கிழமை இரவு பதிவிடுகின்றேன்.

நீங்கள் போட்டோஷாப்பில் பயிற்சி நன்கு

எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன்.

இந்த டூலால் என்னவெல்லாம் செய்யலாம்

என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.

இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

உங்கள் மேலான கருத்துக்களை

பதிவிடுங்கள்.

வாழ்க வளமுடன்.

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
PHOTOSHOP HINTS
பிக்ஸல் என்பது Photoshop –ல் அதிகம் பயன்படகூடிய அவசியம்
அறிய வேண்டிய ஒன்றாகும். நாம் பார்க்கின்ற படங்கள் அனைத்தும்
நெருக்கமான தெடர்ச்சியான புள்ளிகளால் ஆனது. அந்த புள்ளிகள்
அனைத்தும் தனிதனி நிறத்தையும் (Colour)பிரகாசத்தையும்(Brightness)
உடையது. இந்த புள்ளிகளே பிக்ஸல் (Pixel) என அழைக்கப்படுகிறது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

41 comments:

வடுவூர் குமார் said...

நல்ல தொடராக அமைய வாழ்த்துக்கள்.

கிருது said...

THANKS FOR YOUR PHOTOSHOP LESSON

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
நல்ல தொடராக அமைய வாழ்த்துக்கள்.//

தங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றி நண்பர் வடுவூர் குமார் அவர்களே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

கிருது கூறியது...
THANKS FOR YOUR PHOTOSHOP LESSON//

நன்றி நண்பர் கிருது அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Senthil said...

Thank you thank you !! very useful lession

ஆனந்த். said...

அருமையான தொடர், தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

அருமையான துவக்கம். தொடரவும்.

நன்றிகள்.

உங்கள் பார்வைக்கு

இங்கே பார்க்கவும்


இங்கே சொடுக்கவும்





please visit the following links

http://www.w3schools.com/HTML/html_links.asp

http://www.w3schools.com/tags/att_a_href.asp

டவுசர் பாண்டி said...

என்க்கு கூடோ பிர்ரா போல எழ்துறியே ரொம்படான்குசுப்பா.
நம்ப ஏரியா பக்கமா,
வா தலிவரே.

Shajahan.S. said...

மிகவும் நல்லதொரு முயற்சி, வாழ்த்துக்களும்,நன்றியும் உங்களுக்கு!

வேலன். said...

Sendha கூறியது...
Thank you thank you !! very useful lession//

கருத்துக்கு நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
அருமையான தொடர், தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
அருமையான துவக்கம். தொடரவும்.

நன்றிகள்.

உங்கள் பார்வைக்கு

இங்கே பார்க்கவும்


இங்கே சொடுக்கவும்





please visit the following links

http://www.w3schools.com/HTML/html_links.asp

http://www.w3schools.com/tags/att_a_href.asp//

நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
என்க்கு கூடோ பிர்ரா போல எழ்துறியே ரொம்படான்குசுப்பா.
நம்ப ஏரியா பக்கமா,
வா தலிவரே.//

கட்டாயம் உங்க ஏரியா பக்கமா வர்ரென் ஓகேவா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Shajahan.S. கூறியது...
மிகவும் நல்லதொரு முயற்சி, வாழ்த்துக்களும்,நன்றியும் உங்களுக்கு!//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...

வாழ்க வளமுடன்

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
வாழ்க வளமுடன்//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்.
வேலன்.

அசோசியேட் said...

நல்ல முயற்சி! வாழ்த்துக்களுடன்,

வாழ்க வளர்க வளமுடன்.. !!

வேலன். said...

அசோசியேட் கூறியது...
நல்ல முயற்சி! வாழ்த்துக்களுடன்,

வாழ்க வளர்க வளமுடன்.. !!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

தியாகராஜன் said...

மிகவும் உபயோகமான வகுப்பைத் தொடர்ந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்.

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
மிகவும் உபயோகமான வகுப்பைத் தொடர்ந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்.//

நன்றி தியாகராஜன் அவர்களே..
தாங்களை ரொம்பநாளாக பதிவில் காணவில்லையே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Adriean said...

அருமையான பதிவு.நன்றி

நிஜமா நல்லவன் said...

நன்றி!

vasuki said...

MY BEST WISES TO ALL YOUR WORK .
I WANT TO TYPE IN TAMIL BUT I DON'T KNOW .NOW I AM IN ANDHRA .(MY NATIVE IS SALEM TAMIL NADU .)
I NEED YOUR HELP .

---THOTAVASU

சூரியப்பிரகாஷ் said...

அருமையான ஆரம்பம்.......

எனக்கு இன்றுதான் இணைப்பு கிடைத்தது.....

எளிமையான விளக்கம்......

பிக்ஸல் பற்றி கூறிய தகவலுக்கு மிக்க நன்றி.......

மேலும் வளர வாழ்த்துக்கள்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்கு இது கட்டயம் உதவும். முழுக்க எழுதியதும் பிரதி செய்து வைப்பதே என விருப்பம்.

வேலன். said...

Chandran கூறியது...
அருமையான பதிவு.நன்றி//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

நிஜமா நல்லவன் கூறியது...
நன்றி!//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

vasuki கூறியது...
MY BEST WISES TO ALL YOUR WORK .
I WANT TO TYPE IN TAMIL BUT I DON'T KNOW .NOW I AM IN ANDHRA .(MY NATIVE IS SALEM TAMIL NADU .)
I NEED YOUR HELP .

---THOTAVASU//

தமிழில் தட்டச்சு செய்ய விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

சூரியப்பிரகாஷ் கூறியது...
அருமையான ஆரம்பம்.......

எனக்கு இன்றுதான் இணைப்பு கிடைத்தது.....

எளிமையான விளக்கம்......

பிக்ஸல் பற்றி கூறிய தகவலுக்கு மிக்க நன்றி.......

மேலும் வளர வாழ்த்துக்கள்....//

நன்றி நண்பரே...

வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
எனக்கு இது கட்டயம் உதவும். முழுக்க எழுதியதும் பிரதி செய்து வைப்பதே என விருப்பம்.//

நல்லது அவ்வாறே செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்

AshiQ said...

இது பலபேருக்கு மிக மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை, எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடவேண்டாம்
என்பது எனது அன்பு கட்டளை
அன்புடனும் கட்டளையுடனும்
ஆஷிக்

Nara said...

பதிவுகளில் லேபில் எப்படி யூஸ் பண்ணுவது. பிளாக்கர் அட்மின் -ல் லாக் இன் செய்து வேறு பெயரில் எப்படி பதிவு இடுவது. அதாவது மெச்சு என்ற பெயரில் பிளாக் அக்கவுண்ட் உள்ளது நாரா என்ற பெயரில் எப்படி இடுகை இடுவது

Rajasubramanian S said...

நல்ல ஆரம்பம்.வாழ்த்துக்கள்.மேலும் இடுகைகளை விரைவில் எதிர்பர்க்கிறேன்.
ராஜசுப்ரமணியன்.S

வேலன். said...

இது பலபேருக்கு மிக மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை, எக்காரணம் கொண்டும் இதை நிறுத்திவிடவேண்டாம்
என்பது எனது அன்பு கட்டளை
அன்புடனும் கட்டளையுடனும்
ஆஷிக்ஃ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஆஷிக் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Narayanan கூறியது...
பதிவுகளில் லேபில் எப்படி யூஸ் பண்ணுவது. பிளாக்கர் அட்மின் -ல் லாக் இன் செய்து வேறு பெயரில் எப்படி பதிவு இடுவது. அதாவது மெச்சு என்ற பெயரில் பிளாக் அக்கவுண்ட் உள்ளது நாரா என்ற பெயரில் எப்படி இடுகை இடுவதுஃஃ

தங்களின் கேள்விக்கு தனியே பதிவிடுகின்றேன் நண்பரே

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ராஜசுப்ரமணியன் S கூறியது...
நல்ல ஆரம்பம்.வாழ்த்துக்கள்.மேலும் இடுகைகளை விரைவில் எதிர்பர்க்கிறேன்.
ராஜசுப்ரமணியன்.S

வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்,
வேலன்.

துரை.வேலுமணி said...

யுனிகோடில் டைப் செய்த தமிழ் எழுத்தை எப்படி போட்டோ ஷாப்பில் கொண்டு வருவது. ...

test said...

thangalin photoshop paadangal anagu migavum pitiththulathu

JAYA KUMAR said...

Thiru Velan avargalukku,

Thangalin Photoshop padithean, Naan Ungal inaiyathirku puthusu, intha photoshop dowload seivathu eppadi enpathai vilakkavum.

nantry Anbudan JAI

ramu said...

sir, my name is ramu. i hv been working iraq right now.i hd been looking a website to learn photo shop. unfortunately i hd to see ur website. oh. thank u god. sir, u have been doing a great service for tamil community........ from today i am student... thank u so much..

Unknown said...

UNGALUDAIYA INTHA SAVAIKU MIGAVUM NANDRI

Related Posts Plugin for WordPress, Blogger...