வேலன்:-அன்இன்ஸ்டால் செய்திட

கணிணியில் எந்த ஒரு சாப்ட்வேரினையும் இன்ஸ்டால் செய்வது மிக எளிது. ஆனால் அதனையே ரீ இன்ஸ்டால செய்யும் சமயம் சில பைல்களை ரீஜிட்டரிலும் ஹார்ட்டிரைவிலும் அது விட்டு செல்லும். கணிணியில் அமரந்துகொண்டு போகாமலும் பிற அப்ளிகேஷன்களை நாம்திறக்கும் சமயஙகளிலும் சண்டித்தனம் செய்யும். இவ்வாறான அப்ளிகேஷன் மற்றும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
இதில் நமது கணிணியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சாப்ட்வேர் மற்றும் அப்ளிகேஷன்கள் தெரியவரும். இதில் வலது புறம் உள்ள அப்ளிகேஷன் லிஸ்ட் கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
 

இதில் Table.Large Icons.Groups.Show System and service components and Export the Applications List போன்ற ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இப்போது ஒரு அப்ளிகேஷனை நீக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அந்த அப்ளிகேஷனை தேர்வு செய்யவும் இப்பொது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
அதில் அந்த அப்ளிகேஷன் பெயர்,அப்ளிகேஷன் தயாரித்த நிறுவனத்தின் இணையதள முகவரி,ரிஜீஸ்டரியில் அந்த அப்ளிகேஷன் ஐட்டம்களின்  எண்ணிக்கை.டிஸ்க் ஐட்டம்களின் எண்ணிக்கை போன்றவை தெரியவரும். கீழே உள்ள Application Tracks கிளிக் செய்திட அப்ளிகேஷன்கள் ரிஜீட்டரில் எங்கு எங்கு உள்ளதோ அதன் விவரம் நமக்கு தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள பச்சை நிறங்களில் கட்டங்கள் ஓட ஆரம்பிக்கும். 
இப்போது அடுத்த நிலைக்கு உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 உங்களுடைய கணிணியில் நீங்கள் நீக்க விரும்பிய அப்ளிகேஷனின் அனைத்து பைல்களும் உப பைல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இப்போது நீங்கள் நீக்க விரும்பிய அப்ளிகேஷன் உங்கள் கணிணியில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட்டதை பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

Anonymous said...

very useful software.., you are posting this at correct time when i need it... Thank you sir

Anonymous said...

sir i am using nokia c6-00 for viewing your blog in tamil by using opera mini, but i am not able to type in tamil, so if you have any solution pls help me. (in my PC i am using google input tools thats no problem). Thank you sir for sharing such a valuable information through your blog.

பாலா said...

மிக்க நன்று

Anonymous said...

Nice and Useful Information.
Thanks

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான தகவலுக்கு நன்றி வேலன் சார்.

வேலன். said...

kayal vili said...
very useful software.., you are posting this at correct time when i need it... Thank you sirஃஃ//

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

kayal vili said...
sir i am using nokia c6-00 for viewing your blog in tamil by using opera mini, but i am not able to type in tamil, so if you have any solution pls help me. (in my PC i am using google input tools thats no problem). Thank you sir for sharing such a valuable information through your blog.

எனது முந்தைய பதிவுகளில் அதனைப்பற்றி பதிவிட்டுள்ளேன் சகோ..தங்கள் வாழத்துக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger பாலா said...
மிக்க நன்றுஃ

நன்றி பாலா சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Alien A said...
Nice and Useful Information.
Thanks


நன்றி சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

சே. குமார் said...
உபயோகமான தகவலுக்கு நன்றி வேலன் சார்.ஃஃ

நன்றி குமார் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...