வேலன்-பிளாக்கில் Search Box -ஐ இணைக்கநமது நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் குகூள் தேடுபொறியை Search Box -ஐ வலைப் பதிவில் இணைக்க சொல்லிகேட்டிருந்தார்.அவரின் விருப்பத்திற்கு ஏற்ப உடனே அதை வலைப்பதிவில் இணைத்துவிட்டேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இனி புதியதாக பிளாக் ஆரம்பிப்பவர்களும் - ஏற்கனவே இதுபோல் பிளாக் வைத்திருப்பவர்களும் இநத தேடுபொறியை Search Box நமது பிளாக்கில் எவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம்.கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.
<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get"><input id="searchBox" name="q" type="text" /> <input id="searchButton" value="go" type="submit" /></form>
பின்னர் உங்களுடைய டாஷ்போர்டு - வடிவமைப்பு - கேஜட்டை சேர் - ஹச்டிஎம்எல் -(Dashboard - Design - Add a gadget - Html/Java Script)சென்று இந்த கோடிங்கை சேர்க்கவும். தலைப்பில் விரும்பிய வார்த்தையை கொடுக்கலாம்.நான் தேவைகளை தேடுக என்று தலைப்பு கொடுத்துள்ளேன். அதைப்போல இந்த கோடிங்கில் பார்த்தீர்களே யானால் அதில் கடைசியாக "go" என்கின்ற வார்த்தைக்கு பதில் செல் என்கின்ற வார்த்தையை சேர்த்துள்ளேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமான சொல்லை சேர்க்கலாம்.,இவ்வாறு தேடுபொறியை இணைத்துவிட்டால் நமக்கே சிலசமயம் தகவல்கள் ஏதாவது தேவைபடும் சமயம் சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப்-போட்டோக்களை மேலும் அழகாக்க

சில பழக்கடைகளில் பார்த்திருப்பீர்கள். பழங்களை சுத்தமாக கழுவி துடைத்து சிறிது எண்ணை தடவி பளபளப்பாக வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே நமக்கு வாங்கும் ஆவல ஏற்படும்.அதைப்போல நமது புகைப்படத்தில் சிறிது மேடுபள்ளங்கள் இருந்தாலும் சரிசெய்து முகத்தை மழமழப்பாக மாற்றிவிடும். இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 4 எம்.பிக்குள் உள்ளது.பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.ஒரு முறை கம்யுட்டரை ரீ - ஸ்டார்ட் செய்துகொள்ளவும். பின்னர் நீங்கள் உங்கள் போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள்.தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
இப்போது Filter தேர்வு செய்து அதில் Imagenomic -Portrature தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.இப்போது உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் நிபுணராக இருந்தால் இதில் உள்ள அட்ஜஸ்ட் மென்ட்டை தேவையான அளவுவைத்துக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் இதில் இடதுபக்கம் உள்ள Skin Tones  Mask எதிரில் உள்ள Auto மட்டும் தேர்வு செய்து வலதுபக்கம் உள்ள O.K.
மட்டும் கொடுங்கள்.
நொடியில் உங்கள் படம் அழகாக மாறிவிடும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
உங்கள் ஓப்பிட்டு பார்வைக்காக இரண்டுபடங்களை ஒன்றாக கீழே பதிவிட்டுள்ளேன்.-வித்தியாசத்தைப் பாருங்கள்.
நண்பர் திரு.ஆ.ஞர்னசேகரன் அவர்கள் இந்த சாப்ட்வேர் உபயோகித்து பதிவிட்டுள்ள புகைப்படங்களை காண இங்கு கிளிக் செய்யவும்.
இவரைப்போல நண்பர் பிரியமுடன் வசந்த் அவர்களும் அவரின் பதிவில் போட்டோக்களை போட்டுள்ளார். அவர் பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-தமிழிஷ்.தமிழ்10.மற்றும் திரட்டியில் பதிவுகளை இணைக்க

சமீபத்தில் நண்பர் ஒருவருடைய பதிவினை பார்த்தேன். நன்றாக இருந்தது.அவரின் பதிவுகள் எந்த ஒரு திரட்டியிலும் இணைக்கப்படவில்லை.ஏன் என்று கேட்டதற்கு திரட்டிகளில் இணைப்பது பற்றி சரியாக தெரியவில்லை என்று சொன்னார். புதியதாக பதிவுகள் எழுதுபவர்களுக்கு இது பயன்படுமே என்று இங்கு மூன்றுதிரட்டிகளில் எப்படி நமது பதிவுகளை இணைப்பது பற்றி பதிவிட்டுள்ளேன்.முதலில் நீங்கள் தமிழிஷ் தளம் திறக்க இங்கு கிளிக் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும். .
அதில் வலதுபக்க மூலையில் Home.Login.Register என இருக்கும் அதில்  Register என்பதை கிளிக் செய்யவும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பெயர், இ-மெயில முகவரி,பாஸ்வேர்ட் கொடுத்து வேர்ட்வெரிபிகேஷன் ஆகியவற்றை புர்த்தி செய்துI agree என்பதில் டிக் மார்க் செய்து ஓ.கே. கொடுங்கள். 
உங்கள் இ-மெயிலுக்கு அவர்களிடம் இருந்து மெயில வந்திருக்கும். இப்போது மீண்டும் தமிழிஷ் தளத்தை திறந்துகொள்ளுங்கள். இப்போது இந்த வலது பக்க விளம்பரம் கீழே தமிழ்இடுகைகளை இணைக்க என்பதனை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் URL என்கின்ற கட்டத்தில் உங்கள் பதிவின் URL முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.( சுலபமான வழி - உங்கள் URL முகவரியை காப்பி - பேஸ்ட் செய்வது)
இப்போது உங்களுக்கு அடுத்த நிலை திறக்கும்.அதில் Story URL  என்பதில் உங்கள் பதிவின் விவரம் இருக்கும். அதற்கு கீழே உள்ள பிரிவுகளில் உங்கள் பதிவு எந்த சம்பந்தமானதோ அதை தேர்வு செய்யுங்கள்.( தொழில்நுட்பம்.கவிதை. சமையல். புகைப்படம். வீடியோ என...)
இப்போது இடுகையில் தலைப்பில் உங்கள் இடுகைக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்களோ அந்த பெயரையே வையுங்கள.அடுத்துள்ள விளக்கத்தில உங்கள் இடுகையை பற்றிய விளக்கம் அளியுங்கள். (விளக்கம் குறைவானதாகவும் -படிக்கும் ஆவலை துாண்டுவதாகவும் இருக்க வேண்டும்) அடுத்து இடுகை தொடர்பான அடையாளம். அதில் உங்கள் இடுகையின் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். புகைப்படம் ஏதும் இல்லையென்றால் உங்கள் கணிணியில் இருந்தே புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இறுதியாக Submit கொடுங்கள்.
உங்கள் இடுகை தொடரும் .இடுகைகள் பக்கத்தில இருப்பதை காணலாம்.உங்கள் பதிவுகள் நன்றாக இருந்து அதிக ஒட்டுக்கள் வாங்கும் பட்சத்தில் அது பிரபல இடுகைக்கு வரும். அதிலும் அதிக ஓட்டுக்கள் வாங்கினால் முன்ணனி பக்கத்திற்கு வரும்.
சரி..இப்போது தமிழ்10 ல் பதிவுகள் இணைப்பது பற்றி பார்க்கலாம். நீங்கள் தமிழ்10 திறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் திறக்கும்.
இதிலேயும் தளத்தில் இணைய கிளிக் செய்து உங்கள் பெயர் - இமெயில முகவரி கொடுத்து பதிவு செய்யவும். இப்போது பதிவை இணைக்க கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ வரும் அதில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட்கொடுத்து உள்ளே நுழையவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பதிவி்ன் முகவரியை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் அதில் உங்கள் பதிவின புகைப்டத்தின் URL ( நமது பதிவின் புகைப்படத்தை தேர்வு செய்து கிளிக் செய்ய அதில் Copy Image URL என வரும் ) அதை இங்கு பேஸட் செய்யவும்.
அதற்கு அடுத்துள்ள இடுகைப்பற்றிய விவரம். பிரிவு, விளக்கம் ஆகியவற்றை முறையே பதிவு செய்யுங்கள். இறுதியாக ஒ.கே. தாருங்கள். 
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முன்னோட்டம் பார்த்துவிட்டு திருத்தங்கள் இருந்தால் செய்துவிட்டு சமர்ப்பி கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான் உங்கள் பதிவு தமிழ்10 வந்திருக்கும்.அடுத்ததாக திரட்டியில் பதிவினை இணைப்பதை பார்க்கலாம்.திரட்டியில் பதிவை இணைக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
அதில் புதிய பதிவை சேர்க்க கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில முதலில் உங்கள் பதிவின் தலைப்பு - பதிவின் முகவரி (URL ADDRESS)-உங்கள் இ-மெயில முகவரி கொடுத்து வேரட்வெரிபிகேஷனை புர்த்தி செய்து அனுப்புக கிளிக் செய்யுங்கள்.
உங்கள் பதிவு நேரடி பதிவுகளில் வந்திருப்பதை காணலாம்.மற்றவற்றை விட திரட்டியில் பதிவிடுவது மிக சுலபம் ஆக இருக்கும். இதை நீங்கள் பதிவிடும்போதே அறிந்துகொள்ளலாம் உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் திரட்டியே பரிந்துரை செய்து அவர்களுடைய திரட்டியில் தானே சேர்ந்துவிடும்.(எனது பதிவுகள் அவ்வாறு சேர்ந்துவிடுகின்றது) நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்த பதிவும் வந்துள்ளது்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள.
 நமது பதிவர்கள் - அவர்களின் உறவுகள் ஆகியவர்களின் பிறந்த நாள் - திருமணநாள் பற்றி வாழ்த்தலாம்வாங்க  என்கின்ற இடுகையை வெளியிட்டுவருகின்றேன். அந்த இடுகைக்கு என்று தனியே திரட்டியில் இடம் ஓதுக்கி வாழ்ததுகளில் திரு. வெங்கடேஷ் அவர்களும் பங்கு ஏற்று உள்ளார்.கீழே உள்ள விண்டோவினை பாருஙகள்.எனது சார்பாகவும் நமது பதிவர்கள் சார்பாகவும் அவருக்கு நன்றியை தெரிவித்துககொள்கின்றேன்.இந்த பதிவை.பயன்படுத்தி பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.அதைப்போல் இதில ஒட்டுப்பட்டையை கொண்டுவருவது எப்படி என்று நீங்கள் விருப்பபட்டால் பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பைல்களை நொடியில் பிடிஎப்பாக மாற்ற

நம்மிடம் உள்ள பைல்களை பிடிஎப் ஆக மாற்ற பல பிடிஎப் சாப்ட்வேர்கள் இருந்தாலும் இந்த பிடிஎப் சாப்ட்வேர் அளவில் குறைவானதாகவும் உபயோகிக்க எளிதாகவும் உள்ளது. 4 எம்.பி. அளவில் இலவச சாப்ட்வேராகவும் உள்ளது. சரி...இதை எப்படி பயன்படுத்துவது...அதற்கு முன் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் create க்கு பக்கத்தில் உள்ள கட்டத்தை கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள டாக்குமெண்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து உள்ள create கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எங்கு பைலை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக ஓ.கே. தாருங்கள். அவ்வளவு தான் உங்கள் பிடிஎப் பைல ரெடி. இதைப்போல நீங்கள் பிரிண்ட் வழியே சென்றும் டாக்குமெண்டை பிடிஎப்பாக மாற்றலாம். கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
dopdf தேர்வு செய்து ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பிளாக்கில் புகைப்படத்திலிருந்து லிங்க் கொடுக்கசில பதிவுகளில் பார்த்திருக்கலாம். அதில் வரும் புகைப்படங்களின் மீது நாம் கர்சரை வைத்து கிளிக் செய்யும் சமயம் அந்த புகைப்படம் சம்பந்தமான இணையதளம் செலலும். அதை எவ்வாறு நமது பிளாக்கில் கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் தேவைப்படும் புகைப்படத்தை பிளாக்கில் கொண்டுவந்துவிடுங்கள்.
பின்னர் HTML ஐ திருத்து கிளிக் செய்துகொள்ளுங்கள்.
புகைப்படத்திற்கான இமெஜ் முகவரி இருக்கும் . அதற்கு முன்னர் கீழ்கண்ட வரிகளை சேர்த்து விடுங்கள்.
மேலே உள்ள பாக்ஸில் திருக்கழுக்குன்றம் பிளாக் ஸ்பாட் என்கின்ற இடத்தில் உங்களுக்கு தேவையான லிங்க் முகவரியை நிரப்பிக்கொள்ளுங்கள். அதைப்போல் புகைப்படம் முடியும் இடத்தில் படத்தில் உள்ள கடைசி வரிகளை தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.  கீழே உள்ள புகைபடத்தை நீங்கள் கிளிக் செய்தால் அது திருக்கழுக்குன்றம் பிளாக்குக்கு செல்லும்.
அதைப்போல கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்தால் அது வாழ்த்தலாம் வாங்க பிளாக்குக்கு செல்லும்.

து சற்று குழப்பமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை பயன்படுத்திப்பாருங்கள். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப்-பேட்டர்ன் ஸ்டாம்ப் டூல் உபயோகிக்க

போட்டோஷாப்பில் இன்று Pattern Stamp Tool பற்றி பார்க்கலாம். இதுவும் பிரஷ் டூல்போல்தான். ஆனால் அதைவிட சற்று வித்தியாசமானது. இந்த டூலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முதலில பேட்டர்ன் ஆக வரகூடிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.  
இதில் கதாநாயகி முகம் மட்டும் மார்யு டூல் மூலம் கட் செய்து தனியே சேமித்தேன்.

இப்போது Edit கிளிக் செய்து அதில் உள்ள Define Pattern  கிளிக் செய்தேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பேட்டரனுக்கு விருப்பப்பட்டால் பெயர் கொடுக்கலாம்.
இப்போது டூல் மெனுவில் Pattern Stamp Tool தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மேலே Pattern Box ல் நீங்கள் Pattern ஆக தேர்வு செய்த புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள்.
Patern  Tool கிளிக் செய்தபின பிரஷ்ஷை தேவையான அளவுக்கு வைத்துக்கொண்டு புகைப்படத்தில் விரும்பிய இடத்தில மவுஸால் தேயுங்கள். இப்போது உங்களுக்கு புகைப்படத்தில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் வர ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்
இதைப்போலவே நீங்கள் PSD படங்களில் உள்ள லேயர்களை தனித்தனியே பேட்டன் இமேஜாக மாற்றிக்கொண்டு விதவிதமான டிசைன்கள் செய்யலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பதிவுகளில் லிங்க் ஏற்படுத்த


சிலர் ஒன்றே ஓன்று கண்ணே கண்ணுனு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு வைத்து சமாளிப்பார்கள்.நேரமும் ஆவலும் இருப்பவர்கள் மூன்றுக்கு மேலும் வைத்திருப்பார்கள்...இருங்க இருங்க...அதற்குள் தப்பாக நினைக்காதீர்கள்.வலைப்பதிவுகளை சொன்னேன். ஒருவரே இரண்டு வலைப்பதிவுகளை எழுதும் சமயம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்காது. அவரின் சுயவிவரம் சென்றோ - அல்லது -அவரின மற்ற பதிவின் லிங்கை தட்டச்சு செய்தோதான் செல்லவேண்டும். அதனை தவிர்த்து நமது பதிவுகளில் ஒன்றுக்கொண்று லிங்க கொடுத்துவிட்டால் நமது பதிவினை படிக்கும் நண்பர்கள் நமது ஒரு பதிவில் இருந்து மற்றொரு பதிவிற்கு சுலபமாக செல்லலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். அதில எனது பதிவில் திருக்கழுக்குன்றம் - வாழ்த்தலாம் வாங்க -என இரண்டு பதிவிகளின் லிங்க கொடுத்துள்ளதை கவனியுங்கள்.இனி அதை பதிவில் எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.
பிளாக்கில் டாஷ்போர்ட் - வடிவமைப்பு -கேஜட்டை சேர் - ஓடை என வரிசையாக தேர்வு செய்துகொள்ளுங்கள்.ஆங்கிலத்தில் முறையே Dashboard - Design-Add a gadget -Feed என தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
ஓடை யை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உங்கள் வலைப்பதிவின் முகவரியை ஃபீட் URL என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்யவும். முகவரிக்கு அடுத்து atom.xml என தட்டச்சு செய்யவும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட வி்ண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய எத்தனை பதிவுகள் வரவேண்டுமோ அந்த எண்ணிக்கையை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு அதிலேயே முன்னோட்டம் காணலாம்.
நான் 1 பதிவினை சேர்த்துள்ளேன். அதைப்போல் இணைப்புகளை புதிய சாளரத்தில் திறக்கவும் என்பதின் எதிரில் உள்ள பட்டனை தேர்வு செய்துள்ளேன். இதனால் என்ன பயன் என்றால் புதிய விண்டோவில் நமது பதிவானது திறக்கும்.
இறுதியாக சேமி கிளிக் செய்து பின் வெளியேறவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தில் பார்த்தீர்களே யானால் நமது புதிய வலைப்பக்கத்தின் லிங்க அமர்நதிருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-பிடிஎப்பில் வாட்டர் மார்க் வரவழைக்க

வேர்டில், எக்ஸெல்லில்,புகைப்படங்களில் வாட்டர்மார்க் பார்த்திருக்கின்றோம். இன்று பிடிஎப் பைல்களில் வாட்டர்மார்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.900 கேபி அளவுள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறககம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள PDF File  எதிரில் உள்ள Open கட்டத்தில் உங்கள் பிடிஎப் பைல் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள விண்டோ பாக்ஸில் நீங்கள் வாட்டர்மார்க்காக பதிவு செய்ய விரும்பும் வார்த்தைகளை தட்டச்சு செய்யவும்.அதற்கு கீழே உள்ள அங்கிள் என்பதில் வார்த்தையின் கோணத்தை தேர்வு செய்யுங்கள்.அதைப்போல அடுத்துள்ள பெட்டிகளில் உள்ளவாறு பாண்ட் அளவு -நிறம் - அளவு ஆகிய அனைத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியாக சேமிக்கும் இடததையும் தேர்வு செய்து ஒ.கே.தாருங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறமானது கிரே கலரில் இருந்தால் கண்ணை உறுத்தாது.பதிவிற்காக நான் சிகப்பு நிறத்தை உபயோகித்துள்ளேன்.பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-குழந்தைகளுக்கான மேஜிக் போர்ட்

அந்த காலத்தில் சிலேட் கொடுத்து கையில் பலப்பமும் கொடுத்து எழுத சொல்லுவார்கள்.வேண்டியதை கிறுக்கி தள்ளி அழித்து மீண்டும் எழுதுவோம். இந்த கம்யுட்டர் உலகத்தில அதைப்போலவே போர்ட்கொடுதது வண்ண வண்ண நிறங்களும் கொடுத்து பிரஷ் அளவினையும் கொடுத்துள்ளார்கள். இந்த நவீன சிலேட் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.4 எம்.பி. கொள்ளளவு தான் இது.இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
உடன் இந்த சிறிய வி்ண்டோவும் ஓப்பன் ஆகும். இதில பென்சில் -ரப்பர் - டஸ்டர் -இருக்கும் . நாம் பணி செய்ததை சேமிக்கும் வசதியும் உண்டு. அதை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.இதில் 1 லிருந்து 18 வரை பிரஷ் அளவை கூட்ட குறைக்க முடியும்.அதைப்போல இதில் கலர் விண்டோ பக்கத்தில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக்செய்த வேண்டிய நிறங்களையும் தேர்வு செய்யலாம்.தேவையில்லையென்றலாம் மொத்தத்தையும் அழித்து விடலாம்.போர்ட் சுற்றி சின்ன சின்ன கார்டூன் பொம்மைகள் உள்ளது.
நாம் எழுதுவதற்கேற்ப அதுவும் அசையும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
சிறு குழந்தைகளுக்கு நன்கு பொழுது போகும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...