நமக்கு வேண்டாத பைல்களை டெலிட் செய்துவிடுவோம்.ரீ - சைக்கிள் பின்னில் அதிக அளவு சேர்ந்ததும் அதையும் டெலிட் செய்துவிடுவோம்.டெலிட்செய்த கொஞ்சநேரத்திலோ - மறுநாளோ அந்த பைல் நமககு தேவைப்படும்.நகம் வெட்டிய அன்றுதான் நகத்திற்கு பழம் உரிக்கும் வேலை வரும்( மர்பி லா) அதுபோல் தேவையில்லை என்று டெலிட் செய்த பைல்தான தேவைப்படும். இந்த சாப்ட்வேர் அந்து குறையை நிவர்த்தி செய்கின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும்.உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இடது பக்கம் உங்கள் கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் ஒப்பன் ஆகும். தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்டார் ஸ்கேன் அழுத்தவும். அப்போழுது உங்களுக்கு வலது பக்கம் அந்த டிரைவில் உள்ள பைல்களின் வகைகளும் அது உள்ள நிலைமையும் உங்களுக்கு தெரியவரும்.
இந்த சாப்ட்வேரில் என்ன விஷேஷம் என்றால் இடதுபக்கம் உள்ள விண்டோவில் எந்த பைல் எவ்வளவு உள்ளது என்கின்ற விவரம்தெரியும்.புகைப்படமா - டெக்ஸ்ட்டா - பிடிஎப் பைலா - எம்.பி3 பைலா - வீடியோ பைலா என வகைப்படுத்திஉள்ளதால் நாம் நமது தேடலை சுலபமாக தேடிக்கொள்ளலாம். மேலும பைலின தேதி அளவு வைத்தும் தேடலாம். அதற்கும் இதில் வழி உள்ளது.
தேவையான பைலை தேர்வு செய்ததும் இதில் உள்ள ரீ-ஸ்டோர் பட்டனை கிளிக் செய்து தேவையான டிரைவில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைல் நல்ல நிலையில் இருந்தால்தான் பைல் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்



























