Showing posts with label VELAN. Show all posts
Showing posts with label VELAN. Show all posts

வேலன்:-போட்டோ எடிட்டர்-Softorbits photo editor

புகைப்படங்களை Crop.Rotate.Remove.Text.Image Correction.Resize போன்ற பணிகளை செய்ய இந்த போட்டோ எடிடடர் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உங்கள் விருப்பமான புகைப்படத்தினை கணிணியில் இருந்து தேர்வு செய்யவும். 
 இதன் மேல்புறத்தில் நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள். 
 அதில முதலில் உள்ள கிராப் கிளிக ;செய்திட உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்டத்தின் உயரம் மற்றும் அகலத்தினை தேர்வு செய்து இதில் உள்ள கிராப் பட்டனை கிளிக் செய்யவும். சில நொடிகளில் நீங்கள் விரும்பிய அளவில் புகைப்படம் கிடைக்கும். இதில் விருப்பப்பட்டால் உங்களுக்கு தேவையில்லாதவர்களின் புகைப்டத்தினையும் நீக்கி விடலாம்.அடுத்துள்ள டேபினை கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வலதுபுறம் ஒப்பன் ஆகும். இதில் புகைப்படத்தினை இடது புறமாகவோ வலது புறமாகவோ மாற்றலாம். மேலும் ஓரு குறிப்பிடட கோணத்தில் படங்களை மாற்றி அமைக்கலாம். அதற்கான வசதி இதில கொடுத்துள்ளார்கள். 
அடுத்து ரீமூவ் டூல் கொடுத்துள்ளார்கள். இதில் தேவையில்லாத பகுதியை நீக்கிவிடலாம். புகைப்படத்தில் தேவையில்லாமல் இருக்கும் வாட்டர் மார்க்கை நீக்கிவிடலாம். தேவையில்லாத நிறங்கள் இருப்பின் அதனை தேர்வு செய்து அதனை நீக்கிவிடலாம். புகைப்படங்களில் தேதி இருந்தால் அதனை நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 சிலபுகைப்படங்கள் அதிக வெளிச்சத்துடனும் சில புகைப்படங்கள் குறைந்த வெளிச்சத்துடனும் இருக்கும் அவ்வாறான புகைப்படங்களை நாம் வேண்டிய வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம்.
புகைப்படங்களில் வேண்டிய குறிப்புகளையோ அதில் உள்ள நபர்களின் பெயர்களையோ  போட்டோவிலேயே தட்டச்சு செய்ய இந்த டூல் பயன்படுகின்றது. இதனை பயன்படுத்தி நாம் விரும்பிய டெக்ஸ்டை விரும்பிய பாண்ட்டில் தட்டச்சு  செய்து கொள்ளலாம்.

 புகைப்படங்களை கேமராவிலோ. செல்போனிலோ எடுக்கும் சமயம் அது ஒவ்வொரு பிக்ஸல் அளவுகளில் இருக்கும். நாம் விரும்பிய அளவில் புகைப்படங்களை கொண்டுவரவும் விரும்பியபிக்ஸல் எடுத்து வரவும் இந்த டூல் நமக்கு பயன்படுகின்றது. கீழே உள் ள விண்டோவில் பாருங்கள்.

ஓரே சாப்ட்வேரிலேயே ஆறுக்கும் மேற்பட்ட பணிகளை செய்து நமது வேலையை சுலபமாக்குகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ப்ளேயர்-Wondershare Player.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை பார்வையிடவும் அதில் இருந்து தேவையான ப்ரேமை புகைப்படம் எடுக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான வீடியோ பைலினையோ - போல்டரையோ தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள பிளே பட்டனை அழுத்தவும் உங்களுக்கான வீடியோவானது ஓட ஆரம்பிக்கும்.
உங்களுக்கு தேவையான ப்ரேம் வந்ததும் இதில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்திட உங்களுடைய புகைப்படம் சேமிப்பாகும். புகைப்படங்கள் தனியே போல்டரில் சேர்ந்துவிடும் தேவைப்படும் சமயம் நாம் அதனை எடுத்து பயன்படுத்தலாம். பயன்படுத்த சுலபமான இந்த ப்ளேயரை பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட

நமக்கான புகைப்படங்களை சுலபமாகவும் எளிதாகவும் பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து நம்மிடம் உஎள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பல்வேறு வகைகளில் புகைப்படங்களை நாம் பார்வையிடலாம். தம்ப்நெயில் வியூ..ஐகான்வியூ.சிறிய ஐகான்வியூ.லிஸ்ட் வியூ என பார்வையிடலாம். புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக பார்வையிடலாம். புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு திருப்பிகொள்ளலாம். EXIF புகைப்படங்களை பார்வையிடலாம். புகைப்படங்களை ஒரு பார்மெட்டிலிருந்து வேறு ஒரு பார்மெட்டுக்கு எளிதில் மாற்றிக்ககொள்ளலாம். புகைப்படங்களை எளிதில் நேரடியாக பிரிண்ட் செய்துகொள்ளலாம். உங்கள் டெக்ஸ்டாப்பி்ன் முழு அளவிற்கும் புகைப்படங்களை பார்வையிடலாம்.இது  png, jpg, tif, bmp, ico, jpc, pcx, tga, tif, ico, jpc, jp2, pcx, pgx, pnm, pgm, ppm, ras, ska, wmf and tsp file பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது:கொள்ளளவு குறைந்த அளவிலேயே உள்ளதால் கணிணியில் அதிகம் இடத்தினை இது எடுத்துக்கொள்ளாது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள்.

அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள் இத்துடன் இணைத்துள்ளேன். 15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும்உங்களுக்கு விதவிதமான வால்பேப்பர்கள் கிடைக்கும்.மாதிரிக்கு சில படங்கள் கீழே:-


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம்.

பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன்  செய்தால் கீழ்கண்ட பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் இலக்கணம் என்றால் என்ன? capital letter.Nounds.Pronouns.Adjectives.Determiners.Verbsand Tenses.Subject -Verb.Adverbs.Prepositions.Conjections.Interjections.Sentences.Punctuation என பதினான்கு தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
நான் Sentences தேர்வு செய்துள்ளேன்.

குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்ளும் வண்ணம் படங்களுடன் விரிவான விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.
படித்துப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் -போட்டோ இன்ஸ்டுமென்ட்

போட்டோஷாப்பில் தான் எவ்வளவு வசதிகள்.அந்த வசதிகளை தனியே பிரித்து எடுத்து விதவிதமான சாப்ட்வேர்கள் நிறையஉள்ளது.அந்த வகையில் இந்த போட்டோ இன்ஸ்டுமென்ட் அருமையாக உள்ளது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில கீழே உள்ள 7 டூல்கள் Glamour Skin.Glamour Skin,Brightness-Contrast,Glamour Skin.Colorize.Clone,Object removel.Skin Cleaner,Liquify உள்ளன.  உங்களுக்காக வீடியோவாக அவை பிளே ஆகும். 
தேவையான டூலை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்தால் அந்த டூலுக்கான வீடியோ பிளே ஆக ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஒரு டூலின உபயோகத்தினை இப்போது பார்க்கலாம்.திருமணம் - பிறந்த நாள் -போன்ற விஷேஷங்களின் போது நாம் புகைப்படம் எடுக்கும் சமயம் கரட்டாக யாராவது தலை நுழைத்துவிடுவார்க்ள். கை படத்தில் வந்துவிடும். அந்த மாதிரியான நேரத்தில் அருமையாக அதனை இந்த டூல் மூலம் நீக்கி விடலாம். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
கடற்கரையில் மகனை புகைப்படம் எடுக்கும் போது பாட்டி நுழைந்துவிட்டார். அவரை படத்திலிருந்து எடுக்க இந்த சாப்ட்வேரை உபயோகித்தேன்.
இதில் தேவையில்லாத பகுதியை நீக்கியபின் வந்துள்ள படம் கீழே-
எளிமையான விளக்கம் அவர்களே வீடியோவில் கொடுத்துள்ளதால் நான் விரிவாக விளக்கவில்லை.இதனைப்போலவே இதில் உள்ள பிற டூல்களையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்க்ள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- கடந்த 8-11-2010 முதல் 14-11-2010 வரை மதுரை.ரமேஸ்வரம்.திருச்செந்துர் .கன்னியாகுமரி.குற்றாலம்.பாபநாசம்.பிள்ளையார்பட்டி.
தஞ்சாவூர்.கும்பகோணம்.திருக்கடையூர்,பூம்பூகார்.
சிதம்பரம் என தென்னிந்தியாவில் உள்ள
 அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால் 
பதிவிட முடியவில்லை.இரவு தங்கும் ஊர்களிலும் பதிவிட வாய்ப்புகிடைக்கவில்லை.மன்னிக்கவும்.தவிர இந்த
ஒரு வாரமாக பதிவிற்கு வந்து அனைத்து வாசகர்களு்ககும் 
நன்றி.டூரில் அவரவர் ஊரினை சுற்றிகாண்பித்ததுடன் அன்பால்
 பாசத்தால் திக்குமுக்காட செய்த சக பதிவர்களான 
திரு.ஞானசேகரன்(திருச்சி).
 திரு.மச்சவல்லவன்(பூம்புகார்).
திரு.விஜி(சிதம்பரம்) ஆகியவர்களுக்கு ந்ன்றி. 
வழக்கப்படி அதிரடி பதிவுகளை ஆரம்பித்துவிடலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-விரும்பிய ப்ரோகிராமில் நினைவுகுறிப்புகளை எழுத



பொதுவாக டெக்ஸ்டாப்பில் -டாக்ஸ்க்பாரில் நோட்ஸ் எழுதிவைதது அதை நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் நினைவுபடுத்த நிறைய சாப்ட்வேர்கள்உளளது. ஆனால் குறிப்பிட்ட ப்ரோகிராம் -வேர்ட் -எக்செல் -இமெயில் -போட்டோஷாப் நோட்பேட் -என எதில் தேவையோ அதில் மட்டும் நினைவுபடுத்தும் சாப்ட்வேர் ஆக இது உள்ளதுஇலவச மென்மொருளில் 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வேர்டில் குறிப்பு எழுதியது வந்த விண்டோ கீழே-
புகைப்படத்தில் குறிப்பு எழுதி பின்னர் ஒப்பன செய்யும் சமயம் வந்த விண்டோகீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-

  • Annotate Firefox, Interne-Explorer and all other website-browsers with Your note.
  • Annotate Word, Excel, Images and all other documents with your personal comment.
  • Set a timer to get your note back on the surface.
  • Share notes with colleagues and friends

இதன் வீடியோ தொகுப்பு கீழே-



பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோ மேனேஜர்


சில குறிப்பிட்ட பார்மெட் வகை புகைப்படங்கள் போட்டோஷாப்பில் தான் ஓப்பன் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அந்த வகை புகைப்படங்களையும் ஓப்பன செய்து பார்க்கலாம். போட்டோ வியுவரில் புகைப்படத்தை வேண்டிய அளவு பெரிது படுத்திப்பார்ககலாம்.திருப்பலாம்.கொஞ்சம் பெரிய சாப்ட்வேராக 125 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.தேவையான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு வலதுபுறம் படங்கள் ஓப்பன் ஆகும்.
ஸ்லைட் ஷோ அமைக்கும் வசதியும் உள்ளது.வீடியொ பைல்களும ஓப்பன ஆகும்.
வீடியோ பைல்களை ப்ரிவியு பார்க்கலாம்.
நேரடியாக சிடியில் காப்பி செய்யும் வசதியும் உள்ளது.
கற்றது கைம்மண் அளவு .கல்லாதது உலகலவு என்பது போல் நாம் என்ன தான் படங்களில் விளக்கினாலும் வீடியோ படத்தில் பார்ககும் சுகமே தனிதான். இதற்கான வீடியோ டுடோரியலை பாருங்கள்.

பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க

இன்டர்நெட்டில் உலா வருகையில் சில புகைப்படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். சில சமயம் பாடல்கள் மட்டும் தேவைப்படும். சிலசமயம் வீடியோ மட்டும் தேவைப்படும்.சில வேளைகளில் மொத்தமும் தேவைப்படும். இந்த மாதிரி சமயங்களில் உங்கள் தேவை எதுவோ அதை மட்டும் பதிவிறக்க 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேர உங்களுக்கு பயன்படும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரர். பயர்பாக்ஸ். ஓப்ரா என மூன்று ப்ரவ்சர்கள் உள்ளது. இதில் நீங்கள் எந்த ப்ரவுசரை உபயோகிக்கின்றீர்களோ அதை தேர்வு செய்யவும். அதில் நீங்கள தேர்வு செய்த இணைய தள முகவரிகள் URL Address  உங்களுக்கு வலது பக்கம் வரும்.அதில் தேவையான முகவரியை தேர்வு செய்யுங்கள்.
நான் கீழ்கண்ட விண்டோவில் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன். அந்த பக்கத்தில் உள்ள அனைததுப்புகைப்படங்களின் இணைய முகவரிகளும் உங்களுக்கு இடது பக்கம் கிடைக்கும்.தேவையான முகவரியை கிளிக் செய்தால் அதற்கான படம் கீழே உள்ள வி்ண்டோவில் வரும்.
படத்தை பற்றிய முழுவிவரமும் கீழே உள்ள தகவல் மூலம் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
தேவையானதை தேர்வு செய்து வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதன் உபயோககங்கள் ஆங்கிலத்தில்-
Cache View Plus is an advanced, easy to use viewer for web browser cache. You can view and extract any video clips, audio tracks, pictures and other files from the web browser cache with categorized review list. The intuitive Windows interface makes Cache View Plus fast to learn and easy to use.
Cache View Plus has convenient features to view recent (Hot) items. Simply start Cache View Plus, visit an interested web page, press Load Cache button in Cache View Plus and get highlighted hot items from this web page to view and extract.

Usage:
  • Collecting documents, images, etc.
  • Researching applications (script, css files, etc) embedded in the document.
  • Checking what, where and when the user of the computer (like family members, friends) visited the Internet.

Main Features:
  • Categorized review list. Cache View Plus allows you to browse cache items by their types like Pictures/Video/Sounds/SWF, etc.
  • Sort cache list. It lets you sort the list by simply clicking on list head (URL/File Size/Access Time/Content-Type).
  • Copy function. It allows you to copy cache files to specified folder.
  • Hot cache items. Cache View Plus highlight recent cache items and URLs.
  • Favorite URLs. It allows you to collect favorite URLs for quick access.
  • Display function. It explicitly shows the cache item in the preview panel.
  • Send to E-Mail Function. Cache View Plus lets you to send selected cached files via E-Mail.

  • இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.மற்றவர்கள் இதனை தாராளமாக உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-400 -ஆவது பதிவு-அனைவருக்கும் நன்றி.


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...கண்மூடி கண்திறப்பதற்குள் 400 பதிவுகள் பதிவிட்டுள்ளேன்..மருத்துவம் ஆகட்டும் - ஜோதிடம் ஆகட்டும் - தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தால்தான் அவை அழியாமல் நிலைத்து நிற்கும். எனக்கு தெரிந்த சாப்ட்வேர்கள் - தொழில்நுட்ப விவரங்கள் - போட்டோஷாப் பாடங்கள் நான் மற்றவர்களுக்கு அறிய தருகின்றேன்.வலைபதிவு எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம் இன்று 675 உடன் தொடரும் நண்பர்களை - பெற்றுள்ளேன்.  இதனால் கிடைப்பது ஆத்ம மனதிருப்தி மட்டுமே.இந்த ஆத்ம திருப்தி உங்கள் தொடர் வருகையாலும்-கருத்துக்களாலும் -வாக்குகளாலும் எனக்கு கிடைக்கின்றது.எனதுஇந்தவெற்றிக்குகாரணமாகஇருந்தசக
பதிவர்கள்.நண்பர்கள்.வாசகர்கள் திரட்டிகள்,மற்றும்
 யூத்ஃபுல்விகடன்,அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...
எனது பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு எனக்கு 
ஆதரவு கொடுத்து வரும் தமிழ்கம்யூட்டர்
 புத்தகத்திற்கும் நன்றி....தொடர்ந்து உங்கள்
 அன்பான ஆதரவையும்அளவில்லா ஓட்டுக்களையும் -
மேலான கருத்துக்களையும் வேண்டி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஆடியோவினை கம்யுட்டரில் தொடர்ந்து பதிவு செய்ய

நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள்.
இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்துங்கள்.ஆடியோ பதிவாகும். 
தேவையானது பதிவானதும் ஸ்டாப் பட்ட ன் மூலம் நிறுத்துங்கள். இப்போது நீங்க்ள சேமித்துள்ள போல்டரில் சென்று பார்த்தால் பாடல் ப்திவாகிஇருக்கும்.
புதியவர்களுக்கு என்று இதற்கு முன் 19-02-2009 அன்று கம்யுட்டரில் ஆடியோ பதிவு செய்ய என்கின்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். விவரமாக அதனை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.ஆடியோ கேசட்டிலிருந்து பாடல்களை கம்யுட்டருக்கு மாற்ற என்ன செய்யவேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அந்த பதிவினை போடும் முன் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் அந்த பதிவிற்கு சுலபமாக இருக்கும் என்றே இதனை பதிவிடுகின்றேன். ஆடியோ கேசட்டிலிருந்து பாடலை கம்யுட்டருக்கு எவ்வாறு பதிவு செய்வது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.(புதியவர்களுக்காகவே இந்த பதிவு) பதிவினை பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை காக்க பதிவை யுத்புல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வெளியிட்ட விகடனாருக்கு நன்றி.நாளை ஞாயிறு கடை உண்டு. நாளை விளையாட்டை பற்றிய பதிவு .இது கொஞ்சம் பெரியவர்கள் அடிக்கடி விளையாடும் விளையாட்டு. அந்த விளையாட்டு பதிவினை காண நாளை வரை கொஞ்சம் பொருத்திருங்கள்....!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-வீடியோவில் ஆபாச காட்சிகளை நீக்க

சில ஆங்கில படங்கள் - தமிழ்படங்கள் - மற்றும் பிற மொழிப்படம் என எல்லா  படங்களிலும் கதை - நகைச்சுவை - சண்டைக்காட்சி என அருமையாக இருக்கும். ஆனால் நடுவில் சில படுக்கை அறை காட்சிகளையும் - ஆபாச காட்சிகளையும் -வன்முறை காட்சிகளையும் இணைத்துவிடுவார்கள். குடும்பம் - குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் சமயம் நமக்கு தர்மசங்கடமாகிவிடும். அந்த மாதிரி சமயங்களில் வீடியோக்களில் உள்ள அந்த மாதிரி ஆபாச காட்சிகளைxxx,18 +,adults only நாம் சுலபமாக இந்த சாப்ட்வேர் மூலம நீக்கி விடலாம்.11 எம்.பி. உள்ள இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமே.இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.,இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் input file என்கின்ற இடத்தில் படத்தினை தேர்வு செய்யுங்கள். அதைப்போல Output file என்கின்ற இடத்தில் பைலை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தி படத்தினை ஓடவிடுங்கள்.
ஆபாச காட்சிகள் -வன்முறை காட்சிகள் எங்கு துவங்குகின்றதோ அந்த இடத்தில் கீழே உள்ள கத்தரி போன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.அதைப்போல முடியும் இடத்திலும் மீண்டும் கத்தரிபோன்ற ஐ-கானை கிளிக் செய்யுங்கள்.இப்போது X என்கின்ற டெலிட் பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Video கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
உங்கள் பணிமுடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் வரும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோ சென்சார் செய்து இருக்கும்.இனி தைரியமாக அனைவருடன அமர்ந்து படத்தை பார்ககலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-தமிழிஷ்.தமிழ்10.மற்றும் திரட்டியில் பதிவுகளை இணைக்க

சமீபத்தில் நண்பர் ஒருவருடைய பதிவினை பார்த்தேன். நன்றாக இருந்தது.அவரின் பதிவுகள் எந்த ஒரு திரட்டியிலும் இணைக்கப்படவில்லை.ஏன் என்று கேட்டதற்கு திரட்டிகளில் இணைப்பது பற்றி சரியாக தெரியவில்லை என்று சொன்னார். புதியதாக பதிவுகள் எழுதுபவர்களுக்கு இது பயன்படுமே என்று இங்கு மூன்றுதிரட்டிகளில் எப்படி நமது பதிவுகளை இணைப்பது பற்றி பதிவிட்டுள்ளேன்.முதலில் நீங்கள் தமிழிஷ் தளம் திறக்க இங்கு கிளிக் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும். .
அதில் வலதுபக்க மூலையில் Home.Login.Register என இருக்கும் அதில்  Register என்பதை கிளிக் செய்யவும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பெயர், இ-மெயில முகவரி,பாஸ்வேர்ட் கொடுத்து வேர்ட்வெரிபிகேஷன் ஆகியவற்றை புர்த்தி செய்துI agree என்பதில் டிக் மார்க் செய்து ஓ.கே. கொடுங்கள். 
உங்கள் இ-மெயிலுக்கு அவர்களிடம் இருந்து மெயில வந்திருக்கும். இப்போது மீண்டும் தமிழிஷ் தளத்தை திறந்துகொள்ளுங்கள். இப்போது இந்த வலது பக்க விளம்பரம் கீழே தமிழ்இடுகைகளை இணைக்க என்பதனை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் URL என்கின்ற கட்டத்தில் உங்கள் பதிவின் URL முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.( சுலபமான வழி - உங்கள் URL முகவரியை காப்பி - பேஸ்ட் செய்வது)
இப்போது உங்களுக்கு அடுத்த நிலை திறக்கும்.அதில் Story URL  என்பதில் உங்கள் பதிவின் விவரம் இருக்கும். அதற்கு கீழே உள்ள பிரிவுகளில் உங்கள் பதிவு எந்த சம்பந்தமானதோ அதை தேர்வு செய்யுங்கள்.( தொழில்நுட்பம்.கவிதை. சமையல். புகைப்படம். வீடியோ என...)
இப்போது இடுகையில் தலைப்பில் உங்கள் இடுகைக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்களோ அந்த பெயரையே வையுங்கள.அடுத்துள்ள விளக்கத்தில உங்கள் இடுகையை பற்றிய விளக்கம் அளியுங்கள். (விளக்கம் குறைவானதாகவும் -படிக்கும் ஆவலை துாண்டுவதாகவும் இருக்க வேண்டும்) அடுத்து இடுகை தொடர்பான அடையாளம். அதில் உங்கள் இடுகையின் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். புகைப்படம் ஏதும் இல்லையென்றால் உங்கள் கணிணியில் இருந்தே புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இறுதியாக Submit கொடுங்கள்.
உங்கள் இடுகை தொடரும் .இடுகைகள் பக்கத்தில இருப்பதை காணலாம்.உங்கள் பதிவுகள் நன்றாக இருந்து அதிக ஒட்டுக்கள் வாங்கும் பட்சத்தில் அது பிரபல இடுகைக்கு வரும். அதிலும் அதிக ஓட்டுக்கள் வாங்கினால் முன்ணனி பக்கத்திற்கு வரும்.
சரி..இப்போது தமிழ்10 ல் பதிவுகள் இணைப்பது பற்றி பார்க்கலாம். நீங்கள் தமிழ்10 திறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் திறக்கும்.
இதிலேயும் தளத்தில் இணைய கிளிக் செய்து உங்கள் பெயர் - இமெயில முகவரி கொடுத்து பதிவு செய்யவும். இப்போது பதிவை இணைக்க கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ வரும் அதில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட்கொடுத்து உள்ளே நுழையவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பதிவி்ன் முகவரியை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் அதில் உங்கள் பதிவின புகைப்டத்தின் URL ( நமது பதிவின் புகைப்படத்தை தேர்வு செய்து கிளிக் செய்ய அதில் Copy Image URL என வரும் ) அதை இங்கு பேஸட் செய்யவும்.
அதற்கு அடுத்துள்ள இடுகைப்பற்றிய விவரம். பிரிவு, விளக்கம் ஆகியவற்றை முறையே பதிவு செய்யுங்கள். இறுதியாக ஒ.கே. தாருங்கள். 
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முன்னோட்டம் பார்த்துவிட்டு திருத்தங்கள் இருந்தால் செய்துவிட்டு சமர்ப்பி கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் உங்கள் பதிவு தமிழ்10 வந்திருக்கும்.அடுத்ததாக திரட்டியில் பதிவினை இணைப்பதை பார்க்கலாம்.திரட்டியில் பதிவை இணைக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
அதில் புதிய பதிவை சேர்க்க கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில முதலில் உங்கள் பதிவின் தலைப்பு - பதிவின் முகவரி (URL ADDRESS)-உங்கள் இ-மெயில முகவரி கொடுத்து வேரட்வெரிபிகேஷனை புர்த்தி செய்து அனுப்புக கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பதிவு நேரடி பதிவுகளில் வந்திருப்பதை காணலாம்.மற்றவற்றை விட திரட்டியில் பதிவிடுவது மிக சுலபம் ஆக இருக்கும். இதை நீங்கள் பதிவிடும்போதே அறிந்துகொள்ளலாம் உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் திரட்டியே பரிந்துரை செய்து அவர்களுடைய திரட்டியில் தானே சேர்ந்துவிடும்.(எனது பதிவுகள் அவ்வாறு சேர்ந்துவிடுகின்றது) நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்த பதிவும் வந்துள்ளது்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள.




 நமது பதிவர்கள் - அவர்களின் உறவுகள் ஆகியவர்களின் பிறந்த நாள் - திருமணநாள் பற்றி வாழ்த்தலாம்வாங்க  என்கின்ற இடுகையை வெளியிட்டுவருகின்றேன். அந்த இடுகைக்கு என்று தனியே திரட்டியில் இடம் ஓதுக்கி வாழ்ததுகளில் திரு. வெங்கடேஷ் அவர்களும் பங்கு ஏற்று உள்ளார்.கீழே உள்ள விண்டோவினை பாருஙகள்.



எனது சார்பாகவும் நமது பதிவர்கள் சார்பாகவும் அவருக்கு நன்றியை தெரிவித்துககொள்கின்றேன்.இந்த பதிவை.பயன்படுத்தி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அதைப்போல் இதில ஒட்டுப்பட்டையை கொண்டுவருவது எப்படி என்று நீங்கள் விருப்பபட்டால் பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...