Showing posts with label velang. Show all posts
Showing posts with label velang. Show all posts

வேலன்:-கியூப் விளையாட்டு

ஒரு காலத்தில் மிகவும் பாப்புலராக விளையாடும் விளையாட்டாக கியூப் இருந்தது. இன்றும் சிலர் வீடுகளில் பழைய பொருட்களில் கியூப் இருப்பதை காணலாம்.மாறிவரும் காலத்திற்கு ஏற்ப கியூப் விளையாட்டும் இன்று கணிணியில் விளையாடும் அளவிற்கு வந்துவிட்டது. இன்று கியூப் கணிணியில் விளையாடுவதை காணலாம். இதை பதிவிறக் கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உள்ள எடிட் சென்று Scramble கிளிக் செய்யவும்.
உங்களுக்கு எந்தனை முறை அதை மாற்றிவைக்கவேண்டும்( அதாவது குலுக்கல் செய்யவேண்டும் ) என்று கேட்கும். விருப்பமான எண்ணை தரவும்.

குலுக்கியபின் உங்களுக்கு இந்தமாதிரி படம் வரும். இப்போது நீங்கள் அனைத்து வண்ணங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டுவரவேண்டும்.
கர்சரால் படத்தில் வைதது கிளிக் செய்து கர்சரை அழுத்தியபடி வேண்டிய திசையில் நகர்த்தினால் வேண்டிய கட்டங்கள் மாறுவதை காணலாம்.நான் கஷ்டப்பட்டு ஒரே நிறத்தை இங்கு கொண்டுவந்துள்ளேன்.
பதிவினை பாருங்கள் .விளையாடுங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
நீ தைரியமாக தூங்கு ..ஆந்தை வந்தால் நான் எழுப்பிவிடுகின்றேன்..
இன்றைய PSD டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து போல்டர்களையும் ஒரே மாதிரியாக மாற்ற


<span title=
நாம் கணிணியில் போல்டர்களை ஒவ்வோரு டிரைவிலும் ஒவ்
வொரு வியுவில் வைத்திருப்போம். தெரிந்தோ தெரியாமலோ
ஒவ்வொன்றும் ஒவ்வொறு வியுவில் இருக்கும். அவ்வாறு
இருக்கும் போல்டர்கள் அனைத்தையும் ஒரே வியுவில் கொண்டு
வருவதை இப்போது காணலாம்.போல்டர்கள் முறையே
Thumbnails,Tiles,Icons,List,Details என ஐந்து வகைகள் உள்ளன.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்
இதைப்போல் வியுவிலும் உள்ள லிஸ்டினை பாருங்கள்.
உங்களுக்கு தேவையான வகையினை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.அடுத்து Tools சென்று Folder Options
தேர்வு செய்யுங்கள்.
அதை கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் View கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள Apply to All Folders கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதாங்க. நீங்கள் தேர்ந்தெடுத்த வியுவில் அனைத்து
போல்டர்களும் மாறியுள்ளதை காண்பீர்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
அடுத்த பதிவு போட்டோஷாப் பற்றி நாளை  (11.01.2010)
திங்கள்கிழமை மாலை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
 அப்பாடா.....மதியம் சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்தது....

இன்றைய PSD டிசைன்னுக்கான புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.
இதுவரையில் போல்டர்களை மாற்றிக்கொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்க

<span title=
ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம்
தகவல்களை பரிமாரிக்கொள்ள பிளாப்பியை உபயோகித்து
வந்தோம். 1.44 எம்.பி. கொள்ளளவு கொண்ட பிளாப்பி
சுமார் ரூ.15-லிருந்து ரூ25 வரை விற்றுக்கொண்டிருந்தது.
சி.டி.வாங்க வேண்டுமானால் 70-80 ரூபாய் ஆகும். ரீ-ரைட்
டபிள் சி.டி. 125 ரூபாய் ஆகியது. காலங்கள் மாறியது.
சி.டி.யே இப்போது 8 ரூபாய்க்கும் -டி.வி.டி. ரூபாய் 10-லிருந்
தும் கிடைக்கின்றது. ரீ-ரைட்டபிள் டி.வி.டி. ரூபாய் 45 க்கு
கிடைக்கின்றது. சரி அதையெல்லாம் விடுங்க. பலமுறை
அழித்து - மீண்டும் எழுத இப்போது பரவலாக பென் டிரைவ்
கிடைக்கின்றது. 4  ஜி.பி. கொள்ளளவே சுமார் 450 ரூபாய்க்கு
கிடைக்கின்றது. பிளாப்பி-சி.டி.-டி.வி.டி- என மாறியவர்கள்
இப்போது பென்டிரைவ்க்கு மாறி வருகின்றார்கள்.
கம்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் யு,எஸ்.பி. போர்ட்டை
இப்போது கம்யூட்டருக்கு முன்புறம் பொருத்துமாறு தயாரிக்
கின்றார்கள்.பென்டிரைவ் தவிர டிஜிட்டர் கேமராக்கள்,
ஐ -பாட்கள்,பிரிண்டர்கள் ,பிளேயர்கள் என அனைத்தும்
பிளக் அண்ட் பிளே வகையில் சொருகி பின் எடுதது
செல்லும் வகையில் அமைந்துள்ளது. தேவைப்படும் சமயம்
அதை சொருகி பயன்படுத்தலாம். ஆனால் நினைத்தஉடன்
அதை வெளியே எடுக்க கூடாது. இது சில இழப்புகளை
நமக்கு உருவாக்கும். யு,எஸ்.பி்.போர்டில் எப்போதும்
குறைந்த அளவு மின்சக்தி இருக்கும். இதை எடுத்தேன்
கவிழ்த்தேன் என நாம் எடுக்கும் சமயம் மின்ஒட்டம்
பாதிக்கப்பட்டு கம்யூட்டரில் பரவும். நமது தகவல்கள்
அழிந்து போகும். டிரைவ் கொடுவதோடு அல்லாமல்
நமது இதர சாதனங்களான பிரிண்டர்-கேமரா - பிளேயர்
என அனைத்தும் ஈடு செய்ய இயலாத அளவு பாதிக்கப்படும்.
இது நமக்கு தேவையா...அதனால் வரும்முன்
காப்பதே நல்லது. இனி யு,எஸ்.பி.சாதனங்களை எப்படி
முறையாக கையாளலாம் என பார்க்கலாம்.
யு.எஸ்.பி.போர்டில் நாம் சாதனத்தை இணைத்ததும்
சிஸ்டம் டிரேயின் அடிப்பாகத்தில் நமக்கு நாம்
இணைத்துள்ள சாதனத்தின் ஐ-கான் தெரியும்.
நமது வேலைகள் முடிந்ததும் அந்த ஐ-கான் மீது
கர்சரால் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Stop கிளிக் செய்தபின உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஒப்பன் ஆகும்.
இப்போது ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் உங்கள் சாதனத்தை வெளியே எடுத்துக்
கொள்ளலாம்.இவ்வாறு முறையாக செய்வதினால் நமது
தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் சாதனங்களும் பழுதாகாது.
அடுத்த முறை யு,எஸ்.போர்டில் எந்த சாதனத்தையும்
இணைத்து அதை நீக்கும்போது இந்த தகவலை நினைவில்
வையுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
ரொம்ப சிலுத்துக்காதே...அப்புறம் நான் சிலுத்தால் நீ
தாங்கமாட்டே....

இன்றைய PSD புகைப்படத்தின் டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை யு,எஸ்.போர்டில் சாதனங்களை முறையாக
 நீக்கியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப் பாடம் 33 பெயரில் புகைப்படம் கொண்டுவர

பெயரில் புகைப்படம் கொண்டுவர:-
எழுத்துக்களில்-பெயர்களில்-உள்ளே புகைப்படங்களை
கொண்டுவருவது என இன்று பார்க்கலாம். நமது இணைய
நண்பர் இதுகுறித்து கேட்டுள்ளார். அவருக்கான விளக்க
பதிவு இது. டூல்கள் பற்றி வரிசையாக வரும் சமயம் மீண்டும்
இந்த டூலை பற்றி விரிவாக காணலாம்.
போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அதில் முதலில நீங்கள்
 விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துஉள்ளேன்.
இப்போது டூல்ஸ் மெனுவில் 16 ஆவதாக உள்ள Horizontal Type
Mask Tool தேர்வு செய்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.(T -எழுத்தானது புள்ளி புள்ளியாக காணப்படுகின்றதே
அந்த டூல்-வரிசையில் மூன்றாவதாக உள்ளது)
இப்போது மேலே உங்கள் பாண்ட் வகையினையும் பாண்ட்
அளவினையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
இப்போது கர்சரை படத்தில் தேவையான இடத்தில் வைத்து
எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். நீங்கள் கர்சர் வைத்ததும்
படத்தில் நிறம் மாறிவிடுவதை கவனியுங்கள்.
இப்போது மார்க்யு டூல் கிளிக் செய்யுங்கள்.படம் பழைய
நிறத்திற்கு வந்துவிடும். நமது பெயரானது பு்ள்ளிகளுடன்
காணப்படும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது Edit சென்று Copy கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள
மீண்டும் பைல்மெனு வந்து நீயு கிளிக் செய்யுங்கள் .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒ.கே. கொடுங்கள். உங்களுக்கு வெள்ளைநிற விண்டோ
ஒப்பன் ஆகும். பின்னர் பேஸ்ட் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பெயர்மட்டும் தனியாகவும் அதன் உள்ளே
நீங்கள் தேர்வு செய்த புகைப்படமும் வருவதை காணலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

நான் தேர்வு செய்த மற்றும் ஒரு படம் கீழே:-
அதில் பெயரை கொண்டுவந்ததும் வந்த படம் கீழே:-
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். அருமையாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
இதில் சுமார் 20 PSD  பைல்கள் உள்ளது. இதை
தனித்தனியாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
இதுவரையில் பெயரில் புகைப்படங்கள் கொண்டுவந்தவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்க







நமது கம்யூட்டரின் டெக்ஸ்டாப் தீப்பிடித்து எரிந்தால் எப்படியிருக்கும்.
இந்த சாப்ட்வேரில் இது சாத்தியமே..ஆனால் நிஜமல்ல நிழலே...எல்லாம்
மாயை...இந்த ஸ்கிரீன் சேவரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக
செய்யவும்.இது வெறும் 4.5 m.p.அளவுதான்.இதை டவுண்லோடு செய்து
முடித்ததும் கணிணியில் இன்ஸ்டால்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Main Settings -ல் உங்களுக்கு தேவையான
செட்டிங்ககுகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.இதில் உள்ள
Screensaver Exiting கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

அடுதது Sound கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஒலி அளவை
பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் ஒலி அளவைகேட்கவும் தீ அளவினை பார்க்கவும்
முன்னோட்ட வசதி உள்ளது. கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

இறுதியாக ஓ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் கணிணியின்
ஸ்கிரீன்சேவரில் இந்த சாப்ட்வேர் அமர்ந்துகொள்ளும்.

ப்ரிவியு பாருங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீங்கள் ஸ்கிரீன் சேவராக
வருமாறு செட் செய்து விட்டால் கீழ்கண்ட விண்டோ அந்த நேரத்தில்
மாறும்.

இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு
உங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்
விளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென
டெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை
உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட
போகின்றார்கள்)
முந்தைய போட்டோஷாப் பதிவில் டிசைன் இணைக்க மறந்து
விட்டேன். அந்த பாடத்தி்ற்கான டிசைன் கீழே...

சென்ற பதிவின் பெண்ணின் படத்தில் டிசைன் செய்து மாற்றிய
படம் கிழே:-

மேற்கண்ட PSD டிசைன் -3 தேவைப்படுபவர்கள் இங்கே

கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வித்தியாசமான பதிவில் சந்திக்கலாம்.


வாழ்க வளமுடன்,
வேலன்.
இதுவரை கணிணியில் தீப்பிடிக்க வைத்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...