பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy way to Calculate your Age

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய
(Easy way to Calculate your Age)


நண்பர் ஒருவர் நம்மைபார்க்க வருகிறார்.
நண்பர்:- வணக்கம்..நலமா?
நாம்:- நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?வீட்டில்
எல்லோரும் நலமா?
நண்பர்:-எலலோரும் நலம்.
இப்படி ஆரம்பித்த பேச்சின் நடுவே நமது நண்பர்
நமது வயதை கேட்கிறார்.
நண்பர்:- ஆமாம் உங்கள் வயது என்ன?
நாம்:- அது ஆவுது மூன்று கழுதை வயது?
நண்பர்:- அட ஒருகழுதைக்கு என்ன வயது -
அதை சொல்லுப்பா?
நண்பர்:- சரி அதை விடு. உனக்கு திருமணமாகி
எவ்வளவு நாள் ஆகின்றது.
நாம்:- அட நீ வேறே...அதையெல்லாம் ஞாபகப்படுத்தி
கொண்டு.....
நண்பர் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு விடைபெறுகிறார்.
சரி நமது வயது தான் என்ன, ? திருமணம் ஆகி எவ்வளவு
நாள் ஆகின்றது. நமது குழந்தைகளின் வயது என்ன?
நண்பர் சென்றதும் நாம் யோசிக்கின்றோம். நமது வயதை
தோராயமாக கணக்கிடலாம். ஆனால் வருடம்-மாதம்-
தேதி கணக்கிட என்ன செய்வது.? நமக்கு உதவ தான்
Excel உள்ளதே..அதில் வயதின் கணக்கு எப்படி போடுவது
என பார்ப்போம்.
முதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்
கீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்
கிடைக்கும்.


அதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்
கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்
ஆகும்.


அதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -
ஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு
செய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,
ஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,
மகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக
உள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு
செய்யுங்கள்.


சரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள
A1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்
உங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.
அடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை
பதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய
வயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்
=now( ) என பதிவிடுங்கள்.

இப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய
தேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ
அந்த தேதி வரும்)

சரி வயதை கணக்கிட என்ன செய்வது?
அடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து
கீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு
செய்யவும்.
=DATEDIF(A1,A2,"y") & " years, " & DATEDIF(A1,A2,"ym") & " months, " & DATEDIF(A1,A2,"md") & " days"
மீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு
விடை கிடைக்கும்.

இப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா?
இதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த
தேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்
தினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு
Excel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு
பெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்
வைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை
கிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.
ஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்
வயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண
தேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
(புதியவர்கள் அங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.)
மரண தேதியை அறிய கிளிக் செய்யவும்
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் செல்போனில் நீங்கள் சென்றஇடத்தில் டவர் இல்லையா? நீங்கள் 112 டயல்செய்தால் அருகில்உள்ள பிற நிறுவனத்தின் டவரில்இருந்து உங்களுடைய செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். 

 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

Amazing Photos said...

good post.

Great Explanation..

Fine to visit here.

Thanks

வேலன். said...

Amazing Photos கூறியது...
good post.

Great Explanation..

Fine to visit here.

Thanks//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

malar said...

வேலன் சார் உங்களுடைய பதிவு ஓவொன்றும் பிரமிக்க வைக்கிறது .நல்ல பதிவுகள் தொடரட்டும் உங்கள் பணி.

malar said...

தமிழில் தவறு இல்லாமல் தட்டச்சு செய்வது எப்படி ?என்று பதிவு போட்டு இருக்கிறீர்களா ?

வேலன். said...

malar கூறியது...
வேலன் சார் உங்களுடைய பதிவு ஓவொன்றும் பிரமிக்க வைக்கிறது .நல்ல பதிவுகள் தொடரட்டும் உங்கள் பணி.//

நன்றி சகோதரி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

malar கூறியது...
தமிழில் தவறு இல்லாமல் தட்டச்சு செய்வது எப்படி ?என்று பதிவு போட்டு இருக்கிறீர்களா ?//

இல்லை ஆனால் இலவச தமிழ்பாண்ட்கள் பயன்படுத்துவதைபற்றி
பதிவிடஇருக்கின்றேன். தாங்கள் அடிக்கடி தமிழில் எழுதினால் பிழைகுறைய வாய்ப்புண்டு. அதுபோல் எழுதிமுடித்துவிடுங்கள். சிறிது நேரம் வேறு ஏதாவது வேலை பாருங்கள். பிறகு ஒருமுறை நீங்கள் எழுதியதை படித்துப்பார்த்தால் உங்களுக்கு நீங்கள் எழுதியதில் உள்ள தவறுகள் பிடிபடும்.
முயற்சிசெய்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜுர்கேன் க்ருகேர் said...

வயசு வேற ஆயிட்டே போகுது.
அதை வேற நினைவு படுத்திட்டீங்க!

தமிழ்நெஞ்சம் said...

I saw this post in Tamilmanam's Hot post.

Great achievement.

congrats.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
வயசு வேற ஆயிட்டே போகுது.
அதை வேற நினைவு படுத்திட்டீங்க!//

வயது உடலுக்குதான் ஆகின்றது.நமது மனதுக்கல்ல. அது என்றும் குழந்தைதனமானது தான்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
I saw this post in Tamilmanam's Hot post.

Great achievement.

congrats.//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன்,

வழக்கமாக இந்தப் பதிவும் நன்றாக இருந்தது என்று சொல்லி சொல்லி போரடித்து விட்டது, அதனால் வித்யாசமாக இந்தப் பதிவு மிக உபயோகமானதாக நாம் வீணாய் அல்லது தானாய் எவ்வளவு காலத்தை கடத்தி உள்ளோம் என் தானாய் கணித்து கண நேரத்தில் கணக்கிட்டு கண் முன்னே நிறுத்தி விழிகளை வியப்படையச் செய்தது உங்கள் பதிவு.

\\மற்றும் நண்பர் ஜுர்கேன் கூறியது முற்றிலும் சரி
வயசு வேற ஆயிட்டே போகுது.
அதை வேற நினைவு படுத்திட்டீங்க!\\


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

தியாகராஜன் said...

super

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

வழக்கமாக இந்தப் பதிவும் நன்றாக இருந்தது என்று சொல்லி சொல்லி போரடித்து விட்டது, அதனால் வித்யாசமாக இந்தப் பதிவு மிக உபயோகமானதாக நாம் வீணாய் அல்லது தானாய் எவ்வளவு காலத்தை கடத்தி உள்ளோம் என் தானாய் கணித்து கண நேரத்தில் கணக்கிட்டு கண் முன்னே நிறுத்தி விழிகளை வியப்படையச் செய்தது உங்கள் பதிவு.


\\மற்றும் நண்பர் ஜுர்கேன் கூறியது முற்றிலும் சரி
வயசு வேற ஆயிட்டே போகுது.
அதை வேற நினைவு படுத்திட்டீங்க!\\


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

தங்களை பதிவில் இன்னும் காணவில்லையே என காத்திருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

தியாகராஜன் கூறியது...
super//

நன்றி நண்பரே...சி.டி.வந்து சேர்ந்ததா?

வாழ்க வளமுடன்:,
வேலன்.

Jeyaram jey said...

உங்கள் படைப்புகள் அனைத்தும் மிக அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...