Showing posts with label web. Show all posts
Showing posts with label web. Show all posts

வேலன்-டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் காலகெடு தேதியை நீடிக்க.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. எல்லாவற்றையும் நிறுத்தலாம். ஆனால் காலத்தை நம்மால் நிறுத்த முடியுமா? வாய்ப்பே இல்லை.சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில் லாமல் வேலை செய்யும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.  பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஒரே கிளிக்கில் இணையதளம் பெற


இணையதளத்தில் நாம் இணையபக்கம் திறக்க நாம்
முதலில் பிரவுசரை தேர்வு செய்யவேண்டும். அடுத்து
அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி
தட்டச்சு செய்து என்டர் செய்யவேண்டும்.இதைவிட
எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என
இப்போது பார்க்கலாமா?

டாக்ஸ்பாரில் காலியாக உள்ளஇடத்தில் மவுஸை
கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால்
அதை எடுத்துவிடவும்.
அடுத்து Toolbarsஎன்கின்ற இடத்திற்கு கர்சரை கொண்டு
செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.
அதில் Address என்கின்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
இப்போது டாக்ஸ்பாரில் உங்களுக்கு Address என்கின்ற பெயர்
கிடைக்கும். அதை மவுஸால் பிடித்து இழுத்தால் உங்களுக்கு
கீழ்கண்ட முகவரிபட்டை வெளியில் வரும்.

அதில் உங்களுக்கு தேவைப்படும் முகவரியை தட்டச்சு செய்து
என்டர் தட்டினால் உங்கள் தளமுகவரிக்கு நீங்கள் கொண்டு
செல்லப்படுவீர்கள்.
நாம் அடிக்கடி - அதிகமாக உபயோகிக்கும் தளமுகவரியினை
இதில் பூர்த்திசெய்து வைத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-

ஹே...நான்தான் பர்ஸ்ட்.....

இன்றைய PSD-புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
டாக்ஸ்க்பாரில் முகவரி பக்கத்தை வைத்துக்கொண்டவர்கள் இதுவரை:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- 225 ஆவது பதிவு - பொங்கல் வாழ்த்து - போட்டோ ஆல்பம்.











அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாளில் எனது 225 ஆவது பதிவும்
வெளியிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கின்றேன்.
தொடர்ந்து உங்கள் ஆதரவினை நாடி......
வேலன்.
நம்மிடம் புகைப்படங்கள் நிறைய இருக்கும். பழைய
நினைவுகளை அசைபோட போட்டோக்கள் உதவும்.
அதையே முறையாக ஆல்பமாகதொகுத்து தரவே 
இந்த சாப்ட்வேர்உதவுகின்றது. இதை பதிவிறக்கம் 
செய்ய இங்கு கிளிக்செய்யவும். இது வெறும் 8 எம்.பி.
 கொள்ளளவு தான்.இதை உங்கள் கணிணியில்
 இன்ஸ்டால் செய்யவும்.மெமரி கார்ட், டிஜிட்டல்
 கேமரா, மொபைல்போன், ஸ்கேனர்மற்றும் நமது
 கம்யூட்டரில் உள்ள புகைப்படங்களையும்இந்த
 சாப்ட்வேரில் import செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு புகைப்படங்களை இம்போர்ட்செய்ய முதலில்
பைல் தேர்ந்தேடுத்து அதில் Get Photos என்பதனை கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
உங்கள் புகைப்படம் எங்கு உள்ளதே அங்கிருந்து புகைப்
படங்களை இந்த சாப்ட்வேருக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய புகைப்படங்கள் கீழ்கண்டவாறு வந்து
அமர்ந்துகொள்ளும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
தேவையான புகைப்டங்களை இதில் நேரடியாக சிடியில் 
காப்பி செய்ய முடியும். இதில் பைல் மெனுவில் உள்ள 
பார்ன் சிடி கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
தேவையான புகைப்படங்களை தேர்வு செய்து தேவையான
டிரைவையும் தேர்வு செய்து பர்ன் சிடி கொடுங்கள். சிடி பர்ன்
ஆகிவிடும்.அதைப்போலவே இதிலிருந்து நேரடியாக
இ-மெயில் அனு்ப்பவும் - செல்போனுக்கு புகைப்படங்கள்
மாற்றவும் வசதி உள்ளது. 
பைலுக்கு அடுத்துள்ள எடிட் மெனுகிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் நாம் புகைப்படத்தை வலது புறமோ
இடது புறமோ சுலபமாக திருப்ப முடியும். -
போட்டோவில் உள்ள சிறு சிறு குறைகளை நீக்க
இந்த சாப்ட்வேரில் வசதி உள்ளது. குறை உள்ள
புகைப்படத்தை தேர்வு செய்து இதில் உள்ள 
Auto Smart Fix கிளிக் செய்தால் உங்கள் புகைப்
படத்தில் உளள் குறைகளை நிவர்த்தி செய்துவிடும்.
இதில் உள்ள Fix Photos Window கிளிக் செய்தால்
உங்களுடைய புகைப்படத்திற்கு General,Crop,Red eye,
Auto Level,Auto Contrast,Auto Colour, Sharpen என பல
வசதிகள் கிடைப்பதுடன் இதில் உள்ள புகைப்பட
மாறுதல்களை After/ Before /Original என முன்பார்வை
யிட்டுக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் ஒ.கே.
கொடுக்கலாம்.
இதில் நாம் புகைப்படத்திற்கு தேதி கொடுத்துக்
கொள்ளலாம். இதன் மூலம் கடந்த வருடம்
அந்த நாளை நினைவு கூரந்து கொள்ளலாம்.
 சரி தவறுதலாக நேரம் அமைந்துவிட்டது.
தேவையான நேரத்தை நாமே அமைத்துக்கொள்ளலாம்.
போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்களுக்கு
இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். அவர்களுக்கு
படம் எடுக்கும் அந்த நாளை இந்த சாப்ட்வேரில் போட்டு
வைத்துவிட்டால் பின்னர் கஸ்டமர்களுக்கு அவர்கள்
படம் எடுத்ததேதி சொன்னால் அந்த தேதியை வைத்து
 மீண்டும் அவர்களுக்கு போட்டோவை பிரிண்ட்
 போட்டு தரலாம்.
சரி நம்மிடம் நிறைய புகைப்படங்கள் உள்ளது.
நண்பர்களுடன் எடுததது - குழந்தைகளுடன் எடுத்தது -
சுற்றுலா சென்ற சமயம் எடுத்தது - என நிறைய 
இருக்கும். அதை பகுதிவாரியாக பிரித்து இதில்
சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்து இதில் உள்ள புகைப்படங்களை நாம்
ஸ்லைட் ஷோ வாக மாற்றிக்கொள்ளமுடியும்.
மேலும் பிடிஎப் லைட்ஷோவாக மாற்றவும்
முடியும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதில் உள்ள Find கிளிக் செய்து புகைப்படத்தை தேதிவாரியாக
தேட முடியும். ஸ்லைட்ஷோ மூலம் நாம் நேரடியாக புகைப்
படத்தை பிரிண்ட் செய்ய சேர்த்துக்கொள்ளலாம்.கீழே
உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒரே புகைப்படத்தை யோ பல புகைப்படங்களையோ
தேர்வு செய்து வேண்டிய அளவுகளில் பிரிண்ட் எடுக்க
இதில் வசதி உள்ளது. 
இதன் முகப்பு பக்கத்திலேயே நமக்கு Photo well,Organize,
Calender viewஎன வகைவகையாக பார்வையிட வசதி
 உள்ளது. மேலும்புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க
 கீழே மூலையில்Slide Bar உள்ளது. அதை நகர்த்துவது
 மூலம் நாம் புகைப்படத்தைபெரிதாக்கி பார்க்கலாம்.
 இந்த சாப்ட்வேர் மூலம் இந்தவிளக்கம்போதும் என 
நினைக்கின்றேன்.மேலும்பதிவின் நீளம் கருதி
 இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.









JUST FOR JOLLY VIDEOS(PONGAL SPECIAL)



இன்றைய PSD டிசைன்க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக்  செய்யவும்...
இதுவரை எனது 225 ஆவது பதிவுக்கு வந்து வாழ்த்திய அன்பு
 உள்ளங்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இலவச மென்பொருள்கள்.

வேலன்:-இரட்டையர்களை கண்டுபிடிக்க.

ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக்குழந்தைகளை
அடையாளம் காண்பதில் தாய்க்கே சில

சமயம் குழப்பமாகும். அதுபோல் நம்மிடம்

உள்ள ஒரே பைல் நமது கம்யூட்டரில் வெவ்வேறு

ஃபோல்டர்களில் அதே பெயரிலோ அல்லது வேறு 

பெயரிலோ இருக்கலாம். அதுபோல் ஒரே மாதிரி

புகைப்படமோ - பைல்களோ - பல பைல்களில்

பல போல்டர்களில் நமது கம்யூட்டரில் அமர்ந்து

இருக்கலாம். ஏற்கனவே உள்ள பைலை நீங்கள்

மீண்டும் இன்டர்நெட்டிலிருந்து மீண்டும் டவுன்

லோடு செய்திருக்கலாம். ஏற்கனவே சிடியில்

உள்ள தகவல்களை மீண்டும் சிடியில் எழதியிருக்

கலாம். இவ்வாறு ஒரே பைல்கள் இரண்டிரண்டாக

இருப்பதால் நமது Harddisk இடமும் வேஸ்ட்,

நமது நேரம், பணம், சக்தி அனைத்தும் வீண்.

இதுபோல் நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர் போல,

திரிசூலம் சிவாஜி போல, ராஜாதி ராஜா ரஜினி போல,

வாலி அஜித் போல என டபுள் ஆக்ட் பைல்களை

அடுக்கி கொண்டே போகலாம். இதில் ஒரே மாதிரியான

பைலை கண்டுபிடித்து ஒன்றை மட்டும் வைத்துக்

கொள்ள இந்த சாப்ட்வேர் உபயோகப்படும்.

(ஓரு உறையில் ஒரு கத்திதான் இருக்கவேண்டும்)

இந்த இலவர சாப்ட்வேரை டவுண்லோடு செய்து

உபயோகித்துப்பாருங்கள். 

முகவரி தளம்:-


உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.

இப்போது ஒட்டும் பொட மறக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
தலைப்பு பட்டையில் நடுவில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் விண்  டேஸ் ஃபுல் ஸ்கிரினாககாட்சியளிக்கும். மீண்டும் அதே வாறு செய்தால் பழைய நிலைக்கு மாறும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இலவச மென்பொருள்


வேலன்:-தமிழ் கீ-போர்ட் டிரைவர்ஸ்

 மற்றும் தமிழ்பாண்ட்கள்.


தொலைதொடர்பு மற்றும் தகவல்

 தொழில்நுட்ப அமைச்சகம்

இலவச மாக

 Tamil Net '99 True Type Fonts, Keyboard Drivers

வழங்குகிறது. புதியவர்களுக்காக

 இந்த தள முகவரியை

அளித்துள்ளேன். தேவைபடுபவர்கள்

 பதிவிறக்கம்

செய்து கொள்ளவும்.

தள முகவரி:-


வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
வீட்டை தினம் இரண்டுமுறை பெருக்கவும். Recylepin –ஐ தினம் ஒரு முறை சுத்த படுத்தவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...